wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் கேள்விகள்

Total questions: 25

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தமிழ் மொழி இலக்கணத்தில் இடம்பெறும் பெயர்ச் சொற்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஆறு

2.

"அந்த" எனும் சுட்டுப் பெயர் இவற்றுள் எங்கு அமைந்திருப்பதைக் காட்டுகின்றது?

a)

அருகாமையில்

b)

அருகில்

3.

"இடையன் - இடைச்சி" என்ற பெயர்ச் சொற்கள் இவற்றுள் எந்த வகையைச் சார்ந்தது?

a)

உறவுப் பெயர்

b)

அளவுப் பெயர்

c)

தொகுதிப் பெயர்

d)

சாதிப் பெயர்

4.

"கந்தம்" என்பது அளவுப் பெயரின் எந்த வகையில் காணப்படுகின்றது?

a)

எண்ணல்

b)

நீட்டல்

c)

முகத்தல்

d)

எடுத்தல்

5.

"படித்தான்" என்ற வினைமுற்றினுடைய எந்த மேற்படி கருத்து சரியாக இணைக்கப்பட்டுள்ளது?

a)

செய்பவன் (ஆசிரியர்)

b)

இடம் (வகுப்பறை)

c)

எண் (பன்மை)

d)

செய்பொருள் (புத்தகம்)

6.

பின்வருவனவற்றுள் எந்த வாக்கியத்தில் எதிர்மறை ஏவல் பன்மை வினைமுற்று இடம்பெற்றுள்ளது?

a)

நீங்கள் தேடுங்கள்!

b)

நீ பேசாதே!

c)

நீங்கள் விடாதீர்கள்!

d)

நீ தூங்கு!

7.

க, இய, இர் போன்ற ஈற்றுகளைப் பெரும்பாலும் கொண்டு விளங்கும் வினைமுற்று எது?

a)

குறைவினை

b)

வியங்கோள் வினை

c)

கூட்டுவினை

d)

துணைவினை

8.

செய்வினை வாக்கியம் செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றப்படும் போது எந்த வேற்றுமை உருபு எழுவாயோடு புணர்கிறது?

a)

மூன்றாம் வேற்றுமை உருபு

b)

ஐந்தாம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

d)

ஏழாம் வேற்றுமை உருபு

9.

ஒரு குறைவினை பால் குறித்த செய்தியைத் தருமா?

a)

ஆம்

b)

இல்லை

10.

"செய்து பார்த்தார்" என்ற துணைவினை காட்டும் "இயல்பினை ஆராய்தல்" இவற்றுள் எந்தக் கருத்தையொட்டி அமைந்துள்ளது?

a)

காலம்

b)

செயல்நிலை

c)

மனோநிலை

d)

வினைமை

11.

"துன்பப்படு" எனும் கூட்டுவினை எந்த வகையைச் சார்ந்தது?

a)

பெயர் + வினை

b)

வினை + வினை

c)

இடை + வினை

12.

கீழ்க்காணும் எந்த விகுதி(கள்) எதிர்கால வினையெச்சத்தைக் குறிக்கின்றது/ன?

a)

"அ"

b)

"து" மற்றும் "இ"

c)

"இன்" மற்றும் "ஆல்"

d)

"ஆ", "து" மற்றும் "மல்"

13.

கீழ்காணும் பெயரடைகளுள் எந்தப் பெயரடை தனிப்பெயரடை மற்றும் கூட்டுப்பெயரடை என இரண்டு வகைகளிலும் இடம்பெற்றுள்ளது?

a)

இருண்ட

b)

பெரிய

c)

மட்டற்ற

d)

பண்டை

14.

"அவர் கூறுவதைக் கொஞ்சமாவது ஏற்பாயோ." என்ற வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள ஓகார இடைச்சொல் எந்தப் பொருளைத் தருகிறது?

a)

சிறப்புப் பொருள்

b)

இசைநிறைப் பொருள்

c)

இழிவுச் சிறப்புப் பொருள்

d)

ஐயப்பொருள்

15.

பின்வரும் வாக்கியங்களுள் எந்த ஏகார இடைச்சொல் உறுதிப்பொருளை வழங்கும் பொருட்டு இடம்பெற்றுள்ளது?

a)

அடிவாங்கியவன் கண்ணனே?

b)

அடிவாங்கியது கண்ணனே.

c)

திருடன் கண்ணனே!

16.

"சேதிபன் வீட்டை இழந்தான்" என்ற வாக்கியத்தில் இடம்பெற்றுள்ள "ஐ" உருபு எந்த வேற்றுமைப் பொருளை விளக்குகிறது?

a)

அழித்தல்

b)

நீத்தல்

c)

உடைமை

d)

ஆக்கம்

17.

"உடமை" என்ற வேற்றுமைப் பொருளை மட்டும் தரும் வேற்றுமை உருபு எது?

a)

இரண்டாம் வேற்றுமை உருபு

b)

நான்காம் வேற்றுமை உருபு

c)

ஆறாம் வேற்றுமை உருபு

d)

ஏழாம் வேற்றுமை உருபு

18.

"கீதா" எனும் பெயர்ச்சொல் "கீதை! " என்ற விளி மாற்றம் பெற்றால் அப்பெயர்ச்சொல் எவ்வகை ஈறு மாற்றம் அடைந்துள்ளது?

a)

இயல்பாதல்

b)

குன்றல்

c)

ஈறு திரிதல்

d)

ஈற்றயல் திரிதல்

19.

"இ" மற்றும் "ஐ" என்ற வினைவிகுதிகள் எந்தப் பால் வகையைச் சார்ந்தது?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

20.

"நடிக்கின்றாள்" என்ற வினைமுற்றில் இடம்பெற்றுள்ள கால இடைநிலை எது?

a)

க்

b)

இன்

c)

கின்று

d)

இன்று

21.

"ஏற்றினான்" என்ற வினைமுற்றில் எந்தத் தொழில்பெயர் விகுதியைச் சேர்த்தால் அவ்வினைமுற்று பெயர்ச்சொல்லாக மாறும்?

a)

b)

வை

c)

தி

d)

அம்

22.

"பட்டினத்தான்" எனும் சொல்லில் எந்தச் சாரியை இடம்பெற்றுள்ளது?

a)

அற்று

b)

அத்து

c)

அன்

d)

23.

"ய்" எனும் கால இடைநிலை எக்காலத்தைக் குறிக்கின்றது?

a)

இறந்த காலம்

b)

நிகழ்காலம்

c)

எதிர்காலம்

24.

"தந்தனன்" எனும் சொல்லைப் பிரித்துக் காட்டுக.

a)

தா + ந் + த் + அன் + அன்

b)

த + ந்த + ன் + அன்

c)

தந்த + ன் + அன்

d)

தா + ந் + த் + அன்

25.

"வல்லுநர்" எனும் சொல்லைப் பிரித்துக் காட்டுக.

a)

வல்லு + நர்

b)

வல் + உ + நர்

c)

வல் + உ + ந + அர்

d)

வல் + உ + ந் + அர்