wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கியம் & இலக்கணம் புதிர்க் கேள்விகள் ஆண்டு 4,5,6

Total questions: 50

Worksheet time: 25mins

Name
Class
Date
1.

நெஞ்சாரப் ________________ சொல்ல வேண்டாம்.

a)

பொய்தன்னைச்

b)

உண்மைதனைச்

c)

மெய்தனைச்

2.

சரியான பொருளைத் தேர்வு செய்க.


எழுத்தறி வித்தவன் இறைவனாகும்

a)

எத்தகைய வறுமை நிலையிலும் கல்வி கற்பதை விடாதிருத்தல் நல்லது.

b)

பிழையறப் பேசுவதே கற்ற கல்விக்குச் சிறப்பு

c)

கல்வியைக் கற்பிக்கும் ஆசிரியர் கடவுளுக்கு நிகராகக் கருதப்படுகின்றார்.

3.

குறலின் அடுத்த வரியைப் பூர்த்திச் செய்க.


அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

a)

நற்றால் தொழாஅர் எனின்

b)

இழுக்கா இயன்றது அறம்

c)

என்றும் இடும்பை தரும்

4.

சிறுவர்கள் தினக் கொண்டாட்டத்தில் சிறுவர்கள் ________________ மகிழ்ந்தனர்.

a)

அங்கும் இங்கும்

b)

ஆடிப்பாடி

c)

ஏற்ற தாழ்வு

5.

காவல் அதிகாரி திருடனை சாலையில் _______________ வென இழுத்து வந்தார்.

a)

தர தர

b)

கடு கடு

c)

திரு திரு

6.

.நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையைப் பார்த்த நிகுலன் _______________ வென சிரித்தான்.

a)

பள பள

b)

தக தக

c)

கல கல

7.

கொடுக்கப்பட்டுள்ள படத்தில் பெண்பாலுக்கு ஏற்ற ஆண்பாலைத் தெரிவு செய்க.

a)

தாத்தா

b)

சித்தப்பா

c)

மாமா

8.

படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடியைக் கண்டறிக.

a)

ஒளடதம் குறை

b)

உடலினை உறுதிசெய்

c)

அச்சம் தவிர்

9.

கீழ்க்காண்பனவற்றுள் பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

தாயும் சேயும்- தாயும் குழந்தையும்

b)

மேடு பள்ளம்- சுற்றிலும்

c)

அல்லும் பகலும்- எப்பொழுதும்

10.

பெருமையும் சிறுமையும் _______________________

a)

தான் தர வருமே

b)

கல்விக்கு வருமே

c)

பிழையற பேசுவதே

11.

கேமரன் மலைக்குச் செல்லும் வழியில் மரங்கள் ______ வென சரிந்து விழுந்தன.

a)

தர தர்

b)

மள மள

c)

மட மட

d)

கிடு குடு

12.

கோறனி தொற்று நோயால் மக்கமள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றனர்..இருப்பினும் சில பொறுப்பற்ற தரப்பினர்கள் பொய் தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர்.


இச்சூழலுக்கு பொருந்தாத உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

அனலில் இட்ட மெழுகு போல

b)

இலைமறை காய் போல

c)

காட்டுத் தீ போல

d)

சிலை மேல் எழுத்துப் போல

13.

கீழ்க்காணும் செய்யுளுக்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


ஆனமுதலில் அதிகச்செலவானால் மானம் அழிந்து மதிகெட்டுப்-போனதிசை

a)

புத்திமான் பலமான்

b)

சிக்கனம் சீரழிக்கும்

c)

சிறு துறும்பும் பல் குத்த உதவும்

d)

வெள்ளம் வருமுன் அணைபோடு

14.

பின்வருவனவற்றும் பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.

a)

அள்ளி இறைத்தல்- அளவுக்கு மேல் செலசவழித்தல்

b)

பேரும் புகழும்- சிறப்பு/உயர்வு/மேன்மை

c)

கம்பி நீட்டுதல்-பிறருடைய கவனத்திலிருது தப்பித்துப் போய் விடுதல்

d)

மேடு பள்ளம்-சமமற்ற நிலப்பகுதி

15.

கீழ்க்காணும் சூழலுக்கேற்ற புதிய ஆத்திச்சூடியைத் தெரிவு செய்க.


மாணவர்களெ,நம் வாழ்க்கைச் சூழலில் தற்போது அனைவரும் துரித உணவையே விரும்பிகிறோம்.இத்துரித உணவால் நம் உடலுக்குக் கெடுதியே அதிகம்.

a)

ஔடதம் குறை

b)

ஈகை திறன்

c)

உடலினை உறுதி செய்

d)

ஊண்மிக விரும்பு

16.

கீழ்க்காணும் உரையாடலுக்கு ஏற்ற உலகநீதியைத் தெரிவு செய்க.


அகிலா:செல்வி ,கலாவிடம் பேசுவதைத் சற்று நிறுத்திக் கொள்.ஏனென்றால்,அவளின் பழக்க வழக்கங்கள் சரியில்லை.


செல்வி:அப்படிக் கூறாதே,அகிலா.நாம் ஒருவரின் குணம் அறியாது புறம் பேசக் கூடாது.

a)

போகாத விடந்தனிலே போக வேண்டம்

b)

ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்

c)

நெச்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

d)

போகவிட்டுப் புறச்சொல்லித் திரிய வேண்டாம்

17.

திரு அருண் ஒரு செல்வந்தர். ஆனால் அவர் சூதாடும் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார்,ஒரு நாள் தம் நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

தந்தை சொல்மிக்க மந்திரம் இலலை

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

18.

கீழ்க்காணும் செய்யுளை நிறைவு செய்க.


____________ வீணையும் மாலை மதியமும்

____________ தென்றலும் வீங்கு இள வேனிலும்

____________ வண்டறை பொய்கையும் போன்றதே

____________ எந்தை இணையடி நீழலே

a)

ஈசன் , வீசு, மூசு, மாசில்

b)

மாசில், வீசு, மென்காற்று, ஈசன்

c)

ஈசன், இளவேனில், இனிமை, மாசில்

d)

மாசில், வீசு, மூசு, ஈசன்

19.

கீழ்க்காண்பனவற்றுள் சரியான இரட்டைக்கிளவியைக் கொண்டுள்ள வாக்கியத்தை தேர்ந்தெடுக.

a)

வேந்தன் மரக்கிளைகளைத் தர தர வென இழுத்துக் குப்பையில் போட்டார்.

b)

அப்பா கடு கடு வென சாட்டையால் அடித்தார்.

c)

தொழிலாளர்களிடம் முதலாளி பளபள எனலக் காணப்பட்டார்.

20.

கீழ்க்காணும் விளக்கத்திற்கு பொருந்தும் செய்யுளின் முதல் அடியைத் தெரிவு செய்க.


நற்குணமுடைய ஒருவருக்கு உதவி செய்தால் அவரும் சிறந்த உதவியை வணக்கத்தோடு செய்வார்.

a)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

b)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாள்

c)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

d)

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துச்சார்

21.

கீழ்க்காணும் திருக்குறளில் கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருளைத் தெரிவு செய்க.


தீயவை தீய பயத்தலால் தீயவை

தீயினும் அச்சப்படும்

a)

அழிக்கும்

b)

வழங்கும்

c)

நடுக்கத்தால்

d)

விளைவிக்கும்

22.

கீழ்க்காண்பனவற்றுள் பொருட்பெயரைத் தேர்ந்தெடுக.

a)

ஆலயம்

b)

கசப்பு

c)

ஆசிரியர்

d)

கரடி

23.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் பிழையான இணையைத் தெரிவு செய்க.

a)

மெய் எழுத்து - 18

b)

உயிர்மெய் நெடில் எழுத்துகள் - 156

c)

உயிர்மெய் குறில் எழுத்துகள் - 90

d)

ஆய்த எழுத்து - 1

24.

கீழ்க்காணும் சொல்லுக்குப் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.


வனைந்தனர்

a)

பன்மை

b)

உயர்திணை

c)

பலவின்பால்

d)

இறந்தகாலம்

25.

கீழ்க்காணும் காலியான இடத்திற்கேற்ற விடையைத் தெரிவு செய்க.


கண்ணகி அரண்மனைக்குச் சென்று தன் ___________ உடைத்தாள்.

a)

காற்சிலம்பு

b)

காற்சிலம்புடன்

c)

காற்சிலம்பை

d)

காற்சிலம்பில்

26.

கீழ்க்கண்ட வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் ஏற்று வரும் வேற்றுமை உருபைத் தெரிவு செய்க.


திரு அகிலன் தம் அம்மாவுடன் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு வருகையளித்தார்.

a)

இரண்டாம் வேற்றுமை

b)

நான்காம் வேற்றுமை

c)

மூன்றாம் வேற்றுமை

27.

சரியான வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

நேற்று மீனவர் கடலில் மீன்களைப் பிடிக்கிறார்.

b)

நாளை மீனவர் கடலில் மீன்களைப் பிடித்தார்.

c)

நேற்று மீனவர் கடலில் மீன்களைப் பிடிப்பார்.

d)

இன்று மீனவர் கடலில் மீன்களைப் பிடிக்கிறார்.

28.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கோடிடப்பட்டுள்ள சொல் குறிக்கும் இடத்தைத் தெரிவு செய்க.


"அவர்கள் இருவரும் என்னைப் பார்க்க நாளை வருகின்றனர்,"என்று அம்மா கூறினார்.

a)

தன்மை

b)

முன்னிலை

c)

படர்க்கை

29.

கீழ்க்காணும் வாக்கியத்திற்குப் பொருத்தமான அயற்கூற்று வாக்கியத்தைத் தெரிவு செய்க.


அப்பா," நான் நாளை காலையில் முதலாளியுடன் கோலாலம்பூருக்குச் செல்லவுள்ளேன்," என்று அம்மாவிடம் கூறினார்.

a)

தான் நாளை காலையில் முதலாளியுடன் கோலாலம்பூருக்குச் செல்கிறேன் என்றார் அப்பா.

b)

அப்பா மறுநாள் காலையில் முதலாளியுடன் கோலாலம்பூருக்குச் செல்லவுள்ளதாக அம்மாவிடம் கூறினார்.

c)

அப்பாவும் முதலாளியும் கோலாலம்பூருக்குச் செல்வதாக அம்மாவிடம் கூறினார்.

30.

சேர்த்தெழுதுக.


பொன் + தாமரை

a)

பொன்தாமரை

b)

பொற்றாமரை

c)

பொந்தாமரை

31.

படத்தில் உள்ள பொருளைக் கொண்டு அடிக்கும் போது _______________ என்று சத்தம் கேட்டும்.

a)

கிடுகிடு

b)

பளீர்பளீர்

c)

தடதட

32.

வியர்வை மலை சிந்தாமல்

வெற்றி மலர் பூவாது

எல்லையைத் தொடும் வரை

எனது கட்டை வேகாது


இப்பாடல் வரிகளுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடுக.

a)

மனம் உண்டானால் மார்க்கம் உண்டு

b)

புத்திமான் பலவான்

c)

நிறைகுடம் தளும்பாது

33.

கோபங்கொண்டோர் வீட்டின் வழியே போக வேண்டாம்.


மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற உலகநீதி யாது?

a)

சினந்தேடி யல்லலையுந் தேட வேண்டாம்

b)

மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்.

c)

சினந்திருந்தார் வாசல்வழி சேறல் வேண்டாம்.

34.

கீழ்க்காண்பனவற்றுள் எது வெற்றி வேற்கை அல்ல?

a)

இளமைக் கல்வி சிகலையில் எழுத்து

b)

அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்

c)

பெருமையும் சிறுமையும் தான்தர வருமே

35.

படம் விளக்கும் மரபுத்தொடரைத் தெரிவு செய்க.

a)

திட்டவட்டம்

b)

ஈவிரக்கம்

c)

காது குத்துதல்

d)

பெயர் பொறித்தல்

36.

👉உடல் நோய்,பசி,தூக்கத்தைப் பொருட்படுத்தவில்லை.


👉பிறர் தனக்குச் செய்யும் தீங்கினைப் பொருட்படுத்துவதில்லை.

a)

நன்றி ஒருவற்குச் செய்தக்கா லந்நன்றி

b)

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

c)

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார்

d)

அடக்க முடையா ரறிவிலரென றெண்ணிக்

37.

படம் விளக்கும் இணைமொழியைத் தெரிவு செய்க.

a)

பேரும் புகழும்

b)

கல்வி கேள்வி

c)

அறை குறை

d)

ஆடை அணிகலன்

38.

கீழ்க்காணும் சூழலுக்குப் பொருத்தமான ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


ஓவியப் போட்டியில் தோல்வி அடைந்த அமலாவைத் தொடர்ந்து முயற்சி செய்யும்படி அம்மா உற்சாகம் ஊட்டினார்.

a)

ஒப்புர வொழுகு

b)

ஏற்ப திகழ்ச்சி

c)

ஊக்கமது கைவிடேல்

39.

யார் என்ன சொன்னாலும்

யார் என்ன செய்தாலும்

சொந்தமும் பந்தமும் கூட வரும்


இப்பாடலுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

b)

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

c)

சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்

d)

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

40.

படம் உணர்த்தும் புதிய ஆத்திசூடியைத் தேர்ந்தெடுக.

a)

ஐய மிட்டுண்

b)

உடலினை உறுதி செய்

c)

ஓய்தல் ஒழி

d)

ஈகை திறன்

41.

உயிர் எழுத்தைக் கொண்டு தொடங்கும் பழத்தின் பெயரைத் தெரிவு செய்க.

a)
b)
c)
42.

கீழ்க்காணும் வாக்கியத்தில் பண்புப்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தேரந்தெடுக.


அம்மா என் பிறந்தநாள் விழாவிற்கு இனிப்பான பலகாரங்களைத் தயார் செய்தார்.

a)

பலகாரம்

b)

இனிப்பான

c)

பிறந்தநாள்

d)

அம்மா

43.

பின்வரும் வாக்கியங்களுள் எது விழைவு வாக்கியம் அல்ல?

a)

தயவு செய்து அனைவரும் அமைதியாகப் பேசுங்கள்

b)

ஆஹா! இவ்வளவு உயரமான கட்டடமா!

c)

அகிலா! புல் தரையில் நடக்காதே.

44.

சரியாக வலிமிகுந்துள்ள வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

கலா பரிசுகளை மடிக்கும் முறையை செய்து காட்டினாள்.

b)

முகிலா, இப்படிப் பேசுவது சரியில்லை.

c)

அந்த பணக்காரர் எவ்வளவுத் தொகை கொடுத்தார்?

d)

என்னுடையப் புத்தகத்தைத் கொடுத்து விடுங்கள்.

45.

மூன்றாம் வேற்ருமை உருபைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மனுநீதி சோழன் தம் மகனைத் தேரில் ஏற்றிக் கொன்றார்.

b)

நம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.

c)

பாடல்கள் வைரமுத்துவால் இயற்றப்பட்டது.

46.

கிரந்த எழுத்தைக் கொண்டுள்ள சொல்லைத் தெரிவு செய்க.

a)

புஸ்பம்

b)

கண்ணாடி

c)

பந்தயம்

47.

கீழ்க்காண்பனவற்றுள் குற்றெழுத்தில் தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.

a)

ஐம்பூதம்

b)

பௌணர்மி

c)

பைந்தமிழ்

d)

தொல்காப்பியம்

48.

கீழ்க்காணும் வாக்கியத்தில் கருமையாக்கப்பட்ட சொல்லின் பெயர்ச்சொல் வகையைத் தேர்ந்தெடுக.


தைப்பூசம் அன்று பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனைப் பக்தியுடன் செலுத்தினர்.

a)

பண்புச்சொல்

b)

காலப்பெயர்

c)

தொழில்பெயர்

d)

இடப்பெயர்

49.

வாக்கியத்தில் விடுபட்ட இடத்தில் ஏற்ற இடைச்சொல்லைத் தெரிவு செய்க.


குமரனால் முதலாளி பணித்த வேலையைச் சரியாகச் செய்து முடிக்க இயலவில்லை._____________ , அவனுக்கு உடல் நலம் சரியில்லை.

a)

என்வே

b)

ஆனால்

c)

ஆதலால்

d)

ஏனென்றால்

50.

கீழ்க்காணும் சொற்களில் இடப்பெயரை தெரிவு செய்க.

a)

பிற்பகல்

b)

ஆலயம்

c)

மாணவன்

d)

வெண்மை