wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

ILAModule Theme - 4

Total questions: 31

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

MODule 15 ன் பெயர் என்ன?

a)

நோயுற்ற காலத்தில் உணவு ஊட்டுதல்

b)

கங்காரு தாய் பராமரிப்பு உதவியுடன் பலவீனமாக பிறந்த குழந்தையை கவனிப்பது எவ்வாறு

c)

தாய்ப்பால் புகட்டுவதில் பிரச்சனை உள்ள தாய்மார்களுக்கு உதவுதல்

d)

குழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பிடுதல்

2.

பிறந்த குழந்தைகளில் தாய்ப்பால் குடிப்பதில் உள்ள பிச்சனைகள்

a)

குழந்தைக்கும் தாயின் மார்பககத்தில் உள்ள தவறான இணைப்பு

b)

தேவையான வலிமையுடன் தாய்ப்பால் குடிக்க இயலாமை

c)

நோயுற்ற போது குறைவாக தாய்ப்பால் குடித்தல் அல்லது தாய்ப்பால் குடிப்பதில் விருப்பம் இல்லாமை

d)

புட்டிப் பால் புகட்டுவதால் தாய்ப்பால் அருந்துவது குறைக்கப்படுவதால்

e)

இவை அனைத்தும்

3.

கீழ்க்கண்டவற்றுள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள பிரச்சனை அல்லாதது எது?

a)

மார்பகக் காம்புகளில் புண்

b)

உள் வாங்கிய முலைக்காம்பு

c)

மார்பகபால் கட்டிகள்

d)

இரவு நேரங்களில் தாய்ப்பால் ஊட்டுதல்

4.

தாய் வசதியாக அமர்ந்தோ(அ) படுத்தோ தாய்ப்பால் தரவில்லை என்றாலும் குழந்தையால்நீண்ட நேரம் பால் குடிக்க முடியும்?

a)

சரி

b)

தவறு

5.

ஆரோக்கியமான பச்சிளம் குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாததற்கான காரணங்கள்

a)

தாய் வசதியாக அமர்ந்து (அ) படுத்து தாய்ப்பால் தராதது

b)

குழந்தையை தாய்ப்பால் குடிக்க வசதியாக பிடித்துக் கொள்ளாதது

c)

மார்பகத்தில் உள்ள கருமை நிற பகுதி முழுவதும் குழந்தையின் வாயில் இல்லாதது.

d)

தாய்ப்பால் குடிக்கும் பொழுது குழந்தை தூங்கு விடுவது, குழந்தை தலை பின்னோக்கி சய் வாக இல்லாது

e)

இவை அனைத்தும்

6.

ஒரு ஆரோக்கியமான குழந்தை ஒவ்வொரு முறை பால் குடிக்கும் போதும் ஒரு மார்பகத்தில் முழுவதும் குடித்துவிட்டு இரண்டாவது மார்பகத்தில் ஒரு பகுதியாவது குடிக்கும்

a)

சரி

b)

தவறு

7.

பின்வருவனவற்றுள் பலவீனமான குழந்தைக்கு வழங்கப்படும் கூடுதல் கவனிப்பு எது?

a)

குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது

b)

தேவைப்பட்டால் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் குடிக்க வைத்தல்

c)

குழந்தையைக் கதகதப்பாக வைக்க கங்காரு பராமரிப்பு முறையை பயன்படுத்தல்

d)

இவை அனைத்தும்

8.

தாய்ப்பால் குடிக்கும் போது சீக்கிரம் சோர்வாகி தூங்கி விடும்' பலவீனமான குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்கக் கூடாது

a)

சரி

b)

தவறு

9.

ஒரு குழந்தை மிகச் சிறிதளவோ தாய்ப்பால் குடித்தாலும் (அ) தாய்ப்பாலே குடிக்க வில்லை என்றாலும் அதனை வீட்டில் வைத்து பராமாரிக்கலாம்

a)

சரி

b)

தவறு

10.

பலவீனமான குழந்தை தாய்ப்பால் குடிக்க வில்லை என்றால் புட்டிப் பால் புகட்டலாம்?

a)

சரி

b)

தவறு

11.

தாய்ப்பால் குடிக்க இயலாத பலவீனமான குழந்தைகள் விஷயத்தில் அங்கன்வாடி பணியாளர் என்ன செய்ய வேண்டும்

a)

குழந்தை பிறந்தவுடன் முதல் வாரத்தில் சென்று வீடுகள் பார்வையிட வேண்டும்

b)

பார்வையிட்ட குழந்தை பலவீனமான குழந்தையா என கண்டறிய வேண்டும்

c)

குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பதில் ( அ) ெகாடுப்பதில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய வேண்டும்

d)

குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பதில் (அ) ெகாடுப்பதில் பிரச்சனை இருப்பின் தகுந்த ஆதரவு (ம) ஆசோசனை வழங்க வேண்டும்

e)

இவை. அனைத்தும்

12.

மார்பகக் காம்பிற்கு பின்னால் உள்ள பெரிய குழாய்களில் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது?

a)

சரி

b)

தவறு

13.

பலவீனமாக பிறந்த குழந்தை (அ) நோயுற்ற குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாத போது தாய்ப்பாலை கைகளால் வெளிப்படுத்துக் கொடுக்க வேண்டும்.

a)

சரி

b)

தவறு

14.

பலவீனமாக பிறந்த குழந்தை (அ) நோயுற்ற குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாத போது தாய்ப்பாலை கைகளால் வெளிப்படுத்திக் கொடுக்க வேண்டும்

a)

சரி

b)

தவறு

15.

போதுமான அளவு தாய்ப்பால் வெளியேற்ற ஐந்து நிமிடங்கள் பேதுமானது..

a)

சரி

b)

தவறு

16.

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை பாதுகாத்தல்

a)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் உள்ள கிண்ணத்தை உடனடியாக மூடி வைக்க வேண்டும்.

b)

பாலை குளிர்ந்த சுகாதராணமான உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்

c)

குழந்தைக்கு சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கும் முன் ஒரு போதும் சூடாக்க கூடாது.

d)

சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை 6 மணி நேரத்திற்கு மேலாக வைத்திருக்க கூடாது.

e)

இவை அனைத்தும்

17.

வெளியேற்றிய தாய்ப்பாலை கொடுப்பதற்கு முன் ஒவ்வொரு முறையும் குழந்தை நேரடியாக தாய்ப்பால் குடிக்கிறதா என முயற்சி செய்ய வேண்டும்?

a)

சரி

b)

தவறு

18.

குழந்தை சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை குடிக்க வில்லை என்றால் குழந்தையின் வாயில் ஊற்றலாம் இதனால் குழந்தைக்கு அடைப்பு ஏற்படாது.

a)

சரி

b)

தவறு

19.

மார்பக பால் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது ?

a)

மார்பகங்கள் வீக்கம் ஆகவும் தொடும் போது வலியுடன் இருக்கும்

b)

தாய்க்கு காய்ச்சலாக இருக்கும்

c)

தயால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது.

d)

தாய்ப்பால் குடிக்கத குழந்தை பசி (ம) எரிச்சலுடன் காணப்படும்

e)

இவை அனைத்தும்

20.

குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவதை விட கிண்ணத்தில் தாய்ப்பால் புகட்ட நீண்ட நேரம் ஆகும்

a)

சரி

b)

தவறு

21.

கீழ்கண்டவற்றுள் தாய்க்கு மார்பக பால் கட்டிகள் இருக்கும் போது செய்ய கூடாதது எது?

a)

சூடான துணியை பயன்படுத்தி மார்பகத்தை மசாஞ் செய்யலாம்

b)

பாலை வெளிப்படுத்த மார்பகங்களை தயார் செய்யலாம்

c)

இரு மார்பகங்களில் இருந்தும் முழுமையாக பாலை வெளியேற்றலாம்

d)

பிரச்சினை உள்ள போது குழந்தை பசியாற புட்டிபால் பயன்படுத்தலாம்

22.

மூலைக் காம்பில் புண் ஏற்படுவதற்கான காரணங்கள்

a)

இணைப்பு சரியாக இல்லாதது

b)

புட்டிப் பால் புகட்டுவது

c)

சுத்தம் செய்யசோப்பை பயன்படுத்துவது

d)

தாய்ப்பாலை புண் உள்ள முலைக்காம்பில் தடவுவது

e)

A,B, C சரியான வ

23.

கீழ்கண்ட வற்றுள் பலவீனமான குழந்தை எது?

a)

மூன்று கிலோ எடையுடன் பிறந்த குழந்தை

b)

8 1/2 மாதத்திற்கு முன் பிறந்த குழந்தை

c)

தாய்ப்பால் குடிக்கும் குழந்தை

24.

16 வது Module-ன் பெயர் என்ன?

a)

தாய்ப்பால் ஊட்டுவதில் பிரச்சனை உள்ள தாய்மார்களுக்கு ஆதரவு அளித்தல்.

b)

நோயுற்ற காலத்தில் உணவளித்தல்

c)

கங்காரு தாய் பராமரிப்பு உதவியுடன் பலவீனமாக பிறந்த குழந்தையை கவனிப்பது எவ்வாறு |

d)

பெண்களிடையே உள்ள இரத்த சோகை தடுத்தல்

e)

பெண்களிடையே உள்ள இரத்த சோகையை தடுத்தல்

25.

மிகவும் பலவீனமாக உள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு கங்காரு தாய் பராமரிப்பு பயன் தருமா?

a)

ஆம்

b)

இல்லை

26.

கங்காருவின் கரு ஒரு மாதத்திலேயே பிறந்து விடுகிறது?

a)

சரி

b)

தவறு

27.

கீழ்க்காணும் கங்காரு தாய் அரவணைப்புமுறையின் முக்கிய படிகளில் தவறானதை தேர்ந்தெடுக்கவும்?

a)

குழந்தையின் ஆடையை நீக்கிவிட்டு தோலோடு தோல் சேர்த்து அரவணைத்து பாது காக்க வேண்டும்

b)

தலைக்கு தொப்பி மற்றும் காலுரை அனுவித்து வெதுவெதுப்பாக வைக்க வேண்டும்.

c)

குழந்தையின் தாய் மட்டுமே இம்முறையை பயன்படுத்த வேண்டும்

d)

பச்சிளம் குழந்தையை வசதியான நிலைகளின் பிடிக்க வேண்டும்.

28.

பச்சிளம் குழந்தைகங்காரு தாய் பராமரிப்பில் இருக்கு போது தாய்ப்பால் சுரப்பு குறைவாக இருக்கும்?

a)

சரி

b)

தவறு

29.

கங்காரு தாய் அரவணைப்புமுறையை குடும்பத்தில் உள்ளோர் பகிர்ந்துக் கொள்வதால்

a)

தாய் தனது தினசரி வேலைகளை மேற்கொள்ளலாம்

b)

தாய்க்கு போதுமான ஒய்வு கிடைக்கும்

c)

அ) சரி மற்றும் ஆ) தவறு

d)

அ) மற்றும் ஆ) இரண்டும் சரி

30.

கங்காரு தாய் பராமரிப்பில் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள் யாவை?

a)

வெதுவெதுப்பை அளிக்கிறது

b)

நோய் தொற்றிலிருந்து பாது காக்கிறது.

c)

அடிக்கடி தாய்ப்பால் கொடுக்க உதவுகிறது

d)

குழந்தைக்கு ஏதேனும் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக கண்டறிய முடிகிறது

e)

இவை அனைத்தும்

31.

கங்காரு முறை தாய் பராமரிப்பை எத்தனை நாட்கள் நடைமுறைப்படுத்த வேண்டும், ?

a)

குழந்தைக்கு தாயின் அரவணைப்பு தேவைப்படும் வரை

b)

குழந்தை தாய்ப்பால் குடிக்கும் வரை

c)

குழந்தையின் எடை 2.5 கிலோவாக அதிகரிக்கும் வரை

d)

குழந்தை பிறந்து ஒரு மாதம் ஆகும் வரை

e)

இவை அனைத்தும்