NEW
Font size
Worksheetsஅறிவியல் ஆண்டு 4 (SJKT Ldg St.Leonards)
Total questions: 10
Worksheet time: 5mins
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது கேட்டல் முறையில் உற்றறிதல் ஆகும்
மாலையில் மழை பெய்யும் என்று அனுமானித்தல்
வெவ்வேறு ஒலிகளைக் கேட்டு வகைப்படுத்துதல்
சுவைபானத்தை சுவைத்தல்
செடியின் வளர்ச்சியைக் குறிப்பிடுதல்
எது மனிதனின் சுவாசித்தல் செயற்பாங்கிற்குத் தொடர்புடையது அல்ல?
மூக்கு
நுரையீரல்
தோல்
சுவாசக்குழாய்
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது?
காற்றை உள்ளிழுக்கும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்
காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்
காற்றை வெளியேற்றம் பொழுது அதிகமான உயிர்வளி இருக்கும்
காற்றை வெளியேற்றும் பொழுது அதிகமான நீர் இருக்கும்.
ஒரு மனிதனின் சுவாச வீதம் எப்போது மாற்றம் அடையும்?
நடவடிக்கை மாறும்போது
வேகமாக ஓடும்போது
உறங்கும்போது
நாளிதழ் செய்தியை வாசிக்கும்போது
கீழ்க்காண்பனவற்றுள் கழிவகற்றும் உறுப்பைத் தேர்ந்தெடுத்திடுக.
மூக்கு
நுரையீரல்
சுவாசக்குழாய்
இருதயம்
மனிதன் மூச்சுக்காற்றை உள்ளிழுக்கும்போது, அந்தக் காற்றில்_____________உயிர்வளியும் ________________ கரிவளியும் இருக்கும்.
குறைவான, அதிகமான
அதிகமான, அதிகமான
அதிகமான, குறைவான
குறைவான, குறைவான
மனிதனின் தூண்டலையும் துலங்கலையும் காட்டும் சரியான இணை எது?
வெடிச்சத்தம் கேட்டல் - காதுகளை மூடிக் கொள்ளுதல்
துர்நாற்றம் வீசுதல் - முகத்தைச் சுளித்தல்
முள்ளை மிதித்தல் - கண்களை மூடிக்கொள்ளுதல்
வெளிச்சத்தைப் பார்த்தல் - காதை மூடிக்கொள்ளுதல்.
ஒருவர் மது அருந்திவிட்டு வீடு திரும்புகிறார். அவரால் ‘ஹார்ன்’ சத்தத்தைக் கேட்டு உடனே விலக முடியவில்லை ஏன்?
அவருக்கு காது கேட்கவில்லை
அவர் தூண்டலுக்கு ஏற்பத் தாமதமாகத் துலங்குகிறார்.
அவர் உறங்கிவிட்டார்
அவர் வேண்டுமென்றே நகர மறுக்கிறார்
சாலமண்டர் நீரில் இருக்கும்போது எப்படிச் சுவாசிக்கும்?
செவுளைக் கொண்டு
ஈரமான தோலைக் கொண்டு
நுரையீரலைக் கொண்டு
சுவாசத் துளையைக் கொண்டு
ஒரு வெட்டுக்கிளியின் உடல் பகுதி நீருக்குள் அமிழ்த்தப்பட்டு, தலை மட்டும் வெளியே தெரியும்படி விடப்பட்டது. அவ்வெட்டுக்கிளி சில நிமிடங்களில் இறந்து விட்டது. ஏன்?
இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருந்தால்
அதன் சுவாச உறுப்பு வயிற்றுப் பகுதியில் உள்ளதால்
அது செவுளைக் கொண்டு சுவாசிப்பதால்
அதற்கு உணவு கிடைக்காததால்
