NEW
Font size
Worksheetsஉவமைத்தொடர் (புகுமுக வகுப்பு)
Total questions: 10
Worksheet time: 5mins
ஆசிரியர் திடீரென ஒரு பணியைக் கொடுத்துச் செய்யச் சொன்னதும் முகிலனுக்குக் ................................................ இருந்தது.
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
ஒளியைக் கண்ட இருள் போல
இரவு நேரத்தில் வீட்டில் நுழைந்த திருடனைக் கண்டதும் கவிதா ............................................... பயந்து மயங்கி விழுந்தாள்.
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
ஒளியைக் கண்ட இருள் போல
ஏற்கனவே சிவாவின் மீது கோபமாக இருந்த குமரனுக்கு அவன் தன்னைப் பற்றி பிற நண்பர்களிடம் குறை கூறுவதை அறிந்ததும் ...................................................... வெகுண்டு எழுந்தான்.
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
பாம்பும் கீரியும் போல
ஒளியைக் கண்ட இருள் போல
கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
குடும்பம் வறுமையில் தவித்தபோது, கை நிறைய சம்பளத்துடன் வேலை கிடைத்ததும் தேவனின் துன்பங்கள் யாவும் ................................................ விலகின.
ஒளியைக் கண்ட இருள் போல
கீரியும் பாம்பும் போல
கண்ணக் கட்டிக் காட்டில் விட்டாற்போல
கருடனைக் கண்ட பாம்பு போல
எதற்கெடுத்தாலும் வகுப்பில் ........................................... சண்டையிட்டுக் கொண்டிருந்த முகிலனையும் அகிலனையும் ஆசிரியர் அழைத்து அறிவுரை கூறினார்.
கீரியும் பாம்பும் போல
கருடனைக் கண்ட பாம்பு போல
ஒளியைக் கண்ட இருள் போல
எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல
'கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டாற் போல' எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?
பகைமையுடன் இருத்தல்
துன்பம் நீங்குதல்
பய உணர்வு
செய்வதறியாது தவித்தல்
'கீரியும் பாம்பும் போல' எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?
துன்பத்துக்குமேல் துன்பம்
துன்பம் நீங்குதல்
பகைமையுடன் இருத்தல்
செய்வதறியாது தவித்தல்
'ஒளியைக் கண்ட இருள் போல' எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?
துன்பம் நீங்குதல்
துன்பத்துக்குமேல் துன்பம்
பகைமையுடன் இருத்தல்
பய உணர்வு
'எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றினாற் போல' எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?
துன்பத்துக்குமேல் துன்பம்
பய உணர்வு
துன்பம் நீங்குதல்
பகைமையுடன் இருத்தல்
'கருடனைக் கண்ட பாம்பு போல' எனும் உவமைத்தொடரின் பொருள் யாது?
பய உணர்வு
செய்வதறியாது தவித்தல்
துன்பம் நீங்குதல்
பகைமையுடன் இருத்தல்
