NEW
Font size
Worksheets10/8/2020
Total questions: 15
Worksheet time: 8mins
நான் குளத்தில் நீந்திய ______________ பார்த்தேன். அதன் அழகில் மெய்ம்மறந்து போனேன்.
அண்ணத்தை
அன்னத்தை
கனத்த ____________ பெய்து வெள்ளப் பெருக்கை
உண்டாக்கியது. இதனால் மக்கள் பலர் திண்டாடினர்.
மாரி
மாறி
சிறுவர்கள் தங்களின் ஓய்வு _____________ திடலுக்குச் சென்று இன்பமாக விளையாடுகின்றனர். இதனால் அவர்களின் உடலும் உள்ளமும் வலுவடைகின்றனர்.
வேலைகளில்
வேளைகளில்
பலர், மிருகங்களின் _________________________ செய்யப்பட்ட பொருள்களை வாங்குகின்றனர். இதனால், சில மிருக இனங்கள் அழிந்து போகின்றன.
தோலால்
தோளால்
மாணவர்கள் நேரத்தை ஒரு ____________ கூட வீணாக்காமல் நேரத்தை பயனுள்ள வழிகளில் செலவழிக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
கணம்
கனம்
எங்கள் பள்ளி மண்டபத்தில் ஒரு பெரிய தூண் உள்ளது. அதில் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர்களின் பெயர்கள் __________ இருப்பதைக் காணலாம்.
பொரித்து
பொறித்து
கோமதி __________ உண்பதைத் தவிர்த்துவிட்டாள். அவள் எப்போதும் காய்கறி உணவு வகைகளையே விரும்பி உண்பாள்.
ஊன்
ஊண்
ஆசிரியர் மாணவர்களுக்குச் செய்யுள்களைக் கற்பிக்க நினைத்தார். அவர் ஒரு __________ பொருளை விளக்க கதையைச் சொன்னார்.
குறளின்
குரலின்
வரிக்குதிரைகள் காட்டில் கூட்டங்கூட்டமாக வாழும். அவை ____________ புல்வெளியில் புல் மேய்வதைக் காணலாம்.
பறந்த
பரந்த
நண்பர்கள் பூங்காவுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் மகிழ்ச்சியாக __________________ விளையாடினார்கள்.
கோலி
கோழி
என் தந்தை புதிய _______________ வாங்க விரும்புவதைப் பற்றி குடும்பத்தாருடன் கலந்து பேசினார்
மனை
மணை
வட்டாரத்தில் அதிகமான எலிகள் இருப்பதால் ________________ வைத்து அவற்றைப் பிடித்தனர்.
பொரி
பொறி
நடனப்போட்டி தொடங்க இன்னும் ____________ மணி நேரம் இருந்தது. போட்டியாளர்கள் அனைவரும் மேடையில் கூடினர்.
அரை
அறை
டிசம்பர் மாதம் உமா ஜப்பானுக்குச் சென்றாள். அங்கே பல இடங்களில் _____________ பெய்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தாள்
பணி
பனி
அம்மாவின் பிறந்தநாளுக்கு நான் அதிக________________ கொடுத்து ஒரு கைப்பை வாங்கினேன். அது மிகவும் அழகாக இருந்தது.
விளை
விலை
