NEW
Font size
Worksheetsகண்டுப்பிடி
Total questions: 30
Worksheet time: 3600secs
மகாகவி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர்.
பாரதிதாசன்
பாரதியார்
கண்ணதாசன்
வைரமுத்து
தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர்.
ஔவையார்
இரமண மகரிசி
மறைமலை அடிகள்
வீரமா முனிவர்
இராமயணத்தைத் தமிழில் இயற்றியவர். கவிச்சக்ரவர்த்தி என்ற சிறப்பு பெயர் பெற்றவர்.
கம்பர்
ஒட்டக்கூத்தர்
குமரப் புலவர்
மறைமலை அடிகள்
திருக்குறளை இயற்றியவர்.
மறைமலை அடிகள்
கண்ணதாசன்
பாரதியார்
திருவள்ளுவர்
இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, தொழில்நுட்ப வல்லுநர், மிகப்பெரிய பொருளாளர், இந்தியாவின் 11 வது குடியரசு தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கதக்க அற்புதமான பேச்சாளர், வருங்கால இளைஞர்களின் முன்மாதிரியாக கருதப்படும் நம் எல்லோருக்கும் தெரிந்தவர்.....
ஏ. பி. ஜே அப்துல் கலாம்
ஏ. பி. ஜே கலாம் அப்துல்
பி. ஏ. ஜே அப்துல் கலாம்
ஜே. ஏ. பி. அப்துல் கலாம்
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை ஆகிய நூல்களை எழுதிய சங்க கால புலவர்களிலலே சிறந்தவர்.
அஞ்சில் அஞ்சியார்
ஔவையார்
ஆதிமந்தி
காவற்பெண்டு
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களைப் பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர்.
மறைமலை அடிகள்
சுவாமி விநேகானந்தர்
வள்ளலார்
வீரமா முனிவர்
இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா.
ரமணமகரிசி
வள்ளலார்
சுவாமி விவேகானந்தர்
சுவாமி ராகவேந்திரா
இவரின் இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாக ஏழைஎளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் தொண்டாற்றியவர் இவர்.
மேரி கியூரி
அன்னை தெரசா
இந்திரகாந்தி
சாரதா அன்னை
"நல்லவர்களின் நட்பை தேடிச் செல்லுங்கள். இதனால் மனதில் உள்ள அறியாமை நீங்கி விடும்'' என்று நல்ல நட்பின் வழியாக அறியாமை இருளைப் போக்கச் சொன்ன அற்புத மகான். மனிதன் தன் வாழ்வின் அத்தனை தருணங்களிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும், இக்கட்டான நிலைகளை எப்படி கடக்க வேண்டும் என்று தனக்கே உரித்தான எளிமையான வார்த்தைகளால் போதித்தவர்.
ரமணமகரிசி
சுவாமி விவேகானந்தர்
ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள்
பாரதியார்
பதினெட்டு சித்தர்களில் முதன்மையானவரும், சப்தரிஷிகளில் ஒருவருமான இவர், பொதிகை மலையில் தவம் செய்ததால் பொதிகை முனி என்றும், கும்பத்தில் பிறந்ததால் கும்பமுனி என்றும், அகத்தின் உள்ளே ஈசனை கண்டதால் _____ என்றும் அழைக்கப்படுகின்றார். தமிழ் மொழியினை உருவாக்கியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
அகத்தியர்
திருவள்ளுவர்
தொல்காப்பியர்
பரதமுனி
இவர் சிறப்பாகத் தமிழ்த் தாத்தா என அறியப்படுகிறார். இவர் ஒரு தமிழறிஞர். அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
ஆறுமுக நாவலர்
சங்கரதாஸ் சுவாமிகள்
உ.வே சாமிநாத ஐயர்
பாம்பன் சுவாமிகள்
திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இவர் ஓர் ஆன்மீகவாதி ஆவார். இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடியவர் இவர்
இராமலிங்க அடிகளார்
ஆறுமுக நாவலர்
சிதம்பரம் சபாபதி பிள்ளை
இராமநாதன்
மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவரான இவர் கரும்பன், அபூபரீதா, இபுனுசைய்யிது, இல்லார்க்கினியன், நல்லார்க்கினியன் ஆகிய புனைப் பெயர்களாலும் அறியப்பட்டவர். கவிதை இலக்கணத்தை முறையாகக் கற்று அதனைப் பிறருக்கும் பயிற்றுவிக்கும் ஆசிரியராகவும் இருந்தவர். சிறந்த இலக்கியச் சொற்பொழிவாளர். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இஸ்லாமியச் சமய உரைகளும் நிகழ்த்தி வந்துள்ளார்.
கவிஞர் மைதீன் சுல்தான்
சீனி நைனா முகம்மது
கவிஞர் காரைக்கிழார்
மலாக்கா முத்துக்கிருஷ்னன்
இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
ஜவகர்லால் நேரு
சுபாஷ் சந்திர போஸ்
சர்தார் வல்லப்பாய் படேல்
மோகன்தாசு கரம்சந்த் காந்தி
சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றியவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1935 இல் தமிழ் முரசு பத்திரிகையை வார இதழாகத் தொடங்கியவர். தமிழ் முரசு வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார்.
நேசமணி
துன் சாமிவேலு
எஸ். ஏ. கணபதி,
கோ. சாரங்கபாணி
மலேசிய நாட்டின் பூப்பந்து விளையாட்டு வாகையர். 1970ஆம் ஆண்டு எடின்பர்க்கு மாநகரில் நடந்த காமன்வெல்த்து போட்டியில் தங்கப் பதக்கம் வென்று சாதனைப் படைத்தார். அதே ஆண்டில் பாங்காக்கில் நடந்த ஆசியப் போட்டியில் தங்கம் வென்றார்.
'பஞ்ச்' குணாளன்
ஆறுமுகம்
ஜேகதீஸ்வரன்
சண்முகநாதன்
ஆங்கிலேயர்களிடமிருந்து இந்திய சுதந்திரத்திற்காகப் போராடினார். தூத்துக்குடி மற்றும் கொழும்பு இடையே முதல் உள்நாட்டு கப்பல் சேவை அமைத்த மனிதர் என எல்லோராலும் நினைவு கூறப்படுகிறார். ‘கப்பலோட்டிய தமிழன்’ என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர்.
வ. உ. சிதம்பரம் பிள்ளை
உ.வே.சாமிநாத ஐயர்
சுந்தரலிங்கம்
சுபாஷ் சந்திர போஸ்
இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவராக, அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவராக இவரின் அரசியல் பயணம் தொடர்ந்தது
ஆபிரகாம் லிங்கன்
ஜோன் எஃப் கெனடி
பாரக் ஓபாமா
நெல்சன் மண்டேலா
சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ........
சீனிவாச இராமானுஜன்
சர். சி.வி.இராமன்
எஸ்.சந்திரசேகர்
பிரம்மகுப்தர்
ஒளியானது ஒரு பொருளின் ஊடாக செல்லும் பொழுது சிதறும் ஒளி அலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்தார். இந்த கண்டு பிடிப்புக்காக 1930 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசை பெற்றார்.
எஸ்.சந்திரசேகர்
சர்.சி.வி.இராமன்
சீனிவாச இராமானுஜன்
வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்
நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் பெண். இயற்பியலுக்கு ஒன்று, வேதியியலுக்கு இன்னொன்று என இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்றவர் இன்றுவரை இவர் மட்டுமே.
மேரி கியூரி.
அன்னை திரெசா
பியரி கியூரி
ஹென்றி பெக்குரேல்
நாட்டின் தலைசிறந்த பாடகர். மேலும், பாடலாசிரியராக, எழுத்தாளராக, காட்சி கலைஞராக, மற்றும் நடிகராகவும் வளம் வந்தவர். கடந்த 1989-ஆம் ஆண்டு மார்ச் 19-ஆம் தேதி ஆசியாவின் தலைசிறந்த கலைஞர் எனும் விருதினைப் பெற்றார்.
சுடிர்மான் அர்ஷாட்டின் (Sudirman Haji Arshad)
அமி செர்ச் (Amy Search)
பி.ரம்லி (P. Ramlee)
அமாட் பைசால் (Ahmad Faizal bin Mohammad Tahir)
நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களைத் தமிழுக்குத் தந்துள்ளார். இவரின் அகல்விளக்கு எனும் நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.
கல்கி
மு.வரதராசனார்
அகிலன்
பாரதசாரதி
ஓர் அமெரிக்க விண்வெளி வீரரும் சந்திரனில் தரையிறங்கிய முதல் மனிதரும் ஆவார். அத்தோடு இவர் வான்வெளிப் பொறியியலாளர், கப்பல்படை விமானி, வெள்ளோட்ட விமானி, மற்றும் பல்கலைக்கழகப் பேராசியர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார்.
எட்வின் ஆல்ட்ரின்
மைக்கேல் கொலின்ஸ்
கேரி ஜார்ஜ்
நீல் ஆம்ஸ்ட்ரோங்
செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாக வாழ்க்கைத் தொடங்கிய இவர் பின்னாளில் அமெரிக்காவின் 16வது ஜனாதிபதி என்ற உயர்ந்த நிலையை அடைந்தவர். இவர் அடிமை முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை ஒழிக்க முனைந்தவர்களில் ஒருவர்.
ஜான் வில்கிஸ் பூத்
ஜோன் எப் கெனடி
வார்டு ஹில் லாமென்
ஆபிரகாம் லிங்கன்
ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாடு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
வில்லெம் வீன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
ஜெ. ஜெ. தாம்சன்
வில்லெம் ரோண்ட்கன்
மலேசியாவில் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீராங்கனை. ஒலிம்பிக் போட்டிகளில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர். பல ஆசிய, தேசியச் சாதனைகளைப் படைத்தவர். மலேசியாவின் ஓட்டப் பந்தய வீராங்கனை விருதைப் பெற்ற முதல் பெண்மணி.
ராஜாமணி மயில்வாகனம்
பி. டி. உஷா
நந்தினி
பி.வி.சிந்து
மலேசிய ஸ்குவாஷ் வீராங்கனை. நம்பர் 1 இடம் பிடித்த முதல் ஆசியர் என்ற பெருமைக்குரியவர். பிரிட்டிஷ் ஓபனில் 4 முறை, உலக ஓபன் தொடரில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். உலக ஜூனியர் பட்டத்தை 2 முறை வென்ற முதல் வீராங்கனை (1999, 2001).
புவேஷ்வரி குமார்
டத்தோ நிகோல் டேவிட்
ஜோஷ்னா சின்னப்பா
தான்வி கண்ணா
ஆசியாவின் சிறந்த "கோல் கீப்பர்" என்று பெயரெடுத்தவர். அவர் காலத்தில் காற்பந்து விளையாட்டில் கோல் கீப்பராக அவரோடு ஒப்பிடக் கூடியவர் யாரும் இல்லை! அதனால் தான் மலேசிய ரசிகர்கள் அவரை "ஸ்பைடர் மேன்" என்று அழைத்தார்கள்.
'பஞ்ச்' குணாளன்
டேவிட் ஆறுமுகம்
லோகநாதன் ஆறுமுகம்
டத்தோ ஆர்.ஆறுமுகம்
