wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

வினாடி வினா (படிவம் 3)

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல எனும் உவமைத்தொடருக்கான பொருள் யாது?

a)

தன் செயலில் கவனமாயிருத்தல்

b)

தன் செயலைக் கவனமாகச் செய்தல்

c)

தன் செயலைக் கவனத்துடன் முயலுதல்

2.

ஒரு உண்மையைத் தனக்குள்ளே புதைத்து வைத்தல் என்பதற்கு ஏற்ற உவமைத்தொடர் யாது?

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

ஊமை கண்ட கணாப் போல

d)

ஊமைக் கண்ட கனாப் போல

3.

திருமணமானவர்களை ..........................................வாழ வேண்டும் என வாழ்த்துவர். கோடிட்ட இடத்திற்கானச் சரியான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

a)

மலரும் மனமும் போல

b)

மலரும் மணமும் போல

c)

மலரும் மனமும் போல்

d)

மலரும் மனமும் போல்

4.

காற்பந்தாட்டக் கழகத்தில் தலைவர் பதவி தனக்குக் கிடைக்குமென ஓர் ஆண்டாகக் காத்திருந்து, இறுதியில் அப்பதவிக்கு வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டது -------------------------------- ஆனது.

a)

ஊமைக் கண்ட கனாப் போல

b)

இலவு காத்த கிளி போல

c)

இலவு காத்த கிளிப் போல

d)

ஊமைக் கன்ட கனாப் போல

5.

உவமைத்தொடருக்கேற்றப் பொருளைத் தேர்ந்தெடுக.


வேலியே பயிரை மேய்ந்தாற்போல

a)

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

b)

வெளியே சொல்ல முடியாமை

c)

தன் செயலில் கவனமாயிருத்தல் / குறியாயிருத்தல்

d)

உறுதியாகக் கிடைக்கும் என்று காத்திருந்து ஏமாற்றம் அடைதல்

e)

விட்டுப் பிரியாமை / சேர்ந்தே இருத்தல்

6.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


அமுதனும் அகிலனும் தொடக்கப்பள்ளியிலிருந்தே விட்டுப் பிரியாமல் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

7.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


வளவன் பள்ளியின் சிறந்த பூப்பந்து விளையாட்டாளராக இருந்தாலும் எப்பொழுதும் கல்வியில் அதிக கவனம் செலுத்தி சிறந்து விளங்க தவறுவதில்லை.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

8.

சூழலுக்கேற்ற சரியான உவமைத்தொடரைத் தேர்ந்தெடுக.


காவல்துறை அதிகாரியான தீரன், தன் மகன் ஒரு போதைப்பித்தன் என்ற உண்மையை வெளியேக் கூற முடியாமல் தவித்தார்.

a)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

b)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

c)

ஊமை கண்ட கனாப் போல

d)

இலவு காத்த கிளி போல

e)

மலரும் மணமும் போல

9.

கோடிட்ட இடத்தை நிரப்புக.


வேலியே பயிரை ---------------------------

a)

மேய்தாற்போல

b)

மேய்ந்தாற்போல

c)

மேய்ந்தற்போல

d)

மேய்வதுபோல

10.

சூழலுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


குடும்பத்தின் வறுமையைப் போக்க பகுதி நேர வேலை செய்தாலும், அமுதன் ------------------------------- தன் படிப்பின் மீது முழு கவனம் செலுத்தினான்.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

மலரும் மணமும் போல