Worksheetsவகுப்பு 9 - இலக்கணத்தேர்வு -1
Total questions: 18
Worksheet time: 18mins
அந்தோ! பரிதாபம்.- எவ்வகைத்தொடர்?
செய்தித்தொடர்
இரக்கச்செய்தி
உணர்ச்சித்தொடர்
தன்வினைத்தொடர்
"செய்தாய்"- இச்சொல்லின் விகுதி _________.
பவர்பால் வினைமுற்று விகுதி
தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
வினையெச்ச விகுதி
க,இய,இயர் என்பன _________ விகுதிகள்
வினையெச்ச விகுதிகள்
பெயரெச்ச விகுதிகள்
வியங்கோள் வினைமுற்று விகுதிகள்
தொழிற்பெயர் விகுதிகள்
தொழிற்பெயருக்கு சான்று தருக.
சிரிக்கிறேன்
சிரித்தான்
சிரித்தல்
சிரித்தாள்
ஆண்பால் வினைமுற்று விகுதிகளுக்கு சான்று தருக.
அன்,ஆன்
அல்,ஆள்
அர்,ஆர்
என்,ஏன்
பகுபத உறுப்புகளின் எண்ணிக்கை ________.
4
5
6
7
இடைநிலைகள் _______ வகைப்படும்.
3
5
4
6
பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி,விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து _________ எனப்படும்.
எழுத்துப்பேறு
சொற்பேறு
பகுபதம்
பகாபதம்
செய்பவரை முதன்மைப்படுத்தும் வினை _______.
செய்வினை
செயப்பாட்டுவினை
எழுவாய்
பயனிலை
பந்தை உருட்ட வைத்தான் - எவ்வகைத்தொடர்?
தன்வினை
பிறவினை
தனிவினை
கூட்டுவினை
முன்னேறு எனும் சொல் எவ்வகை கூட்டுவினை?
பெயர்+வினை
வினை+வினை
இடை+வினை
விடை+வினை
பேச்சுமொழியில் ஆதிக்கம் செலுத்துவது _________ வினை.
தன்வினை
பிறவினை
தனிவினை
துணைவினை
தமிழில் ஏறத்தாழ ________ துணைவினைகள் உள்ளன.
20
30
40
42
தனிவினையாகவும்,கூட்டுவினையாகவும் வரும் வினைச்சொல்லுக்கு ஒரு _______ ஆகும்.
பார்
ஓடு
முன்
கீழ்
வினை+வினை=வினை - சான்று தருக.
தந்தி+அடி=தந்தியடி
கண்டு+பிடி=கண்டுபிடி
பின்+ஏறு=பின்னேறு
முன்+ஏறு=முன்னேறு
வினைச்சொற்கள் அமைப்பின் அடிப்படையில் ______ வகைப்படும்.
2
3
4
5
கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படைப் பொருளைத் தரும் வினை ________ எனப்படும்.
தனிவினை
கூட்டுவினை
முதல்வினை
துணைவினை
புத்தகம் மேசையில் இருக்கிறது- இத்தொடரில் "இரு" என்னும் சொல் _______ வினை.
முதல்வினை
துணைவினை
தன்வினை
கூட்டுவினை
