NEW
Font size
Worksheetsதமிழ் இலக்கண கேள்விகள் ஆண்டு 4- ஆக்கம் கி.உஷாநந்தினி
Total questions: 15
Worksheet time: 8mins
அகிலனின் பல் உடைந்தது.இந்த வாக்கியம் எந்த வேற்றுமை உருபை ஏற்றுள்ளது? *
முதலாம் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை
ஐந்தாம் வேற்றுமை
பூ+சோலை.சேர்த்தெழுதுக. *
பூச்சோலை
பூஞ்சோலை
பூசோலை
அண்ணனின் கண்ணாடிக் கோப்பையைத் தம்பி உடைத்து விட்டான்.___________ , அண்ணன் கோபமடைந்தார். *
அதனால்
இருப்பினும்
எனினும்
தவறாக வலிமிகுந்துள்ளச் சொற்களைத் தெரிவு செய்க
அதுத் தேவை
ஓடாக் குதிரை
அங்குச் செல்
கீழ்க்காணும் படம் எந்தப் பெயர்ச்சொல் வகையைச் சேர்ந்தது?
பொருட்பெயர்
சினைப்பெயர்
தொழிற்பெயர்
இவைகளில் எது தொழிற்பெயர்?
மருத்துவர்
ஓடுதல்
காவல் அதிகாரி
நகுலன் நாயைக் கண்டு பயந்து ஓடினான்.இந்த வாக்கியத்தின் வினைமுற்று எது? *
நகுலன்
பயந்து
ஓடினான்
நம் நாடு நீடூழி வாழி ! இது எவ்வகை வாக்கியம்? *
வினா வாக்கியம்
விழைவு வாக்கியம்
செய்தி வாக்கியம்
இப்படம் சேர்ந்த சரியான இனவெழுத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
ண்ண
ண்ட
ங்க
இப்படத்தின் சரியான பால் வகை எது?
ஒன்றன்பால்
பலர்பால்
பலவின்பால்
இவற்றுள் எது கிரந்த எழுத்துச் சொல்?
எஃகு
கஜம்
மலர்
பால் மொத்தம் எத்தனை வகைப்படும்?
2
4
5
உயிர்மெய்க் குறில் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
26
247
90
சரியான ஆண்பால்,பெண்பால் இணையைத் தெரிவு செய்க
குயவன்,குயவி
பாடகன்,பாடகை
மாணவன்,மாணவி
தன்மை,முன்னிலை,படர்க்கை ஆகிய மூன்று இடங்களையும் ஏற்று வந்துள்ள வாக்கியம் எது?
நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?
நான் உன் புத்தகத்தைச் செல்வியிடம் கொடுத்து விட்டேன்.
நான் ஏப்ரல் மாதத்தில் பிறந்தேன்.
