wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வினைச்சொல்

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழ்காண்பவை ................................... ஆகும்.


போனாள்

பேசினார்

செய்தது

தின்றனர்

ஓடிவான்

a)

வினைச்சொல்

b)

இடைச்சொல்

c)

உரிச்சொல்

d)

பெயர்ச்சொல்

2.

கீழ்காணும் வாக்கியங்களுள் இறந்தகால வினைச்சொல்லை ஏற்றுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நாளை பள்ளிக்கு வர மாட்டேன் என நந்தா ராமுவிடம் கூறினான்.

b)

இந்து அடுத்த வாரம் வெளிநாட்டிற்குச் செல்லவிருக்கிறாள்.

c)

அம்மா கோவிலுக்குச் சென்று இறைவனைத் தரிசனம் செய்கிறார்.

d)

மலர் தன்னுடைய துணிகளைத் துவைத்து காயப் போடுவாள்

3.

கீழ்காண்பனவற்றுள் சரியான கூற்றைத் தெரிவு செய்க.

a)

அகரவீற்று, இகரவீற்று வினையெச்சங்களில் வலிமிகாது.

b)

ஆய், போய் வினையெச்சம் பின் வலிமிகாது.

c)

பாடி பார்த்தான் என்பது அகரவீற்று வினையெச்சம்.

d)

ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம் பின் வலிமிகும்.

4.

கீழ்காண்பனவற்றுள் எது சரியான இணை அல்ல?

a)

சிரித்தது - இறந்தகாலம்

b)

எழுதுவான் - எதிர்காலம்

c)

ஒழிந்தார் - எதிர்காலம்

d)

பேசுகிறாள் - நிகழ்காலம்

5.

பின்வருவனவற்றுள் சரியாக வலிமிகாத விடையைத் தெரிவு செய்க.

a)

ஆடிப் பாடினான்

b)

வந்ததாய்க் கூறு

c)

கேட்கா பாடம்

d)

பேசிப் பார்த்தான்

6.

வினையெச்ச சொற்களை ஏற்று வந்துள்ள வாக்கியங்களைத் தெரிவு செய்க.

i. மாறன் படித்து முடித்து ராணுவத்திற்குச் சென்றுவிடுவான்.

ii. ராமு சரசுவின் பிறந்தநாளுக்கு அழகிய பரிசு வாங்கிக் கொடுத்தான்.

iii. அல்லியின் தந்தை பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றினார்.

iv. அரசு மல்லிகாவுக்கு காதல் கடிதம் எழுதிக் கொடுத்தான்.

a)

i,ii,iii

b)

i,iii,iv

c)

ii,iii,iv

d)

i,ii,iv

7.

கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ....................... ஆகும்.


உடல் நலம் சரியில்லாத தன் தாயாருக்கு மாலதி கடைக்குச் சென்று உணவு வாங்கி கொடுத்தாள்.

a)

வினையெச்சம்

b)

பெயரெச்சம்

c)

வினைமுற்று

d)

எழுவாய்

8.

கீழ்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல்லுக்கு ஏற்ற இலக்கணக் கூறுகளைத் தெரிவு செய்க.


அம்மா சமைத்து வைத்த அனைத்து உணவுகளையும் மாலினி உண்டு மகிழ்ந்தாள்.

a)

வினைமுற்று

b)

வினையெச்சம்

c)

பெயரெச்சம்

d)

பெயர்ச்சொல்

9.

கீழ்காணும் வினைமுற்று காட்டும் சரியான விடையைத் தெரிவு செய்க.


பார்க்கின்றான்


i. அஃறிணை

ii. ஆண்பால்

iii. நிகழ்காலம்

iv. படர்க்கை

a)

i,ii,iii

b)

i,ii,iv

c)

ii,iii,iv

d)

i,iii,iv

10.

கீழ்காணும் வாக்கியத்தில் காணப்படும் வினையெச்ச சொல்லை மட்டும் தெரிவு செய்க.


மாலினியின் திருமண நிகழ்ச்சியில் அனைவரும்

ஆடிப் பாடி மழிந்தனர்.

a)

அனைவரும்

b)

ஆடிப்

c)

திருமண

d)

மாலினி