wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி - செய்யுள் மொழியணி (கீழ்நிலை)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

முகிலன் விளையாட்டுப் பொருள்களைக் கொண்டு கட்டிய கட்டடம் அவனுடைய நாய்க்குட்டி மோதியதால் _________________ வென ஆட்டங் கண்டது.

a)

கடகட

b)

சடசட

c)

கிடுகிடு

d)

விறுவிறு

2.

பள்ளி முடிந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் யாரோ பின் தொடர்வதை உணர்ந்த சங்கீதா _________________ வென நடுங்கத் தொடங்கினாள்.

a)

கிடுகிடு

b)

வெடவெட

c)

கடகட

d)

நசநச

3.

கீழ்க்காணும் இரட்டைக்கிளவியின் சரியான பொருளைத் தெரிவு செய்க.


பர பர

a)

அவசர அவசரமாகச் செய்தல்

b)

விரைவாகச் செய்தல்

c)

எப்பொழுதும் துடிப்பாகச் செய்தல்

d)

துரிதமாகச் செய்தல்

4.

“ இங்கு ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் திருநாள் எவ்வித _________________ இன்றி நடைபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்,” என்று தலைவர் தனது தலைமை உரையில் கூறினார்.

a)

உயர்வு தாழ்வு

b)

தங்கு தடை

c)

ஈடு இணை

d)

சீரும் சிறப்பும்

5.

கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் மிகப் பொருத்தமான இணைமொழியைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தன் வியாபாரத்தைத் தொடங்க பணம் உயர்வு தாழ்வாக இருந்ததால் குமரன் பொருளகத்தில் கடனுதவி பெறத் தீர்மானித்தான்.

b)

திருமதி மலர் தன் இல்லத்திற்கு வந்த உறவினர்களை உள்ளும் புறமும் மலர வரவேற்றாள்.

c)

திரு அறிவழகன் தன் மகளின் திருமணத்தைச் சீரும் சிறப்புமாக நடத்தினார்.

d)

தன் குடும்ப நலனுக்காகத் திரு. முத்தரசன் ஈடு இணை இன்றி அயராது உழைத்தார்.

6.

சரியான இணையைத் தெரிவு செய்க

a)

வாடி வதங்கி – கவலையுடன்

b)

நாணிக்கோணி – தலை குனிந்து

c)

அகமும் புறமும் – உள்ளேயும் வெளியேயும்

d)

கள்ளங்கபடு – வஞ்சக எண்ணம்

7.

பாராலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் நம் நாட்டைப் பிரதிநிதித்து அம்பு எய்தும் போட்டியில் தங்கம் வென்ற சுரேசின் மறைந்திருந்த திறமை இன்று மலேசியர்கள் அனைவராலும் அறியப்பட்டது. மிகச் சரியான உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

a)

பசுமரத்தாணி போல

b)

இலைமறை காய் போல

c)

ஊமை கண்ட கனா போல

d)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

8.

5. குழந்தையைப் பராமரிக்க வேண்டிய பெற்றோர்களே அவர்களைக் கொடுமைப்படுத்தும் செயல் _________________ இருக்கிறது.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனா போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

d)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

9.

திருநாள் காலங்களில் வீட்டு வாசலில் கோலம் போடும் பழக்கத்தைத் தமிழர்கள் நெடுநாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

a)

வீடு வாசல்

b)

வாழையடி வாழை

c)

எள்ளளவும்

d)

ஏட்டிக்குப் போட்டி

10.

மலர்விழி தன் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாகச் செய்தே தீர வேண்டும் எனத் தன் பெற்றோரிடம் வாதிட்டாள்.

a)

எள்ளளவும்

b)

இடித்துரைத்தல்

c)

உடும்புப் பிடி

d)

ஏட்டிக்குப்போட்டி