WorksheetsXI Tha-Qiz19i
Total questions: 10
Worksheet time: 20mins
செய்யுளை சொல்லாலும் பொருளாலும் அழகு செய்யும் இலக்கணம் ________
சொல் இலக்கணம்
பொருள் இலக்கணம்
அணி இலக்கணம்
யாப்பு இலக்கணம்
உவமையை மட்டும் கூறி உவமேயத்தை பெற வைக்கும் அணி______
உருவக அணி
பிறிது மொழிதல் அணி
வேற்றுமை அணி
உவமை அணி
இரு பொருள்களுக்குரிய ஒற்றுமையைக் கூறி பின் அவற்றில் இருந்து ஒன்றை வேறுபடுத்திக் காட்டுவது _________
உவமை அணி
உருவக அணி
வேற்றுமை அணி
பிறிது மொழிதல் அணி
வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து தந்த பொருளையே மீண்டும் தருவது ____________அணி
சொல் பின்வருநிலையணி
சொற் பொருள் பின்வருநிலையணி
பொருள் பின்வருநிலையணி
பிறிது மொழிதல் அணி
‘போல’ என்ற உவம உருபு வெளிப்படையாக வரும் அணி எது?
உவமை அணி
எடுத்துக்காட்டு உவமை அணி
உருவக அணி
ஏகதேச உருவக அணி
தவமிருப்பவரைத் துன்பம் வருத்த வருத்த _________வளரும்
புகழ்
ஞானம்
செல்வம்
செல்வாக்கு
உவமையும் உவமேயமும் வெவ்வேறாக இல்லாமல் இரண்டும் ஒன்றாக இருப்பது __________ அணி
வேற்றுமை அணி
பிறிது மொழிதல் அணி
உருவக அணி
உவமை அணி
பிறரை எதிர்பார்த்து இரந்து வாழ்தல் என்பது எதைப்போன்றது?
பாய்மரம்
பாதுகாப்பற்ற படகு
நங்கூரம்
பாதுகாப்பான படகு
புடமிடச் சுடுகையில் ஒளிவிடுவது எது?
வெள்ளி
பொன்
வைரம்
வைடூரியம்
‘ இளைதாக முள்மரம் கொல்க’ இந்தப் பாடல் உணர்த்தும் அணி __
பிறிது மொழிதல் அணி
உருவக அணி
வேற்றுமை அணி
உவமை அணி
