NEW
Font size
WorksheetsScience Year 6-Machine
Total questions: 10
Worksheet time: 5mins
மனிதர்களுக்கு எந்திரத்தின் பயன்பாடு என்ன?
கிணற்றிலிருந்து நீரை எடுக்க உதவும்
பொருள்களை மேல் மாடிக்கு எடுத்துச் செல்ல உதவும்
குறைந்த அளவு சக்தியைப் பயன்படுத்தி ஒரு வேலையைச் செய்ய உதவும்
எளிய எந்திரம் ஐந்து வகைப்படும்
ஒரு முனையில் தரப்படும் சக்தியைக் கொண்டு மறுமுனையில் உள்ள பொருளை நகர்த்த உதவும் எளிய எந்துரம் எது?
நெம்புகோல்
திருகாணி
பற்சக்கரம்
சாய்தளம்
பாக்கு வெட்டி எந்த வகை நெம்புகோலைச் சேர்ந்தவையாகும்?
முதல் வகை
இரண்டாம் வகை
மூன்றாம் வகை
பொருளை வெட்டும் வகை
பின்வருவனவற்றுள் எது எளிய எந்திரம் அல்ல?
கப்பி
கடிகாரம்
திருகாணி
ஆப்பு
பாரந்தூக்கி எந்த எளிமையான எந்திரத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது?
ஆப்பு
கப்பி
நெம்புகோல்
திருகாணி
கூட்டு எந்திரம் என்பது.........................
கடினமான பாகங்களைக் கொண்டது
கடினமான வேலைகளை மட்டும் செய்யக்கூடிய எந்திரம்
வேலைகளை விரைவில் செய்ய உதவும் எந்திரங்கள்
பல எளிய எந்திரங்களைக் கொண்டது
மனித குலத்தை மேம்படுத்த உதவும் தொடர்புத்துறைத் தொழில்நுட்ப வளர்ச்சி எது?
சக்கரமும் இருசும்
கணினி
விண்கலன்
தொடர்புத்துறையின் செயற்கைத் துணைக்கோள்
தொழிற்சாலையில் தொலை இயக்கியின் (Robot) பயன்பாடு என்ன?
வேலைகளை அதிமமாக்குவதற்கு
வேலைகளை பங்கிட்டு செய்வதற்கு
வேலைகளை எளிமையாக்குவதற்கு
வேலைகளை கொடுப்பதற்கு
திருகாணியில் நூல்கண்டு போல் அமைந்திருக்கும் பகுதியை ................... என்று கூறுவர்.
நூல்
மறைந்த நூல்
துணி தைக்கும் நூல்
மறை சூழல்
தள்ளுவண்டியில் காணப்படும் எளிய எந்திரங்கள் யாவை?
சக்கரமும் இருசும் / திருகாணி
சக்கரமும் இருசும் / நெம்புகோல்
நெம்புகோல் / ஆப்பு
சாய்தளம் / பற்சக்கரம்
