wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PT3 தமிழ்மொழி (தொகுதி 4) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

பின்வரும் சூழலுக்குப் பொருத்தமான மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


ஆனந்தன், தான் தொடங்கவிருக்கும் வியாபாரத்தைப் பற்றித் தன் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து பேசினான்.

a)

வீடுவாசல்

b)

உச்சி குளிர்தல்

c)

தலை வணங்குதல்

d)

அளவளாவுதல்

2.

கீழ்க்காணும் உரையாடலுக்குப் பொருத்தமான மரபுத்தொடர் எது?


கண்ணகி : மன்னா, நீ செய்தது பெருந்தவறு, என் கணவன் கோவலன் கள்வன் அல்லன். நீ தான் கள்வன். அவனைக் கொன்ற நீயே கொலையாளி.


பாண்டிய மன்னன் : என்னை மன்னித்துவிடு தாயே!

a)

உடும்புப் பிடி

b)

இடித்துரைத்தல்

c)

ஈயாடவில்லை

d)

பாட்டு வாங்குதல்

3.

பின்வரும் உரைவீச்சுக்குப் பொருத்தமான பழமொழியைத் தெரிவு செய்க.


இளமையில் விழித்துக் கொள்

முதுமையில் சிரித்திருப்பாய்

இளமையைக் கட்டிலில்

கட்டிவிட்டால்

முதுமையில் அழுவாய் நீ!

a)

அடாது செய்பவன் படாது படுவான்.

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

d)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

4.

பின்வரும் விளக்கத்திற்குப் பொருத்தமான பழமொழி எது?


வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

a)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

b)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

c)

எறும்பு ஊரக் கல்லூம் தேயும்

d)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

5.

சரியாக நிரல்படுத்தப்பட்டுள்ள பழமொழியைத் தெரிவு செய்க.

a)

நாலும் இரண்டும் பல்லுக்குறுதி வேலும் ஆலும் சொல்லுக்குறுதி

b)

இரண்டும் நாலும் பல்லுக்குறுதி வேலும் சூலும் சொல்லுக்குறுதி

c)

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி ஆலும் வேலும் பல்லுக்குறுதி

d)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

6.

கீழ்க்காணும் திருக்குறளில் விடுபட்ட சொல்லைத் தெரிவு செய்க.


ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனை

____________ எனக்கேட்ட தாய்.

a)

ஆன்றோன்

b)

சான்றோன்

c)

ஈன்றோன்

d)

ஈன்றாள்

7.

பின்வரும் உரையாடலுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தெரிவு செய்க.


அறிவுமதி: ஐயா, குமரனால் நன்றாக நடிக்க முடியும். அவனை நாடகப் போட்டிக்கு அனுப்புங்கள்.


கலையரசன்: ஐயா, கிரணை நிகழ்ச்சி நெறியாளராக அமர்த்துங்கள். அவன் மிகச் சிறப்பாகச் செய்வான்.


ஆசிரியர் : அவரவர் திறமையை உணர்ந்து அதன்படி செயல்படத் திட்டமிடுகிறீர்கள். மிகவும் நல்லது. அப்படியே செய்வோம்.

a)

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

b)

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

c)

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று

d)

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

8.

கொடுக்கப்பட்டுள்ள திருக்குறளுக்குப் பொருத்தமான கருத்தைத் தெரிவு செய்க.


இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

a)

வாழ்க்கையில் நெறி தவறும் சூழல் நேரும்போது பெற்றோரின் அறிவுரை கை கொடுக்கும்.

b)

வாழ்க்கையில் நெறி தவறும் சூழல் நேரும்போது நண்பரின் அறிவுரை கை கொடுக்கும்.

c)

வாழ்க்கையில் நெறி தவறும் சூழல் நேரும்போது ஊராரின் அறிவுரை கைகொடுக்கும்.

d)

வாழ்க்கையில் நெறி தவறும் சூழல் நேரும்போது சான்றோரின் அறிவுரை கை கொடுக்கும்.

9.

கீழ்க்காணும் செய்யுளில் விடுபட்ட செய்யுளடியைத் தெரிவு செய்க.


வையகம் தகளியா வார்கடலே நெய்யாக

________________ – செய்ய

சுடராழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

இடராழி நீங்குகவே யென்று.

a)

செய்ய கதிரோன் சுடராக

b)

செய்ய கதிரோன் ஒளியாக

c)

வெய்ய கதிரோன் சுடராக

d)

வெய்ய கதிரோன் விளக்காக

10.

பின்வரும் செய்யுளடியின் பொருளைத் தெரிவு செய்க.


_________________________

_________________________

உறவு கோல்நட்டு உணர்வு கயிற்றினால்

முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.

a)

விறகில் தீயும், பாலில் நெய்யும் மறைந்திருப்பது போல மிகப் பெரிய மாணிக்கத்தைப் போன்ற பேரொளியாகிய இறைவன் எங்கும் எதிலும் மறைந்துள்ளான்.

b)

உறவு எனும் கோலை ஊன்றி, உணர்வெனும கயிற்றினால் மன உறுதியோடு பக்தி செலுத்தினால், பாலைக் கடையும்போது நெய் வெளிப்படுவது போல இறையருள் வெளிப்படும்.

c)

உறவையும் உணர்வையும் கொண்டு பக்தி செலுத்தினால் பாலிலிருந்து நெய் வெளிப்படுவது போல இறையருள் தோன்றும்.

d)

மன உறுதியோடு பக்தி செலுத்தினால் இறையருள் வெளிப்படும்.