WorksheetsPTA-6
Total questions: 14
Worksheet time: 5mins
1. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம் எனக் கூறியவர்.
அ. லெனின்
ஆ. மார்க்ஸ்
இ. சன் யாட் சென்
ஈ. மா சே துங்
2. சீனாவில் மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு எப்போது நடைபெற்றது?
அ. செப்டம்பர் 1959
ஆ. செப்டம்பர் 1948
இ. செப்டம்பர் 1954
ஈ. செப்டம்பர் 1949
3.(i) பிரார்த்தனை சமாஜம் டாக்டர் ஆத்மாராம் பாண்டுரங்கால் நிறுவப்பட்டது.
(ii)இந்த சமாஜம் அனைத்துச் சாதியினரும் பங்கேற்கும் சமபந்திகளையும் சாதிக் கலப்பு திருமணங்களையும் ஊக்குவித்தது.
(iii)ஜோதிபா பூலே ஆண்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றினார்.
(iv )பிரார்த்தனை சமாஜம் பஞ்சாபைப் பிறப்பிடமாகக் கொண்டது.
அ.(i)சரி
ஆ.( ii)சரி
இ.( I) (ii) ஆகியன சரி
ஈ. (iii) (iv) ஆகியன சரி
4. காங்கிரஸ் சைமன் குழுவை புறக்கணித்த காரணம்.
1.அது வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்தது
2. அக்குழுவில் ஒரு இந்தியர் கூட இடம் பெறவில்லை.
3.அது சட்டப்பூர்வ ஆணைமாகும்.
4.அது 1919 ஆம் ஆண்டு சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்டது.
அ. 1மற்றும் 2
ஆ.3 மற்றும் 4
இ. 1 மற்றும் 3
ஈ.2 மற்றும் 4
5. கூற்று:முதல் உலகப்போர் நடந்து கொண்டிருந்த போது ஆங்கில அரசாங்கம் இந்தியாவில் போருக்குப் பின்னர் பிரதிநித்துவ நிறுவனங்களை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலனை செய்து கொண்டிருந்தது.
காரணம்: 1920இல் இரட்டையாட்சியானது ஒரு அரசு முறையாக மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அ. கூற்று சரி, ஆனால் காரணம் சரியானதல்ல
ஆ. கூற்று, காரணம் ஆகிய இரண்டுமே தவறு
இ. கூற்று, காரணம் இரண்டுமே சரி
ஈ. கூற்று தவறு, அது காரணத்துடன் பொருந்தவில்லை
6. இந்தியாவிற்கு சொந்தமான இரண்டு தீவுகள் எவை?
அ. அந்தமான் நிகோபார்
ஆ. அந்தமான் நிகோபார் மற்றும் லட்சத்தீவுகள்
இ. மாலத்தீவு மற்றும் நிகோபார்
ஈ. இலங்கை மற்றும் அந்தமான்
7. உலகில் மிக அதிக அளவு மழை பெறும் பகுதியான மௌசின்ராம் எங்கு அமைந்துள்ளது?
அ. இந்தியா
ஆ. நேபாளம்
இ. பூடான்
ஈ. வங்காளதேசம்
8. மனிதவள மேம்பாடு_______மூலம் கணக்கிடப்படுகிறது.
அ. மனித வளக் குறியீடு
ஆ. தனிநபர் குறியீடு
இ. மனிதவள மேம்பாட்டு குறியீடு
ஈ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம் (UNDP)
9. கீழ்க்கண்டவற்றுள் மண் அரிப்பினால் அதிக அளவு பாதிக்கப்பட்ட மாவட்டம்_______
அ. தேனி
ஆ. மதுரை
இ. தஞ்சாவூர்
ஈ. இராமநாதபுரம்
10. கரிசல் மண்_____ எனவும் அழைக்கப்படுகிறது.
அ. வறண்ட மண்
ஆ. உவர் மண்
இ. பருத்தி மண்
ஈ. மலை மண்
11. கீழ்க்காண்பவற்றில் ஒன்று அடிப்படை உரிமையை பயன்படுத்துவதற்கு உதாரணம் இல்லை.
அ. கர்நாடகாவிலிருந்து,கேரளா பண்ணைகளில் வேலையாட்கள் பணி செய்தல்
ஆ. கிறித்துவ சமய குழு, தொடர்ச்சியாகப் பள்ளிகளை அமைத்தல்.
இ. ஆண், பெண் இருபாலரும் அரசுப் பணிகளுக்கு சம ஊதியம் பெறுதல்
ஈ. பெற்றோர்களின் பூர்வீக சொத்துகள் அவர்களது பிள்ளைகளுக்குச்
செல்லுதல்
12. சபஹார் ஒப்பந்தம் எந்தெந்த நாடுகளுக்கிடையே கையெழுத்தானது.
அ. இந்தியா, பாகிஸ்தான் ,மற்றும் ஆப்கானிஸ்தான்
ஆ. இந்தியா, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான்
இ. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான்
ஈ. இந்தியா, ஈரான் மற்றும் பாகிஸ்தான்
13. பின்வரும் காரணங்களினால் இந்தியாவில் சேமிப்பு விகிதம் குறைவாக உள்ளது.
(I) குறைந்த தனிநபர் வருமானம்
(ii) மோசமான செயல்திறன் மற்றும் பொதுத்துறையின் குறைவான பங்களிப்பு
(iii) வீடுகள் துறையின் மோசமான பங்களிப்பு
(iv) கிராமப்புறத் துறையின் சேமிப்புத் திறனை முழுமையாக பயன்படுத்தாதது
அ.(I),(ii) மற்றும்(iv) சரியானவை
ஆ.(I),(ii) மற்றும் (iii) சரியானவை
இ.(I),(ii),(iii) மற்றும் (iv) சரியானவை
ஈ.(I),(iii) மற்றும் (iv) சரியானவை
14. தமிழ்நாடு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டம்_____இல் தொடங்கப்பட்டது.
அ. 1980
ஆ. 1975
இ. 1955
ஈ. 1985
