Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம் - இரட்டைக்கிளவி

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

நாளை பள்ளிக்குப் போக வேண்டுமென்பதால், கோவிட் -19 நடமாட்டக் கட்டுபாடு காலக்கட்டத்தில் கொடுக்கப்பட்ட பாடங்களை, சுபா ....................... செய்து முடித்தாள்

a)

கலகலவென

b)

பரபரவென

c)

துருதுருவென

d)

சிலுசிலுவென

2.

தன்னுடைய ஒரே பேத்தி ............................ எதாவது செய்து கொண்டு இருப்பதைக் கண்ட முத்தையா மனம் மகிழ்ந்தார்.

a)

பரபரவென

b)

தளதளவென

c)

துருதுருவென

d)

சிலுசிலுவென

3.

மழைக்காலத்தில் ............................. வீசிய குளிர்காற்று குமுதாவை நடுங்க வைத்தது.

a)

சிலுசிலுவென

b)

துருதுருவென

c)

தளதளவென

d)

பரபரவென

4.

தன் தோட்டத்தில் ............................... வளர்ந்திருந்த மல்லிகைச் செடியைக் கண்ட சாரதா மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்

a)

சிலுசிலுவென

b)

துருதுருவென

c)

பரபரவென

d)

தளதளவென

5.

தன்னை யாரோ பின் தொடர்ந்து வருவதை உணர்ந்த மாலதி, வீட்டை நோக்கி ..................... நடந்தாள்

a)

திமுதிமுவென

b)

சடசடவென

c)

விறுவிறுவென

d)

பரபரவென

6.

பலத்த காற்று வீசியதால் மரக்கிளை ........................ முறிந்து விழுந்தன.

a)

கடகடவென

b)

சடசடவென

c)

பரபரவென

d)

துருதுருவென

7.

ஆலயத்தில் பூஜை நடைபெறும் போது .......................... பேசுதல் நல்ல பண்பாகாது.

a)

பளபளவென

b)

துருதுருவென

c)

தொண தொணவென

d)

சலசலவென

8.

ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் இசைநிகழ்ச்சி முடிந்தவுடன் ரசிகர்கள் அனைவரும் அரங்கத்தை விட்டு ................................. வெளியேறினர்.

a)

விறுவிறுவென

b)

கிடுகிடுவென

c)

திமுதிமுவென

d)

சிலுசிலுவென

9.

ஆயிரத்து முன்னூற்று முப்பது திருக்குறள்களையும் மனனம் செய்து ............................ ஒப்புவித்த சுகுமாரியைத் தலைமையாசிரியர் பாராட்டினார்.

a)

விறுவிறுவென

b)

கிடுகிடுவென

c)

துருதுருவென

d)

கடகடவென

10.

கோவிட் 19- நடமாட்டக் கட்டுபாடு உத்தரவின் பின் , உலகளாவிய நிலையில் தங்கத்தின் விலை ................. உயர்ந்தது

a)

கிடுகிடுவென

b)

விறுவிறுவென

c)

கடகடவென

d)

சடசடவென

11.

போதைப்பொருளைக் கடத்தி வந்த கண்ணனின் காரைச் சாலை தடுப்பு அதிகாரிகள் நிறுத்தியவுடன் பயத்தில் ........................................ நடுங்கினான்.

a)

கிடுகிடுவென

b)

துருதுருவென

c)

வெடவெடவென

d)

நசநசவென

12.

திடலில் பந்து விளையாடி விட்டு, வீடு திரும்பிய சீலனின் உடை வியர்வையால் நனைந்து ................... இருந்தது.

a)

வெடவெடவென

b)

நசநசவென

c)

திமுதிமுவென

d)

தளதளவென