Worksheetsதமிழ்மொழி-(1) by cikgu Visha
Total questions: 10
Worksheet time: 5mins
சூழலுக்குப் பொருத்தமான இரட்டைக் கிளவியைத் தெரிவு செய்க.
மளமள
கலகல
நறநற
கிலுகிலு
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
அலை - செல்வம்
கடல் - அலை
செல்வம் - கடல்
அலை - கடல்
மேல்காணும் படம் உணர்த்தும் ஆத்திசூடி யாது?
ஏற்பது இகழ்ச்சி
ஔடதம் குறை
ஆறுவது சினம்
ஔவியம் பேசேல்
பலமிக்க உடலமைப்பைப் பெற்ற நந்தன் இப்பொழுது ______________ ஆகிவிட்டான் என அவனின் தாய் வேதனையுற்றார்.
உருண்டு திரண்டு
எலும்பும் தோலுமாய்
பேரும் புகமுமாக
மேல்காணும் படம் உணர்த்தும் செய்யுளைத் தெரிவு செய்க.
ஏறுபோல் நட
ஐம்பொறி ஆட்சிகொள்
உடலினை உறுதிசெய்
ஊண்மிக விரும்பு
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மேற்கண்ட கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
நமது அன்னை மிகவும் அன்பானவர்.
தாயும் தந்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்.
பெற்ற தாயைவிட ஒருவருக்குச் சிறந்த கோயில் வேறெதுவும் கிடையாது.
தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது.
அறம் செய்ய விரும்பு
மேற்கண்ட ஆத்திசூடிக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.
பிறருக்குக் கொடுத்து உதவும் ஆற்றலோடு விளங்க வேண்டும்.
அறம் செய்ய ஒருபோதும் மறக்கக் கூடாது.
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.
பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச்
சேர்க்க வேண்டும்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ஐயம் புகினும் செய்வனச் செய்
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
______________ மக்கள் ____________ மருந்து
மேற்கண்ட கொன்றை வேந்தனில் விடுபட்டச் சொற்களைத் தெரிவு செய்க.
மூவா - ஐயம்
ஏவா - மூவா
மூவா - ஏவா
சூதும் - வாதும்
யோகிபாபுவின் நகைச்சுவையைக் கேட்டு தருண் ______________ எனச் சிரித்தான்.
சலசல
மளமள
கலகல
தகதக
