wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கீழ்க்காண்பனவற்றுள் எது பழமொழி அல்ல ?

a)

அ. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

b)

ஆ. குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

இ. வெள்ளம் வருமுன் அணைபோடு

d)

ஈ. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?

2.

விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" எந்தவொரு செயலிலும் முயற்சியோடு ஈடுபடுபவர்க்கு அச்செயலால் வெற்றி கிட்டுவது உறுதி "

a)

அ. முன் வைத்த காலைப் பின் வைக்காதே.

b)

ஆ. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

c)

இ. முயற்சியுடையோர் இகழ்ச்சி அடையார்.

3.

பழமொழிக்கு ஏற்ற விளக்கத்தைத் தெரிவு செய்க.


" பதறாத காரியம் சிதறாது "

a)

அ. நிதானத்துடன் செய்யப்படும் எந்த ஒரு காரியமும் வெற்றி பெறுவதோடு சிறப்பாகவும் அமையும்.

b)

ஆ. எந்த ஒரு செயலிலும் முயற்சியோடு ஈடுப்பட்டால் அச்செயலில் வெற்றி பெறுவது உறுதி.

c)

இ. ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதற்கான வழியும் உண்டு.

d)

ஈ. பதற்றப்படாமல் பொறுமையுடன் ஒரு செயலைச் செய்தால் அச்செயல் சிறப்பாக முடிவுறும்.

4.

பின்வரும் பழமொழியை நிறைவு செய்யவும்.


" சுடர் விளக்காயினும் ____________________________ "

a)

அ. காலை விடாதே.

b)

ஆ. சித்திரம் வரைய வேண்டும்.

c)

இ. தூண்டுகோல் தேவை.

d)

ஈ. ஓரணுவும் அசையாது.

5.

விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" ஒரு குழந்தை சிறுவயதில் எப்படி விளங்குகிறதோ அதைக்கொண்டு பிற்காலத்தில் எப்படி விளங்கும் என்பதை ஊகித்து அறியலாம் ".

a)

அ. நிழலின் அருமை வெயிலில் தெரியும்.

b)

ஆ. விளையும் பயிர் முளையிலே தெரியும்.

c)

இ. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா ?

d)

ஈ. மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா ?

6.

பொருளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" தேவையற்றது அல்லது அற்பமானது என நாம் நினைக்கும் பொருளும் தக்க வேளையில் நமக்கு உதவும்."

a)

அ. சிறு துரும்பும் பல் குத்த உதவும்.

b)

ஆ. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு.

c)

இ. அழுத பிள்ளை பால் குடிக்கும்.

d)

ஈ. உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

7.

கீழ்க்காணும் திருக்குறளின் கருத்துக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும் "

a)

அ. ஆழம் அறியாமல் காலை விடாதே.

b)

ஆ. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

c)

இ. வெள்ளம் வருமுன் அணை போடு

8.

இளம் வயதில் கற்கும் கல்வி மனதில் அழியாமல் பதிந்து விடும் என்பதைக் குறிக்கும் பழமொழி யாது ?

a)

இளங்கன்று பயம் அறியாது.

b)

இளமைக் கல்வி சிலைமேல் எழுத்து.

c)

புத்திமான் பலவான்.

9.

கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" அமுதா முறையாகப் பயிற்சி செய்து வந்ததால் இன்று தேசிய ரீதியிலான பேச்சுப் போட்டியில் முதல் நிலையில் வாகைச் சூடினாள் "

a)

அ. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

b)

ஆ. இளமைக் கல்வி சிலையில் எழுத்து.

c)

இ. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்.

d)

ஈ. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.

10.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


" திரு.கபிலன் எப்பொழுதும் தனிமையிலேயே வாழ விரும்புவார்; அண்டை அயலார், உற்றார் உறவினர்களோடு சேர்ந்து வாழ விரும்ப மாட்டார். இதனால், அவருடைய வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை.

a)

அ. தனி மரம் தோப்பாகாது

b)

ஆ. தீட்டின மரத்திலே கூர் பார்ப்பாதா ?

c)

இ. நிறைகுடம் தளும்பாது.

d)

ஈ. அன்னமிட்ட வீட்டில் கன்னமிடலாமா ?