NEW
Font size
Worksheetsஒலி வேறுபாடு - பயிற்சி 2
Total questions: 20
Worksheet time: 12mins
இவ்வருட இறுதி ஆண்டுத் தேர்வில் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று ராமு தீர்மானித்தான். அதனால், அவன் அதிக ________________ எடுத்துத் தன் பள்ளிப் பாடங்களைப் படிக்கிறான்.
அக்கரை
அக்கறை
பயங்கரவாதத் தாக்குதலின்போது நிறைய மக்கள் ______________ இன்றி தவித்தார்கள். அவ்வேளையில் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் அவர்களுக்கு உதவிக் கரம் நீட்டினார்கள்.
ஊண்
ஊன்
வினோத் ஒரு கோபக்காரச் சிறுவன். அவன் அக்காவின் மீது கோபப்படும்போதெல்லாம் அவர் _______________ போவார்.
பொருத்து
பொறுத்து
பள்ளி விடுமுறை அன்று குமுதா பூங்காவில் மிதிவண்டி ஓட்டச் சென்றாள். அங்கே பறந்துகொண்டிருந்த ______________ ஒன்று அவளைக் கொட்டியது.
குளவி
குழவி
மாணவர்கள் பள்ளி உணவகத்தில் குளிர்பானம் ______________
சென்றனர். அவர்கள் அதை வாங்க வரிசையில் நின்றனர்.
அருந்த
அறுந்த
என் _____________ உயர்ந்த மடிக்கணினி கீழே விழுந்து உடைந்து விட்டது. அதைப் பார்த்ததும் எனக்கு அழுகை வந்தது.
விளை
விலை
அரசவையில் திருடன் ஒருவன் அகப்பட்டான். மன்னர்
அவனைச் சிறையில் அடைக்கும்படி _____________ இட்டடார்.
ஆனை
ஆணை
ஒரு பெண்மணியின் பணப்பையைத் திருடிய திருடனைக் காவலர்கள் கையும் களவுமாகப் பிடித்தார்கள். பிறகு அவர்கள் அவன் கையில் ______________ மாட்டினர்.
விலங்கு
விளங்கு
கணேஷ் வெளியூரில் படித்துவிட்டு நேற்றுதான் சிங்கப்பூருக்குத் திரும்பி வந்தான். அவனைக் கண்ட பெற்றோர் அவனைக் கட்டி _________________ முத்தமிட்டனர்.
அனைத்து
அணைத்து
சிங்கப்பூரில் இதய நோய் மற்றும் நீரழிவு நோய்
போன்றவை உயிர் _______________ நோய்களாக
இருக்கின்றன. இவற்றைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கொல்லி
கொள்ளி
அம்மா எனக்குப் பிடித்த உணவைச் சமைப்பதாகக் கூறினார். அவர் சமைத்த கோழி ____________ சுவையாக இருந்தது.
குளம்பு
குழம்பு
நான் படித்துக்கொண்டிருந்தபோது என் வீட்டுச் சன்னலில் காற்று பலமாக வீசியது. அதனால் அம்மா ___________ போட்டார்.
திறையை
திரையை
வள்ளி அரையாண்டுத் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறுவாள் என்று நம்பினாள். ஆனால், கணக்குத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறாததால் __________ தளர்ந்தாள்.
மணம்
மனம்
ராமு __________ படிந்த சீருடையுடன் பள்ளிக்கு வந்ததைத் தலைமையாசிரியர் கண்டார். அவர், ``ராமு, நீ தினமும் சுத்தமான சீருடையை அணி!’’ என்று கோபத்துடன் கூறினார்.
கறை
கரை
புதிய தமிழ்ப்படம் ஒன்று நேற்று வெளியானது. அதனால்,
ரஞ்சினியும் அவளது தம்பியும் அருகிலிருந்த ______________
அரங்கிற்குச் சென்றனர்.
திரை
திறை
எனக்கு மிருகங்களின் மீது சவாரி செய்ய ஆசை. அதனால், என் அப்பா என்னை ______________ மீது ஏறி சவாரி செய்ய அனுமதி கொடுத்தார்.
பரி
பறி
அரசர் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஓர் அழகிய மானைக் கொல்ல அவர் _____________ எய்தார்.
பாணத்தை
பானத்தை
நமது உடலுறுப்புகளிலேயே மிகவும் சிறந்தது எனப் போற்றப்படுவது ______________. நாம் தூங்கும் போதும், இந்த உறுப்பு சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது.
மூலை
மூளை
எனக்குப் பிடிக்காத நண்பர்கள் பலர் என் வகுப்பில் உண்டு. அவர்கள் என்னைப் பற்றி எல்லாரிடமும் ______________ சொல்லுவார்கள்.
கோல்
கோள்
மாணவர்கள் ஆசிரியருக்காக ஒரு பேனா வாங்கினார்கள். அவர்கள்
ஆசிரியரின் பெயரை அதில் ______________ கொடுத்தார்கள்.
பொரித்து
பொறித்து
