NEW
Font size
Worksheetsஒலி வேறுபாட்டுச் சொற்கள்
Total questions: 15
Worksheet time: 8mins
ஒவ்வொரு தீபாவளியின் போது தேன்மொழியின் குடும்பத்தினர் முதியோர் இல்லத்திற்குச் செல்வார்கள். அவர்கள் அங்குள்ள வயதானவர்களுக்குத் தங்களால் முடிந்த _________ செய்வார்கள்
அரத்தை
அறத்தை
மீனவன் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்தான். அவன் தான் பிடித்த மீன்களை _________ உள்ள சந்தையில் விற்றான்.
அக்கறையில்
அக்கரையில்
விக்ரம் கையில் நிறைய பொருள்களைத் தூக்கிக் கொண்டிருந்தான். அப்போது ஏதோ ஒன்று அவன் கையை _______________________விட்டதால் அவன் கத்தினான்.
கீரி
கீறி
குளிர்பானங்கள் உடலுக்கு நன்மை தராது. அதனால், அம்மா அதிகமாக நீர் _______________ என்றார்.
அருந்து
அறுந்து
சில மாதங்களாக மழை பெய்யவில்லை. அதனால், நீர் நிறைந்திருந்த _______________ வறண்டு போய்விட்டது.
ஏரி
ஏறி
திடீரென்று _________ பொழிந்ததால் ஆர்ச்சட்
சாலையில் வெள்ளம் ஏற்பட்டது.
மாரி
மாறி
தாத்தா சாலையில் ஒரு பிச்சைக்காரியைக் கண்டார். அவளுடைய பரிதாப நிலையைக்
கண்ட அவர், மனம் _________ அவளுக்குப் பணம் தந்தார்.
இறங்கி
இரங்கி
என் அத்தையின் திருமணத்திற்காக, இந்தியாவின் காஞ்சிபுரத்திலிருந்து சிறப்பாக நெய்யப்பட்ட ____________ புடவை ஒன்றை வாங்கி வந்துள்ளார் என் தாத்தா.
கூறை
கூரை
கழுகு வானத்திலிருந்து __________ வந்து மீனைக் கொத்திச் சென்றது.
பறந்து
பரந்து
மாலாவின் பிறந்தநாளுக்கு அப்பா அவள் பெயர் __________ வளையலை
வாங்கித் தந்தார்.
பொரித்த
பொறித்த
பறவைக்குஞ்சுகளுக்குப் பசி ஏற்பட்டது. அவற்றின் பசியைப் போக்கத் தாய்ப்பறவை _______________ தேடி அலைந்தது.
இறை
இரை
கடந்த இரண்டு நாள்களாக வீட்டுப்பாடத்தைச் செய்யாமல்____________ வைத்தேன். அதனால் ஆசிரியர் என்னைத் திட்டினார்.
மரைத்து
மறைத்து
கடந்த இரண்டு நாள்களாக வீட்டுப்பாடத்தைச் செய்யாமல்____________ வைத்தேன். அதனால் ஆசிரியர் என்னைத் திட்டினார்.
மரைத்து
மறைத்து
முல்லா இரவு நேரத்தில் அரண்மனைக்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருந்தது. அதனால் அவன்_________ மீது பயணம் செய்ய முடிவு செய்தான் .
பறியின்
பரியின்
“பாலு, நீ சத்துள்ள உணவு சாப்பிடுவது அவசியம். அப்போது தான் நீ _________ மிகுந்தவனாக வளர்வாய்!” என்றார் அம்மா.
கறுத்து
கருத்து
