wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (உவமைத்தொடர்)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கொடுக்கப்பட்டுள்ள கொன்றை வேந்தனின் கருமையாக்கப்பட்ட சொல்லுக்குப் பொருந்தாத சொல் எது?


ஐயம் புகினும் செய்வனச் செய்

a)

குறை

b)

பிச்சை

c)

வெற்றி

d)

துன்பம்

2.

கீழ்க்காணும் பொருளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.


பிறருடைய குறைகளையும் குற்றங்களையும் பெரிதுப்படுத்திக் கொண்டிருந்தால் நம்முடன் உறவினர்களோ நண்பர்களோ யாரும் இருக்க மாட்டார்கள்.

a)

சூதும் வாதும் வேதனை செய்யும்

b)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

c)

ஏவா மக்கள் மூவா மருந்து

d)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

3.

கொடுக்கப்பட்ட கொன்றை வேந்தனுக்கு ஏற்ற பொருளைத் தெரிவு செய்க.


ஆலயம் தொழுவது சாலவும் நன்று

a)

தாயும் தந்தையுமே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவார்.

b)

தந்தையின் சொல்லைவிட மேலான அறிவுரை கிடையாது

c)

தாயும் தந்தையுமே நாம் அறிந்து கொள்ள வேண்டிய தெய்வம் ஆவர்

d)

கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவது மிக்க நன்மை தரும்.

4.

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்


மேற்காணும் குறளுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

5.

அம்மாவும் அப்பாவும் வருவதற்குள் வேலைகளை முடிக்க வேண்டும்.


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.

a)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

b)

ஏவா மக்கள் மூவா மருந்து

c)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

d)

ஐயம் புகினும் செய்வனச் செய்

6.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் ‘அன்னையர் தினம்’ உலகளாவிய நிலையில் கொண்டாடப்படுகிறது


மேற்காணும் கூற்றுக்கு ஏற்ற கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க

a)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

b)

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

c)

ஆலயம் தொழுவது சாலவும் நன்று

d)

சூதும் வாதும் வேதனை செய்யும்

7.

கருத்துக்குப் பொருத்தமான செய்யுளைத் தெரிவு செய்க

சூதாடுதலும் தேவையற்ற வாக்குவாதம்

செய்தலும் துன்பத்தையே தரும்

a)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

b)

சூதும் வாதும் வேதனை செய்யும்

c)

ஏவா மக்கள் மூவா மருந்து

d)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

8.

பெற்றோரின் பெருமையைக் காட்டும் கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.


I. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்


II. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை


III. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை


IV. ஏவா மக்கள் மூவா மருந்து

a)

A.I , II

b)

B.II , III , IV

c)

C.I , II , III

d)

D.I , III , IV

9.

கீழ்க்காணும் கருத்துக்குப் பொருந்தும் செய்யுளைத் தெரிவு செய்க.


பிச்சையெடுக்கும் அளவுக்கு வறுமை ஏற்பட்டாலும் செய்ய வேண்டிய நற்செயல்களைச் செய்ய வேண்டும்.

a)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

b)

ஐயம் புகினும் செய்வனச் செய்

c)

சூதும் வாதும் வேதனை செய்யும்

d)

நுண்ணிய கருமமும் எண்ணித் துணிக

10.

வேந்தா!நீ தமிழ்ப் பாடத்திலும் கணிதப் பாடத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.


இக்கூற்றுக்கு ஏற்ற செய்யுளைத் தெரிவு செய்க.

a)

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

b)

ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு

c)

குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

d)

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு