NEW
Font size
WorksheetsPTA-2
Total questions: 14
Worksheet time: 5mins
உலகத்தின் எந்தப் பகுதி டாலர் அரசியல் ஏகாதிபத்தியத்தை விரும்பவில்லை?
அ.ஐரோப்பா
ஆ. லத்தீன் அமெரிக்கா
இ. இந்தியா
ஈ. சீனா
கூற்று: அமெரிக்காவின் மார்ஷல் திட்டம், போரில் பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளின் மறுநிர்மாணத்திற்காக முன்வைக்கப்பட்டது.
காரணம்: அமெரிக்க நாடு அத்திட்டத்தின் மூலம் மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கின் கீழ் கொண்டுவர நினைத்தது.
அ. கூற்று காரணம் இரண்டுமே சரி, ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
ஆ. கூற்றும், காரணமும் தவறானவை
இ. கூற்று காரணம் இரண்டுமே சரி, காரணம் கூற்றை துல்லியமாக விளக்குகிறது
ஈ. கூற்று தவறு,ஆனால் காரணம் சரி.
சத்யார்த்த பிரகாஷ் எனும் நூலின் ஆசிரியர் யார்?
அ. தயானந்த சரஸ்வதி
ஆ. வைகுண்ட சுவாமி
இ. அன்னி பெசன்ட்
ஈ. சுவாமி சிரத்தானந்தா
I. பாளையக்காரர் முறை காகத்தீய பேரரசின் நடைமுறையில் இருந்தது.
ii. கான்சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார்.
iii. கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசப்கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764ல் தூக்கிலிடப்பட்டார்.
iv. ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படை பிரிவுகளில் ஒன்றை வழிநடத்தினார்.
அ.(I), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி.
ஆ.(I),(ii) மற்றும்( iii) ஆகியவை சரி
இ.(iii) மற்றும் ( iv) மட்டும் சரி.
ஈ.(i) மற்றும்(iv) மட்டும் சரி.
ஃபீனிக்ஸ் குடியிருப்பு யாரால் நிறுவப்பட்டது?
அ. காந்தியடிகள்
ஆ. ஜான் ரஸ்கின்
இ. டால்ஸ்டாய்
ஈ. தாரோ
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்.
அ. ஊட்டி
ஆ. ஆனைமுடி
இ. கொடைக்கானல்
ஈ. ஜின்டாகடா
இந்தியாவின் தங்க இழைப்பயிர் என அழைக்கப்படுவது
அ. பருத்தி
ஆ. கோதுமை
இ. சணல்
ஈ. புகையிலை
இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம்.
அ. குஜராத்
ஆ. ராஜஸ்தான்
இ. மகாராஷ்டிரம்
ஈ. தமிழ்நாடு
கீழ்க்கண்டவற்றில் அவை ஹெலிகாப்டருடன் தொடர்புடையது.
அ. ஏர் இந்தியா
ஆ. இந்தியன் ஏர்லைன்ஸ்
இ. வாயு தூத்
ஈ. பவன் ஹான்ஸ்
தமிழ்நாட்டின் நெசவுத் தலைநகரம் எது?
அ. கரூர்
ஆ. கோயம்புத்தூர்
இ. திருப்பூர்
ஈ. ஈரோடு
மாறுபட்ட ஒன்றை கண்டுபடி.
அ. சமத்துவ உரிமை
ஆ. சுரண்டலுக்கெதிரான உரிமை
இ. சொத்துரிமை
ஈ. கல்வி மற்றும் கலாச்சார உரிமை
மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுபவர் யார்?
அ. குடியரசுத் தலைவர்
ஆ. ஆளுநர்
இ. பிரதமர்
ஈ. முதலமைச்சர்
நிகர உள்நாட்டு உற்பத்தி என்பது
அ. மொத்த உள்நாட்டு உற்பத்தி -- தேய்மானம்
ஆ. மொத்த நாட்டு உற்பத்தி-- தேய்மானம்
இ. தனிப்பட்ட வருமானம்-- நேர்முக வரி
ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை
தவறான கூற்றை/கூற்றுகளைத் தேர்ந்தெடுக்கவும்.
(I) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின் பற்றாக்குறை கருப்பு பணத்திற்கு மூலக் காரணமாகும்.
ii) கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழில்தறையாகும்.
iii) கருப்புப்பணம் உருவாவதற்கு கடத்தல் ஒரு முக்கிய மூலமாகும்.
iv) வரி விகிதம் குறைவாக இருக்கும்போது அதிக கருப்புப்பணம் தோன்றுகிறது.
அ. (i) மற்றும் (ii)
ஆ. (iv)
இ.( i)
ஈ.( ii) மற்றும்( iii)
