wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

UPSR தமிழ்மொழி (தொகுதி 6) - உமா பதிப்பகம்

Total questions: 10

Worksheet time: 50mins

Name
Class
Date
1.

சூழலுக்கேற்ற ஆத்திசூடியைத் தெரிவு செய்க.


திரு. முத்து தமது வணிகத்தை மேன்மேலும் வளர்ச்சியுற செய்ய வேண்டி, வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப இணைய விற்பனை முறையை அறிமுகப்படுத்தினார்.

a)

ஊக்கமது கைவிடேல்

b)

உடையது விளம்பேல்

c)

ஒப்புர வொழுகு

d)

ஏற்பது இகழ்ச்சி

2.

காலியிடத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தெரிவு செய்க.


பல நாள்களாகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்ட அந்தக் கடத்தல்காரன் _________ நேற்று காவல் துறையினரிடம் சிக்கிக் கொண்டான்.

a)

வேலியே பயிரை மேய்ந்தது போல

b)

பசுத்தோல் போர்த்திய புலி போல

c)

இலைமறை காய் போல

d)

யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல

3.

காலியிடத்திற்கு ஏற்ற இணைமொழிகளைத் தெரிவு செய்க.


வீரமணி தோற்றத்தில் __________ காணப்பட்டாலும், __________ நிறைந்த அந்த மலைப்பகுதியில் பயணிப்பதில் பெரும் சிரமத்திற்குள்ளானான்.

a)

எலும்பும் தோலுமாக - நன்மை தீமை

b)

அரைகுறையுடன் - கரடுமுரடு

c)

கரடு முரடாக - மேடுபள்ளம்

d)

உருண்டு திரண்டு - மேடுபள்ளம்

4.

சூழலுக்குப் பொருந்தும் குறளைத் தெரிவு செய்க.


கண்ணனும் ராமனும் சகோதரர்கள். தந்தையார் அளித்த பணத்தை முதலீடாகக் கொண்டு இருவரும் தனித்தனியே தங்களின் வியாபாரத்தைத் தொடங்கினர். கண்ணன் தன் விடாமுயற்சியால் வியாபாரத்தைப் பன்மடங்காகப் பெருக்கிக் கொண்டான். ராமனோ வியாபாரத்தை விரிவுபடுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை. நாளடைவில் அவனது வியாபாரம் முடங்கியது.

a)

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்

b)

எண்ணித் துணிக கருமம்; துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

c)

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்

உள்ளத் தனையது உயர்வு

d)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்

5.

கூற்றுக்குப் பொருந்தும் செய்யுளடியைத் தெரிவு செய்க.


கடவுளை நம்பாதவருக்கும் நம்புகிறவருக்கும் எந்த ஒரு வேறுபாடின்றி அறிவைத் தருகின்ற பேரறிவாளன் இறைவன்.

a)

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே

b)

வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமே

c)

மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே

d)

நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே

6.

ஒரே பொருள் தராத மரபுத்தொடர் இணையைத் தெரிவு செய்க.

a)

குரங்குப் பிடி - ஒற்றைக் காலில் நிற்றல்

b)

தோள் கொடுத்தல் - கை கொடுத்தல்

c)

தட்டிக் கழித்தல் - ஆறப் போடுதல்

d)

அள்ளி இறைத்தல் - வாரி இறைத்தல்

7.

கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கேற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


அந்தக் குத்துச்சண்டை போட்டியில் வெற்றிப் பதக்கம் வென்ற லைலா அலி வேறு யாரும் அல்லர். உலகப் புகழ் குத்துச்சண்டை வீரர் முகம்மது அலியின் மகள்தான் அவர்.

a)

தீட்டின மரத்திலே கூர் பார்ப்பதா?

b)

மீன் குஞ்சுக்கு நீச்சல் பழக்க வேண்டுமா?

c)

இளங்கன்று பயம் அறியாது

d)

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்

8.

பொருளுக்கேற்ற திருக்குறளைத் தெரிவு செய்க.


ஒரு செயலை மேற்கொள்வதற்கு முன்னர் அச்செயல் குறித்து நன்கு ஆராய வேண்டும். மாறாக, ஒரு காரியத்தில் இறங்கிய பின்னர் அதைக் குறித்து ஆராய்வது என்பது தவறாகும்.

a)

முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.

b)

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணிய ராகப் பெறின்.

c)

உள்ளத்தால் பொய்யா தொழுகின் உலகத்தார்

உள்ளத்து ளெல்லாம் உளன்.

d)

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்

எண்ணுவம் என்பது இழுக்கு

9.

கொடுக்கப்பட்ட சூழலுக்குப் பொருத்தமான செய்யுளின் முதல் இரு வரிகளைத் தெரிவு செய்க.


திரு. அமுதன் பயணித்த வாகனம், கட்டுப்பாடிழந்து எதிரே வந்த வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. அமுதனுக்குக் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. எனினும், எதிரே வந்தவரின் நிலைமையை அறிய வேண்டி, தம் வலியையும் பொருட்படுத்தாது அந்த வாகனத்தை நோக்கி விரைந்தார்.

a)

தங்குறைதீர் வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம்

வெங்குறைதீர்க் கிற்பார் விழுமியோர் - திங்கள்

b)

நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை

அல்லார் எனினும் அடக்கிக்கொளல் வேண்டும்

c)

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்

எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி

d)

ஆனமுதலில் அதிகஞ் செலவானால்

மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை

10.

சரியான இணைமொழியைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

உருண்டு திரண்டு காணப்படும் அந்தச் சாலையில் பயணிப்பது என்பது எளிதான காரியமன்று.

b)

கரடு முரடான உடல் வடிவைக் கொண்ட முகுந்தனே அந்த உடல் கட்டழகுப் போட்டியில் முதல் பரிசினை வென்றார்.

c)

தாயும் சேயும் நலம் பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்படுவர் என மருத்துவர் கண்டிப்புடன் கூறிவிட்டார்.

d)

ஒரு காரியத்தில் ஈடுபடும் முன்னர், அதைக் குறித்து எழுகின்ற பேரும் புகழையும் ஆராய்வது சிறப்பு.