NEW
Font size
Worksheetsஇலக்கியம் டாகடர் மு.வாவின் அகல் விளக்கு( 16-20) வரை
Total questions: 16
Worksheet time: 8mins
ஓர் ஆணும் பெண்ணும் பழகினால் அது காதலில் தான் முடியும் என்கிறான் மாலன். வேலுவோ கவனமாக பழகினால் அதைத் தவிர்க்கலாம் என்கிறான். இச்சூழல் யாரைக் குறிக்கிறது
வேலு கற்பகம் காதலை
சந்திரன் வள்ளி காதலை
சந்திரன் கைதியின் மனைவி மீது கொண்ட காதலை
சந்திரன் இமாவதி மீது கொண்ட காதலை
தலைமையாசிரியர் துணையோடு சந்திரன் காணாமல் போன செய்தியை நாளிதழ்களுக்கு அனுப்புகிறான் வேலு . சந்திரன் எங்கே போனான்?
வாலாசாப் பேட்டையில்
அரக்கோணத்தில்
நீலகிரியில்
பெருங்காஞ்சியில்
சந்திரனின் நிலையை அறிந்த வேலுவின் வீட்டாரும் பாக்கியம் அம்மையாரும் வருந்துகின்றனர். அப்பொழுது பாக்கியம் வீட்டில் ஒரு திருமண ஏற்பாடு நடந்தது. இந்தத் திருமண ஏற்பாடு யாருக்கு?
வேலுவுக்கு
விநாயகத்திற்கு
மணிமேகலைக்கு
கற்பகத்திற்கு
சந்திரன் ஒரு வகையில் வழி தவறி சென்றது போல மாலனும் மற்றொரு வழியில் வழி தவறுகிறான். மாலன் எவ்வாறு வழி தவறுகிறான் ?
சூதாட்டத்தின் வழி
மூடநம்பிக்கையின் வழி
வன்முறையின் வழி
ஒரு தலை காதலின் வழி
இமாவதியின் அழைப்பின் பேரில் வேலு அவளைச் சந்திக்கிறான். அவளிடம் சந்திரன் கூறிய தகவல் வேலுவை அதிர்ச்சியடையச் செய்கிறது. அத்தகவல் என்ன?
சந்திரனின் குடும்ப ரகசியம்
வேலுவின் குடும்ப ரகசியம்
சந்திரன் இமாவதி உறவின் ரகசியம்
பாக்கியம் அம்மையார் உறவின் ரகசியம்
மார்கழி விடுமுறையில் வேலு ஊருக்குப்போகிறான். பாக்கியம் சந்திரனை விசாரிக்கிறார். சந்திரனை நினைத்த பொழுது வேலுவுக்கு வெறுப்பாக இருந்தது. ஏன்?
சந்திரன் ஒரு தலையாக காதலித்ததால்
சந்திரன் கல்லூரியை விட்டு ஓடியதால்
சந்திரன் பல பெண்களுடன் தகாத தொடர்பு வைத்ததை எண்ணி.
சந்திரன் உண்மை அன்புக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இருந்ததால்
பங்குனி விழாவிற்கு வேலூரிலிருந்து அத்தையும் கயற்கண்ணியும் வந்ததாக பாக்கியம் அம்மையார் வேலுவிடம் கூறுகிறார். அப்போது அவர் வேலுவிடம் ஒரு வேண்டுகோள் வைக்கிறார். அது என்ன?
கயற்கண்ணியை வேலு மணக்க வேண்டும்
கற்பகத்தை வேலு மணக்க வேண்டும்
சந்திரனைத் தேடி அழைத்து வர வேண்டும்
பாக்கியம் அம்மையார் குடும்பத்திற்கு உதவ வேண்டும்
அத்தையின் வீட்டிற்குச் சென்றுவருமாறு அப்பா கூறியும் வேலு அதைத் தவிர்த்தான் . ஏன்?
கயற்கண்ணியோடு மணம் முடித்து விடுவர் என்பதால்
கற்பகத்தை வேலு விரும்பியதால்
பரீட்சைக்குப் படிக்க வேண்டும் என்பதால்
சந்திரனைத் தேடும் பணி இருந்ததால்
நீலகிரியில் சந்திரனைக் கண்டவர் யார்?
தலைமை ஆசிரியர்
மகாலிங்கம்
சாந்தலிங்கம்
சுந்தரலிங்கம்
நீலகிரியில் சந்திரன் தொடர்பான செய்தியில் எது தவறு?
நீலகிரியில் சந்திரன் ஒரு பெண்ணோடும் அவனுக்குப் பிறந்த ஒரு குழந்தையுடனும் வாழ்ந்து வருகிறான்
சந்திரன் சேர்ந்து வாழும் பெண்ணின் கணவன் ஒரு கொலையாளி
சந்திரன் நீலகிரியில் ஒரு கணக்குப்பிள்ளையாக வேலை செய்கிறான்.
சந்திரன் சேர்ந்து வாழும் பெண்ணின் கணவன் 10 ஆண்டு சிறைதண்டனை பெற்றவன்
சந்திரனைத்தேடி நீலகிரிக்கு மூவர் பயணமாகிறார்கள். அம்மூவர் யார்?
வேலு, சாமண்ணா, மாலன்
வேலு, கற்பகம், இமாவதி
வேலு, சாமண்ணா, ஆசிரியர்
வேலு, பாக்கியம் ,கற்பகம்
நீலகிரியில் சந்திரனைச் சந்தித்து சமாதானப்படுத்தி அழைத்து வர முயற்சிக்கும் போது அதிர்ச்சியான தகவல் ஒன்றையும் கூறுகின்றனர். அத்தகவல் என்ன?
கொலைக் குற்றவாளியின் விடுதலை
இமாவதியின் முடிந்த திருமணம்
பாக்கியத்தின் தந்தையின் இறப்பு
சந்திரனின் தாயாரின் மறைவு
சந்திரன் இறுதியில் யாரைத் திருமணம் செய்து கொண்டான் ?
இமாவதி
வள்ளி
மணிமேகலை
கயற்கண்ணி
சந்திரனின் திருமணத்தில் வேலு ஏன் கலந்து கொள்ளவில்லை?
வேலுவுக்குக் கல்லூரியில் காலாண்டு தேர்வு இருந்ததால்
வேலுவுக்குச் சந்திரனின் போக்குப் பிடிக்காத்தால்
மாலனுக்குப் பேசி முடித்த கற்பகத்தைக் காண நேரிடும் என்பதால்
வாலாசா பேட்டையில் இருக்கும் வேலுவின் குடும்பத்திற்குப் பத்திரிக்கை கொடுக்காததால்
கீழ்க்காண்பவனவற்றுள் எது தவறு?
சந்திரனின் போக்கில் சாமண்ணா மனநிறைவின்றி இருக்கிறார்
நல்ல மனைவியைச் சந்திரன் சிறுமைப்படுத்துகிறான்
தோட்டக்காரன் பெண்ணோடு உறவுகொண்டு அவளின் கணவனோடு வாழ விடாமல் கெடுத்தல்
சந்திரன் சாமண்ணாவின் குலத்தொழிலை கவனித்துகொள்கிறான்.
சந்திரன் பல பெண்களோடு தகாத உறவை வைத்துக்கொள்கிறான்.கெட்டழிகிறான். நாவலில் இதற்கு ஆசிரியர் கூறும் காரணமென்ன?
பதின்ம வயதில் பாலுணர்வு கல்வியைப் பெறாததால்
நல்லொழுக்கத்தையும் மனக்கட்டுப்பாட்டையும் ஒருவர் வாழ்க்கையில் பின்பற்றாததால்
நல்ல நண்பர்களின் சேர்க்கை பெற்றோரின் வழிகாட்டுதல் இல்லாததால்
உண்மை அன்புக்கும் காமத்திற்கும் வித்தியாசம் தெரியாததால்
