Worksheetsபிரச்சனைக் கணக்குகள் (நிகரி) பா/நூ 53
Total questions: 5
Worksheet time: 3mins
வாசு 8 வெளியூர் நாணயங்கள் வைத்திருந்தான். மாமா மேலும் சில நாணயங்களைக் கொடுத்தார். வாசுவிடம் மொத்தம் 15 நாணயங்கள் உள்ளன. வாசுவின் மாமா கொடுத்த நாணயங்கள் எத்தனை?
23
15
8
7
திரு. அசுருல் சில மாடுகளை வளர்த்தார். மேலும் 23 மாடுகளை வாங்கினார். தற்போது பண்ணையில் மொத்தம் 70 மாடுகள் உள்ளன. தொடக்கத்தில் அசுருலிடம் எத்தனை மாடுகள் இருந்தன?
40
47
43
93
செண்பகம் கடற்கரையில் 36 சிப்பிகளைச் சேகரித்தாள். சில சிப்பிகளைத் தன் தோழிக்குக் கொடுத்தாள். மீதம் அவளிடம் 14 சிப்பிகள் இருந்தன. செண்பகம் தன் தோழிக்கு எத்தனை சிப்பிகளைக் கொடுத்தாள்?
14
22
36
50
திரு. தமிழமுதன் தமது இல்ல நூலகத்தில் 70 புத்தகங்கள் வைத்திருந்தார். சில புத்தகங்களைத் தம் நண்பர்களுக்கு இரவல் தந்தார். தற்போது அவரது நூலகத்தில் 53 புத்தகங்கள் உள்ளன. திரு. தமிழமுதன் தம் நண்பர்களுக்கு எத்தனை புத்தகங்களை இரவல் தந்தார்?
17
23
53
70
நெடுந்தூர ஓட்டப் போட்டியில் 65 ஆண்களும் சில பெண்களும் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மொத்தம் 92 பேர் கலந்து கொண்டால், பெண் போட்டியாளர்கள் எத்தனை பேர்?
27
33
65
92
