NEW
Font size
Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
பிற எழுத்துகள் துணையின்றி ஒலிக்ககூடியவை எவை?
உயிர் எழுத்து
உயிர்மெய்யெழுத்து
கிரந்த எழுத்து
மெய்யெழுத்து
உயிர்மெய் எழுத்து என்றால் என்ன?
தனக்கு முன்னே ஒரு நெட்டெழுத்தையும் பின்னே ஒரு இடையின உயிர்மெய் எழுத்தையும் கொண்டிருக்கும்.
தனக்கு முன்னே ஒரு குற்றெழுத்தையும் பின்னே ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் கொண்டிருக்கும்.
மெய் எழுத்தும் உயிர் எழுத்தும் சேர்வதால் பிறக்கின்ற எழுத்து
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்வதால் பிறக்கின்ற எழுத்து
இன எழுத்துகள் பிறப்பியல் அடிப்படையில் ஒரே இடத்திலிருந்து பிறக்கும் ஒலிகளைத் தொடர்புப்படுத்தும் சொல்லைத் தெரிவு செய்க
வட்டம்
பம்பரம்
கரம்
நெட்டை
அங்கு, அவன், அது எனும் சுட்டெழுத்து சொற்கள் எவ்வகையைச் சேர்ந்தது?
சேய்மைச்சுட்டு
அண்மைச்சுட்டு
சேய்மை சுட்டுக்கும் அண்மைச்சுட்டுக்கும் இடையே உள்ள பொருளைக் குறிக்கும்
அண்மைச்சுட்டுக்கும் சேய்மைசுட்டுக்கும் இடையே உள்ள பொருளைக் குறிக்கும்
ஆ, ஓ எனும் வினா சொற்கள் சொல்லின் எப்பகுதியில் வரும்.
சொல்லின் முதல் எழுத்தாக வரும்
சொல்லின் இறுதி எழுத்தாக வரும்
சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்
சொல்லின் இறுதியிலும் முதலிலும் வரும்
'கிழவனின் நீளமான தடியைக் காணவில்லை' என்ற வாக்கியத்திற்கு ஏற்ற விடையைத் தெரிவு செய்க
செந்தமிழ்சீலன் அழகாகப் பேசி சபையோரின் பாராட்டைப் பெற்றான்.
ஆசிரியர் அக்கட்டுரை தலைப்பை விரிவாக விளக்கினார்.
அம்மா கிழிந்த துணிகளைத் தைத்தார்.
பூவிழி போட்டி விளையாட்டில் வேகமாக ஓடினாள்
கீழ்க்காண்பனவற்றுள் சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.
i மாமா ஓர் இரும்பாலான மேசையை வாங்கினார்.
ii. மாமா மரத்தாலான ஒரு நாற்காலியை வாங்கினார்
iii. மாமா ஓர் அழகான வைர மோதிரத்தை வாங்கினார்.
iv. மாமா ஓர் பொம்மையை வாங்கினார்.
i, ii, iii
i, ii. iv
i, iii, iv
ii, iii, iv
பள்ளிக்குச் சென்ற மதியழகன் ஆசிரியர் கற்றுக் கொடுத்த பாடங்களை உன்னிப்பாகக் கவனித்தான். ஆசிரியர் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் விரைவாகவும் அறிவுப்பூர்வமாகவும் பதில் அளித்தான். அவன் கூறிய பதில் அனைவரையும் திகைக்க வைத்தது.
மேற்காணும் சூழலில் குறிப்பிட்டுள்ள பொருத்தமான வினைச்சொல் வகையைத் தெரிவு செய்க.
வினைமுற்று
வினையெச்சம்
பெயரெச்சம்
செய்வினை
ஆண் + அழகன்= ஆணழகன் எனும் விதிக்கேற்ற வேறொரு சொல்லைத் தெரிவு செய்க.
காலை + உணவு =காலையுணவு
மெய் + அடி = மெய்யடி
கண் + இமை = கண்ணிமை
பணம் + இல்லை = பணமில்லை
பின்வருவனவற்றுள் எது கொடுக்கப்பட்டிருக்கும் சொல்லுக்கு ஏற்ற விதியைக் கொண்டுள்ளது ?
அணில் + பிள்ளை = அணிற்பிள்ளை
முள் + தாள்
உள் + பூசல் =
வேல் + படை
பொன் + தகடு
