wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

எழுத்தியல்

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

தமிழ் நெடுங்கணக்கு எழுத்துகள்

மொத்தம் எத்தனை என்பதனைத் தெரிவு செய்க.

a)

216

b)

247

c)

215

d)

30

2.

உயிர் குறில் எழுத்துகள் கொண்ட வரிசையினைத் தெரிவு செய்க

a)

அ, ஆ, இ, ஈ

b)

அ, இ, உ, எ, ஒ

c)

ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள

d)

ஆ, ஈ, ஊ, ஏ, ஓ

3.

உயிர் நெடிலைக் கொண்டிராத சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஒளடதம்

b)

ஐயர்

c)

ஊதல்

d)

எருது

4.

இது தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் பின்னே ஒரு வல்லின உயிர்மெய்யெழுத்தையும் துணையாகக் கொண்டு வரும்.

a)

b)

c)

d)

5.

மேற்காணும் படத்திற்குப் பொருத்தமான

சொல் யாது ?

a)

ரிஷபம்

b)

ஸர்ப்பம்

c)

புஷ்பம்

d)

விருட்ஷம்

6.

கோடிடப்பட்ட இடத்திற்குப் பொருத்தமான வல்லெழுத்துகளைத் தெரிவு செய்க.


பவளக்கொடி சாலையை ____ கடக்க மேம்பாலத்தை ______பயன் படுத்தினாள்.

a)

ச் , க்

b)

ப் , ச்

c)

க் , ச்

d)

க், ப்

7.

உயிர் எழுத்தும் மெய்யெழுத்தும் சேர்வதால் பிறக்கின்ற எழுத்தைத் தெரிவு செய்க.

a)

க் + அ = கு

b)

ச் + ஊ = சூ

c)

த் + ஒ = தோ

d)

க் + உ = கூ

8.

சரியான எழுத்துக் கூட்டலைத் தெரிவு செய்க .


ரனரீதன்

a)

ர்+ ஆ+ன்+ அ+ த்+ ஈ + ர+ அ +ன்

b)

ர்+ அ + ன்+ அ + த்+ ஈ + ர்+ அ+ ன்

c)

ர்+ ஆ+ன்+ஆ+ த்+ஆ+ர+ன்

d)

ர+ன+தீ+ர+ன்

9.

கீழ்க்காண்பனவற்றில் எது சரியல்ல.

a)

உயிர் மெய் நெடில் மொத்தம் 126

b)

உயிர் மெய் எழுத்துகள் மொத்தம் 216

c)

உயிர் எழுத்துகளை இரு வகையாகப் பிரிக்கலாம்

d)

உயிர் மெய்க் குறில் மொத்தம் 90

10.

மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கொண்ட விடையைத் தெரிவு செய்க

a)

கோ, நெ , வே, நா

b)

யி, ழு, ளோ, ரு

c)

லு, வி, யா, றா

d)

ஞி,ணு, நொ, னெ

11.

கீழ்காண்பனவற்றுள் சரியான வரிசையைத் தெரிவு செய்க.

a)

வல்லினம் – க், ச், ட், த், ப், ர்

b)

மெல்லினம் – ங், ண், ஞ், ந், ம், ழ்

c)

இடையினம் – ய், ர், ல், வ். ள், ழ்

d)

உயிர்குறில் – அ, இ, எ, உ, ஒ

12.

கீழ்க்காண்பனவற்றுள் எவை வல்லெழுத்துகளைக் கொண்டிருக்கின்றன?

a)

மரம்

b)

மயில்

c)

வாத்து

d)

அ ண்ணன்

13.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் உயிர்க்குறிலில் தொடங்காத சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஐயர்

b)

இடுப்பு

c)

ஆலமரம்

d)

ஈச்சமரம்

14.

வல்லின மெய்யெழுத்தை ஏற்று வரும் படத்தைத் தெரிவு செய்க

a)
b)
c)
d)
15.

உயிர்மெய் நெடில் எடுத்துக்காட்டினைத் தெரிவு செய்க

a)

த் + ஈ =தி

b)

ட் + ஏ = டே

c)

ள் + உ = ளௌ

d)

ப் + ஒ = பொ

16.

இவற்றுள் எஃது ஆய்த எழுத்து ?

a)

ஞ்

b)

ட்

c)

d)

ங்

17.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் சரியானவற்றைத் தெரிவு செய்க

a)

உயிர்க்குறில்–ஆ , ஈ, ஊ, ஏ, ஐ, ஔ

b)

உயிர்மெய்குறில்- ச,பெ,தொ, கு, மை

c)

உயிர்நெடில்– ஆ, ஈ, ஊ, ஐ, ஔ, யே

d)

உயிர்மெய்நெடில் –ஞா, மீ, கூ, நே, பூ

18.

சுட்டெழுத்தைக் கொண்டிராத வாக்கியத்தைத் தெரிவு செய்க

a)

அது வளமான நாடு

b)

உவன் பெயர் என்ன?

c)

அந்த மனிதர் பண்பானவர்.

d)

எங்கு எடுத்து சென்றாய்?.

19.

கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் கிரந்த எழுத்துக் கொண்டிராத படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
20.

கீழ்க்காண்பனவற்றுள் குற்றெழுத்தில் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க

a)

ஐயப்பா

b)

கொம்பு

c)

கௌதமி

d)

கையொப்பம்

21.

கீழ்க்காணும் படத்திற்கேற்ப கோட்டில் இருக்க வேண்டிய சரியான கிரந்த எழுத்து யாது?


_______ ர்ப்பம்


a)

கஷ்

b)

c)

d)

22.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொல் எந்த வகையைச் சார்ந்தது?


ஞ்சு மஞ்சத்தில் உறங்கினாள்.

a)

சந்தச்சொல்

b)

இனவெழுத்து

c)

மெல்லினம்

d)

சார்பெழுத்து

23.

வல்லின மெய்யெழுத்தை ஏற்று வந்துள்ள படத்தைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
24.

மெல்லின மெய்யெழுத்தை ஏற்று வராத படத்தைத் தெரிவு செய்க,

a)
b)
c)
d)
25.

கீழ்க்காண்பவை இடையின மெய்யெழுத்தை ஏற்று வரும் சொற்களாகும்.ஒன்றைத் தவிர

a)

செவ்வாய்

b)

உடற்பயிற்சி

c)

விளையாட்டு ப் பூங்கா

d)

அடுப்பங்கரை

26.

________________________ஓர் அழகிய அன்னப்பறவை.

a)

அஃது

b)

அது

c)

இது

d)

எஃகு

27.

உயிர் எழுத்துகள்________________________வகைப்படும். அவை____________________மற்றும்________________ஆகும்.

a)

2, குறில், நெடில்

b)

2, உயர்திணை,அஃறிணை

c)

3,ஒருமை, பன்மை

d)

3, தோன்றல், திரிதல்

28.

தமிழ்நெடுங்கணக்கில் 216_________________எழுத்துகள் உள்ளன.

a)

உயிர்மெய்

b)

உயிர்

c)

மெய்

d)

ஆய்த

29.

தமிழெழுத்துகளில் மென்மையாக ஒலிக்கும் எழுத்துகளைத் தெரிவு செய்க ?

a)

க், ச், ட், த், ப், ற்

b)

ய், ர், ல், வ், ழ், ள்

c)

ங், ஞ், ண், ந், ம், ன்

d)

ஃ, ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஔ

30.

மெல்லின உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

6

b)

90

c)

126

d)

72