Worksheetsஅறிவியல் ஆத்திசூடி
Total questions: 15
Worksheet time: 15mins
உடல் நோய்க்கு ……….. தேவை
அ) இனிப்பு
ஆ)ஔடதம்
இ) உணவு
ஈ) உடை
'கண்டறி’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ)கண் + அறி
ஆ)கண்டு + அறி
இ) கண்ட + அறி
ஈ) கண் + டறி
'ஓய்வற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ)ஓய்வு + அற
ஆ)ஓய் + அற
இ) ஓய் + வற
ஈ) ஓய்வு + வற
ஏன் + என்று என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………….
அ)ஏன்என்று
ஆ)ஏனென்று
இ) ஏன்னென்று
ஈ) ஏனன்று
நண்பர்களுடன் ………….. விளையாடு
அ)ஒருமித்து
ஆ)மாறுபட்டு
இ) தனித்து
ஈ) பகைத்து
பொருத்தமான சொல்லைக் கொண்டு ஆத்திச்சூடியை நிறைவு செய்க.
என்றும் ................... வெல்லும்
அ)உண்மையே
ஆ)மனிதனே
இ) அறிவியலே
ஈ) வாய்மையே
பொருத்தமான சொல்லைக் கொண்டு ஆத்திச்சூடியை நிறைவு செய்க.
.................. தெளிந்து சொல்
அ)உண்மை
ஆ)ஐயம்
இ) அறிவியல்
ஈ) வாய்மை
ஆழக்கடல் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) ஆழமான + கடல்
ஆ) ஆழ் + கடல்
இ) ஆழ + கடல்
ஈ) ஆழம் + கடல்
நீலம் + வான் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) நீலம்வான்
ஆ) நீளம்வான்
இ) நீலவான்
ஈ) நீலவ்வான்
விண்வெளி என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) விண் + வளி
ஆ) விண் + வெளி
இ) விண் + ஒளி
ஈ) விண் + வொளி
இல்லாது + இயங்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ………..…
அ)இல்லாது இயங்கும்
ஆ) இல்லாஇயங்கும்
இ) இல்லாதியங்கும்
ஈ) இல்லதியங்கும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் மோனைச் சொற்களை தேர்வு செய்க
அ)உலகம் - நிலவில்
ஆ) செயற்கை - எந்திர மனிதன்
இ) உலகம் – உள்ளங்கை
ஈ) வேளை – இயற்கை
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் மோனைச் சொற்களை தேர்வு செய்க
அ)உலகம் - நிலவில்
ஆ) செயற்கை - எந்திர மனிதன்
இ) உலகம் – அகிலம்
ஈ) நாளை – நகரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் எதுகைச் சொற்களை தேர்வு செய்க
அ)எலும்பு - உயிரும்
ஆ) செயற்கை – இயற்கை
இ) உலகம் – அகிலம்
ஈ) நாளை – நகரம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் இயைபுச் சொற்களை தேர்வு செய்க
அ)எலும்பு - உயிரும்
ஆ) உலகம் – உள்ளங்கையில்
இ) பார்க்கின்றான் - படைக்கின்றான்
ஈ) நாளை – நகரம்
