Font size
WorksheetsILA Module 20 Tamil
Total questions: 25
Worksheet time: 13mins
சரியான மருத்துவமனை என்பது...
நகரத்தில் உள்ள புகழ்பெற்ற மருத்துவமனை
எல்லா மருத்துவ வசதிகளும் கொண்ட 24 மணி நேரமும் செயல்படுகிற, அருகில் உள்ள மருத்துவமனை
அதிகக் கட்டணம் வசூலிக்கும் நவீன மருத்துவமனை
பெருநகரத்தில் உள்ள பெரிய மருத்துவமனை
பிரசவத்துக்கான போக்குவரத்து வசதிகளைத் தயார் செய்து வைத்துக்கொள்வது எப்படி?
பயன்படுத்தப்போகும் வாகனத்தை முன்கூட்டியே தீர்மானித்தல்
ஓட்டுநரின் தொடர்பு எண்ணைப் பெற்று வைத்துக்கொள்ளூதல்
அருகில் உள்ள இலவச மருத்துவ வாகன சேவையின் தகவல்களைப் பெற்று வைத்துக்கொள்ளுதல்
மேற்கண்ட அனைத்தும்
மருத்துவமனை பிரசவத்தின்போது உதவிக்கு உடனிருக்கவேண்டியவர் யாவர்?
அ) பிரசவத்தின்போது உடன் இருந்து உதவுவதற்கு ஒருவர்
ஆ) வீட்டைக் கவனித்துக்கொள்ள ஒருவர்.
இ) அ மற்றும் ஆ
எவரும் தேவை இல்லை
பிரசவம் வீட்டில் நடைபெறுமானால் சுத்தமான - பிளேடு, நூல், தரை விரிப்பு, துணிகள் ஆகியவற்றை எப்போதிலிருந்து தயாராக வைத்திருக்கவேண்டும்?
மூன்றாம் மாதத்திலிருந்து
ஐந்தாம் மாதத்திலிருந்து
ஏழாம் மாதத்திலிருந்து
ஒன்பதாம் மாதத்திலிருந்து
பிரசவத்துக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டிருக்க வேண்டிய காலம் எது?
ஏழாம் மாதத்துக்குள்
மூன்றாம் மாதத்துக்குள்
ஒன்பதாம் மாதத்துக்குள்
ஐந்தாம் மாதத்துக்குள்
பிரசவகால முன்னேற்பாடுகளை உறுதிப்படுத்துவதற்கு 7-9 மாதத்தில் (third trimester) கர்ப்பிணியை அங்கன்வாடி பணியாளர் குறைந்தபட்சம் எத்தனை முறை பார்வையிட்டிருக்க வேண்டும்?
இரு முறை
ஒரு முறை
மூன்று முறை
பார்வையிடத் தேவையில்லை.
பிரசவம் நடைபெற வேண்டிய மருத்துவமனை இதுதான் என்று எந்த மாதத்துக்குள் உறுதிப்படுத்தி வைத்திருக்கவேண்டும்?
முதல் மூன்று மாதங்களுக்குள்
ஒன்பதாம் மாதத்துக்குள்
ஏழாம் மாதத்துக்குள்
எப்போது வேண்டுமானாலும்
வீடுகள் பார்வையிட திட்டமிடுதல் பதிவேட்டில் எத்தனையாவது கலத்தில் (Column No.) கர்ப்பத்தின் மூன்றாவது காலாண்டு (third trimester of pregnancy) குறிக்கப்படவேண்டும்?
கலம் எண். 2 (Column No. 2)
கலம் எண். 3 (Column No. 3)
கலம் எண். 4 (Column No. 4)
கலம் எண். (Column No. 5)
குழந்தை பிறந்ததும் தொப்புள்கொடியை வெட்டும் முன் குழந்தையை எங்கு எப்படி வைக்க வேண்டும்?
நன்றாகத் துடைத்து ஒரு சுத்தமான துணியில் சுற்றி தனியாக வைக்கவேண்டும்.
நன்றாகத் துடைத்து ஒரு சுத்தமான துணியில் சுற்றி தாயின் வயிற்றின் மீதோ அல்லது மார்பின் மீதோ வைக்கவேண்டும்.
நன்றாகத் துடைத்து, துணிகள் ஏதும் சுற்றாமல் தாயின் வெற்றுடம்பில் வயிற்றின் மீதோ அல்லது மார்பின் மீதோ தோலோடு தோல் சேரும்படி வைக்கவேண்டும்.
நன்றாகத் துடைத்து ஒரு சுத்தமான துணியில் சுற்றி தாயின் அருகில் வைக்கவேண்டும்.
தொப்புள்கொடியை வெட்டிய உடனோ, வெட்டிய பிறகோ, தொப்புள்கொடி காய்ந்து விழுந்த பிறகோ அதன் மீது தடவ வேண்டிய பொருட்கள் என்னென்ன?
களிம்பு மருந்துகள்
சாணம்
சாம்பல்
எதையுமே தடவக் கூடாது.
குழந்தை பிறந்த பிறகு எத்தனை மணி நேரத்துக்குள் தாய்ப்பாலூட்டத் துவங்கவேண்டும்?
குழந்தை பிறந்த 30 நிமிடங்களுக்குள்
குழந்தை பிறந்த 45 நிமிடங்களுக்குள்
குழந்தை பிறந்தவுடன் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்த்னை சீக்கிரம்
குழந்தை பிறந்த 60 நிமிடங்களுக்குள்
ஒரு குழந்தை பிறந்த பிறகு எத்தனை குறுகிய காலத்துக்குள் அடுத்த கர்ப்பம் தரிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது?
12 வாரங்களுக்குள் (மூன்று மாதங்களுக்குள்)
6 வாரங்களுக்குள் (ஒன்றரை மாதங்களுக்குள்)
24 வாரங்களுக்குள் (ஆறு மாதங்களுக்குள்)
28வாரங்களுக்குள் (ஏழு மாதங்களுக்குள்)
குழந்தை பிறந்தவுடன் கட்டாயமாகக் கடைபிடிக்கவேண்டிய பராமரிப்பு முறைகள் ஏதேனும் மூன்றை டிக் செய்யவும்
குழந்தையை நன்றாகத் துடைத்து சுத்தமான துணியில் சுற்றி தாயின் அருகில் வைக்கவேண்டும்
குழந்தையை நன்றாகத் துடைத்து தாயின் வெற்றுடம்பில் தோலோடு தோல் படும்படி மார்பு/வயிற்றின் மீது கதகதப்பாக வைக்கவேண்டும்.
தொப்புள் கொடியின் மீது களிம்பு மருந்துகள் தடவி சுத்தமாகப் பராமரிக்கவேண்டும்
தொப்புள் கொடியின் மீது எதையும் தடவக்கூடாது. சுத்தமாகப் பராமரிக்கவேண்டும்
குழந்தை பிறந்தவுடன் எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் தாய்ப்பாலூட்ட வேண்டும்.
குழந்தை பிறந்தவுடன் செய்யப்படுகிற பச்சிளம் குழந்தை பராமரிப்பு முறைகளால் ஏற்படும் நன்மைகள் ஏதேனும் இரண்டை டிக் செய்யவும்
பலவீனமான குழந்தையைக் கண்டறிந்து தேவையான பராமரிப்பு அளிக்க முடியும்
கூடுதல் கவனிப்பு தேவைப்படுகிற குழந்தைகளை உடனடியாகக் கண்டறிய முடியும்
குழந்தை எதிர்காலத்தின் புத்திசாலியாக வளரும்
குழந்தை அழகாக இருக்கும்
பலவீனமான குழந்தை என்பது எது?
அ) பிறப்பு எடை 2000 கிராமுக்குக் குறைவாகப் பிறந்த குழந்தை
ஆ) 37 வார கர்ப்பகாலம் முடிவடையும் முன் பிறந்த குழந்தை
இ) 28-ம் வாரம் முடிவடையும் முன் பிறக்கும் குழந்தை
ஈ) பிறப்பு எடை 2000 - 2500 கிராமுக்குள் உள்ள குழந்தை
உ) அ மற்றும் ஆ
KMC என்பது
கனிவான பச்சிளங்குழந்தை பராமரிப்பு - Kind Mother Care
முன்பருவக் கல்விக் குழந்தை பராமரிப்பு - Kindergarten Mother Care
கங்காரு முறை பச்சிலங்குழந்தை பராமரிப்பு - Kangaroo Mother Care
கதகதப்பான பச்சிளங்குழந்தை பராமரிப்பு - Keep warm Mother Care
ஒவ்வொரு மாதமும் பெண்ணின் அண்டத்திலிருந்து முட்டை வெளியேறுதல் கீழ்கண்டவாறு அழைக்கப்படுகிறது
அண்டவிடுவிப்பு
கருவுறுதல்
மாதவிடாய்
கரு பதித்தல்
ஒவ்வொரு மாதமும் கருவுறாத முட்டை சிதைந்து கருப்பையிலிருந்து வெளியேறுவதை இவ்வாறு குறிப்பிடுகிறோம்
கருச் சிதைவு
கருவுறுதல்
மாதவிடாய்
அண்ட விடுவிப்பு
முட்டை அண்டத்திலிருந்து விடுவிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் விந்துவோடு இணைந்தால் அது கீழ்கண்டவாறு குறிப்பிடப்படும்
அண்ட விடுவிப்பு
கருவுறுதல்
கருச்சிதைவு
மாதவிடாய்
கருவுற்ற முட்டை கருப்பையோடு இணைவதை எவ்வாறு அழைக்கிறோம்?
கருவுறுதல்
கரு உருவாகுதல்
கருச்சிதைவு
கரு பதித்தல்
குழந்தை பிறந்த பிறகு எத்தனை வாரங்களில் மீண்டும் அண்டத்திலிருந்து முட்டை வெளியேறும் வாய்ப்பு உள்ளது?
4 வாரங்களில்
6 வாரங்களில்
10 வாரங்களில்
12 வாரங்களில்
அண்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட முட்டை கருவுறுதலுக்காக எத்தனை நாட்கள் கருப்பையில் காத்திருக்கும்?
12 நாட்கள்
14 நாட்கள்
20 நாட்கள்
22 நாட்கள்
ஒரு பிரசவம் முடிந்தவுடன் அடுத்த கர்ப்பத்தைத் திட்டமிடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன? (ஒன்றுக்கு மேற்பட்ட சரியான பதிலை டிக் செய்யலாம்)
அளவான குழந்தை பிறப்பைத் திட்டமிட இயலும்
வேண்டாத கருத்தரிப்பைத் தவிர்க்க இயலும்
பாதுகாப்பற்ற கருச்சிதைவினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர்க்க இயலும்
பணத்தைச் சேமிக்க இயலும்
முதல் குழந்தைப் பிறப்புக்குப் பிறகு பரிந்துரைக்கப்பட வேண்டிய கருத்தடை முறை எது?
தற்காலிகக் கருத்தடை முறைகள்
நிரந்தரக் கருத்தடை முறைகள்
கருத்தடை முறைகள் தேவையில்லை
ஒரு குடும்பம் ‘இனி குழந்தை பிறப்பு வேண்டாம்’ என்று முடிவுசெய்தால் தேர்ந்தெடுக்கப்படவேண்டிய கருத்தடை முறை எது?
தற்காலிகக் கருத்தடை முறை
நிரந்தரக் கருத்தடை முறை
கருத்தடை முறைகள் ஏதும் தேவையில்லை
