wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உவமைத்தொடர் ( ஆக்கம் : திருமதி மலர்விழி )

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கீழ்க்காணும் சூழலில் காலியிடத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


நண்பர்கள் ஷாமளாவின் கவனத்தைத் திசைத் திருப்ப பலவாறு முயன்றாலும் அவள் எஸ்.பி.எம். தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று ________________________________________________________ தன் எண்ணத்தில் குறியாக இருந்தாள்.

a)

சூரியனைக் கண்ட பனி போல

b)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல்

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

கண்ணினைக் காக்கும் இனிமை போல

2.

கொடுக்கப்பட்டுள்ள பொருளுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க


காக்க வேண்டியவரே துரோகம் செய்தல்

a)

தாயைக் கண்ட சேயைப் போல

b)

வேலியே பயிரை மேய்வது போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

d)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

3.

கொடுக்கப்பட்டுள்ள நாளிதழ் செய்திக்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.

ஏழைக் குடும்பத்தில் பிறந்த குமுதா வழக்கறிஞரானார்.

- தமிழ் ஓசை -

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

c)

சேற்றில் முளைத்த செந்தாமரை போல

d)

5 points

4.

நீறு பூத்த நெருப்பு போல

a)

இக்கட்டான நிலை

b)

பாதிப்பு ஏற்படுவது உறுதி

c)

உணர்ச்சிகளை வெளியே காட்டிக்கொள்ளாமை

5.

நற்பெயருக்கு இழுக்கு ஏற்படுத்துதல்

a)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

b)

நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தது போல

c)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

6.

விபத்தில் சிக்கிய தன் மகனைக் காண மருத்துவமனைக்குச் சென்ற தந்தையும் விபத்தில் பலி. உறவினர் சொல்லொணாத் துயரில் மூழ்கினர்.

a)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

b)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

c)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

7.

ரம்யா எஸ்.பி.எம். தேர்வில் 12A பெற்று எல்லையற்ற மகிழ்ச்சியில் திளைத்திருந்த வேளையில் மேற்படிப்பைத் தொடர அரசாங்கம் உபகாரச் சம்பளம் கொடுக்க முன்வந்தது ___________________ இருந்தது.

a)

தீயும் பயிருக்குப் பெய்யும் மழை போல

b)

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல

c)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

8.

வசந்தம் பண்பலையில் வானொலி படைப்பாளருக்கான நேர்முகத் தேர்வுக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் படையெடுத்தனர்.

a)

புற்றீசல் போல

b)

பசுமரத்தாணி போல

c)

இலவு காத்த கிளி போல

d)

இலைமறை காய் போல

9.

இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டிய மனிதக்குலமே அதன் அழிவுக்குக் காரணமாகி இருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று.

a)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

b)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

d)

தூண்டில்காரனுக்குத் தக்கைமேல் கண் போல

10.

தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடிய வேளையில் வெளிநாட்டைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப் போவதாக அப்பா கூறியது _____________ இருந்தது

a)

மலரும் மணமும் போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

இலவு காத்த கிளி போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

11.

வெளியே சொல்ல முடியாத நிலை

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

ஊமை கண்ட கனா போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

d)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

12.

நாம் பேசுவதை அளவோடு பேச வேண்டும்; தேவை ஏற்பட்டால் பேச வேண்டும். தேவை இல்லாமல் பேசி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது. அதனால் பாதிப்பு நமக்கே என்பது தெள்ளத் தெளிவான உண்மை.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

இலைமறை காய் போல

c)

இருதலைக் கொள்ளி எறும்பு போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல

13.

பின்வரும் உரையாடலுக்கு ஏற்ற உவமைத்தொடர் எது?


மாமா: மணி, இனியும் இப்படி இருக்காதே! விளையாடுகிற நேரத்தில் விளையாடு, படம் பார்க்கிற நேரத்தில் படம் பார். ஆனால், தேர்வை மறந்துவிடாதே! திட்டமிட்டுக் கருத்தாய்ப் படி. அப்போதுதான் நீ எதிர்பார்த்தது நடக்கும்.


மணி: நிச்சயமாக மாமா.

a)

இலவு காத்த போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

d)

பசுமரத்தாணி போல

14.

திருமணத்திற்கு வந்திருந்த பெரியவர்கள் தம்பதியரை ___________________ ஒன்றிணைந்து வாழுமாறு வாழ்த்தினர்.

a)

குடத்திலிட்ட விளக்கு போல

b)

மணியும் ஒலியும் போல

c)

குன்றின் மேலிட்ட விளக்கு போல

d)

கண்ணினை காக்கும் இமை போல

15.

மாலுமி இல்லாத கப்பல் போல

a)

செயல் இழந்து நிற்கும் நிலை

b)

ஆதரவு இல்லாத நிலை

c)

தலைமைத்துவம் இல்லாமை