Font size
Worksheetsநமது சமயத்தை அறிவோம்-பாக்யா 22
Total questions: 12
Worksheet time: 6mins
கம்பர் (கி.பி. 1180–1250) என்பவர் தமிழ் கவிஞரும், நூலாசிரியரும் ஆவார். இவர் இயற்றிய ................................... நூலானது புகழ் பெற்றதாகும்.
சிலப்பதிகாரம்
கம்பராமாயணம்
மகாபாரதம்
திருக்குறள்
கம்பருக்கு "கல்வியிற் பெரியோன் கம்பன்", "கவிச்சக்ரவர்த்தி" போன்ற பட்டங்களை சூட்டியுள்ளனர். கம்பரின் கவித்திறனால், "கம்பன் வீட்டு கட்டுத் தறியும் கவி பாடும்" என்ற முதுமொழி தமிழில் உள்ளது. தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய ...................... என கருதப்படுகிறது.
இலக்கியம்
தமிழ் நூல்
இதிகாசம்
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள். இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய ..................வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
8
6
4
12
1. இயமம் - கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் பொருள் விரும்பாமை, புலன் அடக்கம் என்பனவாம்.2. நியமம் - நியமமாவது நல்லனவற்றைச் செய்து ஒழுக்க நெறி நிற்றல். 3.ஆசனம் - உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல். 4.பிராணாயாமம் -பிரணாயாமமாவது சுவாசத்தை கட்டுப்படுத்தல். அதாவது பிராண வாயுவை சீா்படுத்தல், :வாயுவை உட்செலுத்துதல், வெளிச்செலுத்துதல். 5.பிராத்தியாகாரம் - புலன்கள் வாயிலாக புறத்தே செல்லும் மனத்தை உள்ளே நிறுத்திப் பழகுதல். 6. தாரணை - தாரணை என்பது பிரத்தியாகாரப் பயிற்சியால் உள்ளுக்கு இழுத்த மனத்தை நிலைபெறச் செய்தல். 7.தியானம் - தியானம் என்பது மனதை ஒருபடுத்தி ஒரே சிந்தையில் ஆழ்தல். 8.சமாதி -சமாதி என்பது மனதை கடவுளிடம் நிலைக்க செய்வது ஆகும்.
எட்டு வகையான யோகாங்கம் அல்லது அட்டாங்க யோகம்
சித்த யோகம்
அட்டமா சித்தி
1.அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல். 2.மகிமா - மலையைப் போல் பெரிதாதல். 3.இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல். 4.கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும் அசைக்க முடியாமல் பாரமாயிருத்தல். 5.பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல். 6.பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்) 7.ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும் தன் ஆணையைச் செலுத்தல். 8.வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
சித்தர்களின் மகிமைகள்
எண் பெருஞ் சித்திகள்
அட்டமா யோகங்கள்
பிராகாமியம் என்பது .................
மலையைப் போல் பெரிதாகுதல்.
காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல். (கூடு விட்டுக் கூடு பாய்தல்)
எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால் நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
இலகிமா
பிராப்தி
ஈசத்துவம்
சித் -.................. , சித்தை உடையவர்கள் சித்தர்கள். நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம், சோதிடம், மந்திரம், இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்
புலமை
அறிவு
அனுபவம்
சித்தர்கள் தாங்கள் பின்பற்றிய கொள்கைகளைப் பொறுத்து மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பெறுகின்றனர். அவை...................
சன்மார்க்கச் சித்தர்கள் - திருமூலர், போகர்.
ஞானச் சித்தர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.
காயச் சித்தர்கள் - கோரக்கர், கருவூர்ச் சித்தர், மச்சமுனி, சட்டமுனி,சுந்தரானந்தர், உரோமரிஷி
ர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.
.......................... காலம் குறிப்பிடப்பட முடியாத பழமையானதாக இருக்கிறது. பண்டைத்தமிழரின் அறிவியல்அறிவின் சிகரமே சித்த வைத்தியமாகும். மனித குலத்தைக் காக்கும் பொருட்டு, அன்றைய கலாச்சாரத்திற்கேற்பவும், மனித வாழ்க்கை முறைக்கு தேவையான, அனைத்து ஆரோக்கிய முறைகளையும் மிக எளிய வைத்திய முறைகளை, அனைவரும் செய்துகொள்ளும் பொருட்டு தந்தனர்.
சித்தர்களின் வைத்திய முறைகள்
சித்த மந்திரம்
நவீன மருத்துவம்
...................... என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார்.இவரே அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர்.
திருமூலர்
அகத்தியர்
சட்டைமுனி
1. திருமூலர் 2 இராமதேவ சித்தர் 3 அகத்தியர் 4 இடைக்காடர் 5 தன்வந்திரி 6 வால்மீகி 7 கமலமுனி 8 போகர் 9 மச்சமுனி 10 கொங்கணர் 11 பதஞ்சலி 12 நந்தி தேவர் 13 போதகுரு 14 பாம்பாட்டி சித்தர் 15 சட்டைமுனி 16 சுந்தரானந்தர் 17 குதம்பைச்சித்தர் 18 கோரக்கர்
தமிழ்ச் சித்தர்கள்
சித்தர்கள்
18 தலையாய சித்தர்கள்
