wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மலேசியத் தமிழ்ச்சிறுகதைத் திறனாய்வைச் சார்ந்த வினா விடை

Total questions: 10

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

"எங்கே போனாலும் இந்த இழவுதான்" என்று தனக்குள் பேசிக்கொண்டே சலிப்புடன் முகத்தை அப்புறமாகத் திருப்பிக்கொண்டாள் சரசு.


இந்த காட்சியில் எந்த உத்தியைக் கையாண்டுள்ளார் ஆசிரியர்?

a)

தனிமொழி உத்தி

b)

நனவோடை உத்தி

c)

பின்னோக்கு உத்தி

d)

கடித உத்தி

2.

கதை மாந்தர் ஒரு கதையில் ________________, ________________ விளக்கப் படைக்கப்படுகின்றனர். (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகளைத் தெரிவு செய்க)

a)

கதை கூறவோ

b)

உண்மைகளையோ

c)

யதார்த்தத்தையோ

d)

சூழல்களையோ

3.

சிறுகதை ஒரு சமுதாய நிறுவனம். ஏன்?

a)

தொல் பழங்காலக்கட்டத்தில் சமுதாயம் எவ்வாறு இருந்தது என்பதனை சமுதாயக் கருத்துகளின் மூலம் அறிய முடிகின்றது

b)

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சமுதாயம் எவ்வாறு இருந்தது ஒரு தவறான செய்கை செய்ததை கதையில் சமுதாயக் கருத்துகளின் மூலம் அறிய முடிகின்றது

c)

ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சமுதாயம் எவ்வாறு இருந்தது என்பதனை சமுதாயக் கருத்துகளின் மூலம் அறிய முடிகின்றது

4.

சாமக்காரரும் வெற்றிலைக்கொடியும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் பேசப்பட்டக் கோட்பாடுகள் யாவை? (ஒன்றுக்கு மேற்பட்டப் பதில்கள்)

a)

ஆணாதிக்கம்

b)

பெண்ணியம்

c)

திருமணம்

d)

பின்னவீனத்துவம்

e)

நவீனத்துவம்

5.

மூடநம்பிக்கையானது வாழ்க்கைக்குத் தீங்கு விளைவிக்கும். இந்த மூடநம்பிக்கை என்ற வாழ்வியல் கூற்றினை புலப்படுத்தும் இரண்டு சிறுகதைகள் யாவை? (ஒன்றுக்கு மேற்பட்ட விடைகள்)

a)

விடியல்

b)

ஏகாம்பரமும் சனிக்கிரகமும்

c)

எப்போதும் சூரியன்

d)

கரப்பான் பூச்சி

e)

சகுனம்

6.

கருப்பொருள் மற்றும் மையக்கரு எந்த முறையில் படைக்கப்பட்டது?

a)

ஒப்பிட்டு முறை

b)

சமூகவியல் முறை

c)

பகுப்பாய்வு முறை

7.

இந்த 'சாமக்காரரும் வெற்றிலைக் கொடியும்' என்ற சிறுகதைத் தொகுப்பில் அதிகமான அளவில் காணப்படும் மையக்கரு யாவை?

a)

மனபுழுக்கம், தகுதிநிலை

b)

கல்வி, உழைப்பு

c)

தீய பழக்கங்கள், விருப்பம்மின்மை

d)

அன்பு, அர்ப்பணிப்பு, பெண்ணின் அல்லல்

8.

சாமக்காரரும் வெற்றிலைக் கொடியும் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பில் எந்த சமுதாயப் பின்னணி அதிகமாகப் பேசப்பட்டுள்ளது ?

a)

சுயநலமிக்க சமுதாயம்

b)

ஆசிரியர் சமுதாயம்

c)

தோட்டப்புறச் சமுதாயம்

9.

ஒரு கதையில் ஏன் பின்னணி அவசியமாக்கப்படுகிறது?

a)

படிப்பவர்களின் ஆக்கமும் வெறுப்பையும் குறைக்க

b)

படிப்பவர்களின் தெளிவும் ஆர்வத்தையும் குறைக்க

c)

கதைக்கு ஆக்கமும் கதைப்போக்கில் ஒரு தெளிவும் ஏற்பட

10.

கதைப்பின்னலில் முக்கியமாக இருக்க வேண்டிய கூறுகளில் சிலவற்றைத் தெரிவு செய்க

a)

கரு

b)

உச்சம்

c)

சண்டை

d)

வளர்ச்சி

e)

சிக்கல் அவிழ்ப்பு