wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

‘இலைமறை காய் போல’ எனும் உவமைத்தொடரின் பொருளைக் குறிப்பிடவும்.

a)

துன்பத்தால் மனம் உருகுதல்

b)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

c)

எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

2.

‘அனலில் இட்ட மெழுகு போல’ எனும் உவமைத்தொடரின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

b)

துன்பத்தால் மனம் உருகுதல்

c)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

3.

‘குன்றின் மேலிட்ட விளக்குப் போல’ எனும் உவமைத்தொடரின் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.

a)

ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

b)

துன்பத்தால் மனம் உருகுதல்

c)

எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

4.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

பொருள் : ஆற்றல் வெளிப்படாமல் மறைந்திருத்தல்

a)

இலைமறை காய் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

5.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

பொருள் : துன்பத்தால் மனம் உருகுதல்

a)

இலைமறை காய் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

6.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக்கவும்.

பொருள் : எல்லாராலும் அறியப்பட்ட ஒருவரின் திறமை

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

இலைமறை காய் போல

7.

சரியான உவமைத்தொடரைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.

கயல்விழி தன் அண்ணன் விபத்தில் சிக்கிய செய்தியைக் கேட்டு…………………….துடித்தாள்.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

c)

இலைமறை காய் போல

8.

சரியான உவமைத்தொடரைக் கொண்டு வாக்கியத்தை நிறைவு செய்க.

லண்டன் அறிவியல் ஆராய்ச்சி விழாவில் பரிசு பெற்ற பின்னர்தான் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புகழ் ……………………….பிரகாசித்தது.

a)

இலைமறை காய் போல

b)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

c)

அனலில் இட்ட மெழுகு போல

9.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைக் குறிப்பிடவும்.


திருமதி. பிரமிளா சிறந்த பாடகி. அனைத்து வகையான பாடல்களையும் இசையுணர்வோடு நன்கு பாடுவார். இருப்பினும், சபையோர் முன்னிலையில் பாடுவதில் தயக்கம் காட்டுவார். அவரின் தயக்கம் தன் சுய ஆற்றலை பிறர் முன்னிலையில் வெளிக்கொணராமல் இன்னும் மறைந்து உள்ளது.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

இலைமறை காய் போல

10.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைக் குறிப்பிடவும்.


நான்கு தலைமுறைகளுக்கும் ஏற்றவாறு திரைப்படப் பாடல் இயற்றிய கவிஞர் வாலியின் திறமை எல்லாராலும் பாராட்டப்பட்டது.

a)

குன்றின் மேலிட்ட விளக்குப் போல

b)

அனலில் இட்ட மெழுகு போல

c)

இலைமறை காய் போல