WorksheetsPT3 தமிழ் மொழி
Total questions: 12
Worksheet time: 6mins
தமிழர் விழாவில் மாணவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திருக்குறள்களை _______________________வென ஒப்புவித்தனர்.
கடகட
விறுவிறு
பரபர
தொணதொண
இடியிடிக்கும் சத்தம் கேட்டவுடன் தமிழரசி உலர்ந்த துணிகளை எடுக்க _______________________வென நடந்தாள்.
துருதுரு
கடகட
பரபர
விறுவிறு
மேலதிகாரி வருவதையறிந்த அலுவலகப் பணியாளர்கள் _______________________ வென தங்களின் வேலைகளைச் செய்தனர்.
விறுவிறு
துருதுரு
பரபர
கடகட
நன்கொடை வழங்குவதில் அப்பெரியவருக்கு ______________________ எவருமிலர்.
சீரும் சிறப்பும்
ஈடு இணை
அடக்க ஒடுக்கம்
குற்றம் குறை
தீபாவளிப் பண்டிகையின் போது சிறுவர்கள் புத்தாடையுடுத்தி _______________________ மகிழ்ந்தனர்.
நாணிக்கோணி
உள்ளும் புறமும்
ஆடிப்பாடி
தங்கு தடை
புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்த உறவினர்களைத் தமிழரசு _______________________ மலர வரவேற்றார்.
உள்ளும் புறமும்
அகமும் புறமும்
சீரும் சிறப்பும்
கள்ளம் கபடு
திருமண வைபவத்திற்கு வந்திருந்தோர் புதுமணத் தம்பதியரை _______________________________________ வாழ வேண்டும் என வாழ்த்தினர்.
தாயைக் கண்ட சேயைப் போல
அழகுக்கு அழகு செய்வது போல
இலவு காத்த கிளி போல
மலரும் மணமும் போல
பிரதமர் அறிவித்த பதினோராவது மலேசியத் திட்டம் நம் நாட்டின் பொருளாதாரத் துறையை மேலோங்கச் செய்யும் என்பது __________________________ தெளிவாகத் தெரிகிறது.
பசுமரத்தாணி போல
உள்ளங்கை நெல்லிக்கனி போல
தூண்டில் காரனுக்குத் தக்கை மேல் கண் போல
கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தது போல
_________________________ இருந்த கபிலனும் பாரியும் சிறு கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர்.
மணியும் ஒலியும் போல
இலைமறைக் காய் போல
அழகுக்கு அழகு செய்வது போல
ஊமை கண்ட கனா போல
அரசாங்க உதவிப்பணத்தில் உயர்க்கல்வி மேற்கொள்ள எண்ணிய வாணி, எஸ்.பி.எம் தேர்வில் சிறப்புத் தேர்ச்சி பெறாததால் அவளுடைய எண்ணம் ________________________ ஆனது.
அரைப்படிப்பு
உடும்புப் பிடி
கானல் நீர்
வெட்டிப் பேச்சு
திரு. அம்பலவானர் ________________________ வைத்திருக்கும் வரனையே தன் மகளுக்கு மணமுடிக்க எண்ணினார்.
உடும்புப் பிடி
இடித்துரைத்தல்
வீடு வாசல்
ஏட்டிக்குப் போட்டி
உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் __________________________யாகத் தமிழர் திருநாளை இன்று வரையிலும் கொண்டாடி வருகிறார்கள்.
தலை வணங்குதல்
வாழையடி வாழை
உடும்புப் பிடி
எள்ளளவும்
