wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

7 ஆம் வகுப்பு தமிழ் இரண்டாம் பருவம் இயல் ஒன்று

Total questions: 16

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

வேயாமாடம் எனப்படுவது......................

a)

வைக்கோலால் வேயப்படுவது

b)

சாந்தினால் பூசப்படுவது

c)

ஓலையால் வேயப்படுவது

d)

துணியால் மூடப்படுவது

2.

உரவு நீர் அழுவம் இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் .........

a)

காற்று

b)

வானம்

c)

கடல்

d)

மலை

3.

கடலில் துறை அறியாமல் கலங்குவன..................

a)

மீன்கள்

b)

மரக்கலங்கள்

c)

தூண்கள்

d)

மாடங்கள்

4.

தூண் என்னும் பொருள் தரும் சொல்................

a)

நெகிழி

b)

சென்னி

c)

ஏணி

d)

மதலை

5.

இயற்கை வங்கூழ் ஆட்ட- அடிக்கோடிட்ட சொல்லின் பொருள்..................

a)

நிலம்

b)

நீர்

c)

காற்று

d)

நெருப்பு

6.

மக்கள்.................ஏறி வெளிநாடுகளுக்குச் சென்றனர்

a)

கடலில்

b)

காற்றில்

c)

கழனியில்

d)

வங்கத்தில்

7.

புலால் நாற்றம் உடையதாக அகநானூறு கூறுவது....

a)

காற்று

b)

நாவாய்

c)

கடல்

d)

மணல்

8.

'பெருங்கடல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.............

a)

பெரு+கடல்

b)

பெருமை+கடல்

c)

பெரிய+கடல்

d)

பெருங்+கடல்

9.

இன்று+ஆகி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்.............

a)

இன்றுஆகி

b)

இன்றிஆகி

c)

இன்றாகி

d)

இன்றாஆகி

10.

எதுகை இடம் பெறாத இணை.....

a)

இரவு-இயற்கை

b)

வங்கம்-சங்கம்

c)

உலகு-புலவு

d)

அசைவு-இசைவு

11.

தமிழர்கள் சிறிய நீர்நிலைகளைக் கடக்கப் பயன்படுத்தியது.............

a)

கலம்

b)

வங்கம்

c)

நாவாய்

d)

ஓடம்

12.

தொல்காப்பியம் கடற்பயணத்தை .....................வழக்கம் என்று கூறுகிறது

a)

நன்னீர்

b)

தண்ணீர்

c)

முந்நீர்

d)

கண்ணீர்

13.

கப்பலை உரிய திசையில் திருப்புவதற்குப் பயன்படும் கருவி................

a)

சுக்கான்

b)

நங்கூரம்

c)

கண்ணடை

d)

சமுக்கு

14.

எல்லார்க்கும் எளிதில் பொருள் விளங்கும் சொல்....

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

15.

பலபொருள் தரும் ஒருசொல் என்பது............

a)

இயற்சொல்

b)

திரிசொல்

c)

திசைச்சொல்

d)

வடசொல்

16.

வடமொழி என்று அழைக்கப்படும் மொழி......

a)

மலையாளம்

b)

கன்னடம்

c)

சமஸ்கிருதம்

d)

தெலுங்கு