NEW
Font size
Worksheetsதமிழ் கேள்விகள்
Total questions: 26
Worksheet time: 13mins
வட்டி முதலையிடம் வாங்கிய பெரும் தொகையைத் திரும்பத் தர முடியாமல் ________________ ஆனார், வேல்முருகன்.
இடியோசை கேட்ட நாகம் போல
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
நாடு போற்றும் பல நல்ல செயல்களைச் செய்து வந்த அந்த அமைப்பில் தீய எண்ணம் கொண்ட அமுதன் சேர்ந்தவுடன் __________________ அந்த அமைப்பு தற்போது துரோக அமைப்பாக மாறிவருகிறது.
(உவமைத்தொடர்)
உயிரும் உடம்பும் போல
நல்ல மரத்தில் புல்லுருவு பாய்ந்தது போல
தனக்கு எல்லாம் தெரியும் என மார்த்தட்டிக் கொண்டிருந்த செல்வத்தை மேடையில் பேச அழைத்தபோது திருதிருவென விழித்து நின்றது, அவன் தற்பெருமைக்காரன் என்ற _____________
(மரபுத்தொடர்)
பூசி மெழுகுதல்
சாயம் வெளுத்தது
____________ பார்க்காமல் உழைத்தவர்கள் வாழ்வில் என்றும் வீழ்ந்ததுஇல்லை, என அப்பா மகனிடம் கூறினார்.
(இணைமொழி)
இன்ப துன்பம்
கால நேரம்
கொடுக்கப்பட்ட பொருளுக்கு ஏற்ற பழமொழியை எழுது.
குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படாவிட்டால் அழிவுக்கு வழிவகுத்து விடும்.
கொல்லைக்குப் பல்லி , குடிக்குச் சகுனி
ஒற்றுமியில்லாக் குடும்பம் ஒருமிக்கக் கெடும்
(பழமொழியை எழுது)
மேலோட்டமாகப் பலவற்றை அறிந்து கொள்வதைக் காட்டிலும் ஒரு துறையில் ஆழமான அறிவைப் பெறுவதே சிறப்பு
அகல உழுவதினும் ஆழ உழுவது மேல்
குரங்கின் கைப் பூமாலை
(பழமொழியை எழுது)
நாம் கற்றறிந்தது மிகச் சிலவே; இன்னும் கற்க வேண்டியவை நிறைய உள்ளன.
கற்றது கைம்மண் அளவு கல்லாத்தது உலகளவு.
நூற்றுக்கு மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு
(பழமொழியை எழுது)
கடல் கடந்து சென்றும் செல்வம் தேட வேண்டும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
அகரம் குழுமத்தின் தலைமை அதிகாரி சரவணன் ஒரு __________ .
அவர் பல ஏழை குழந்தைகளின் கல்வி நலனுக்காகப் பல லட்ச வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கருணைக் கடல்
சாயம் வெளுத்தது
நிறை குடம்
அருள் ஆடி மக்களை ஏமாற்றி வந்த சாமியாரின் ____________
காதில் பூ வைத்தது
சாயம் வெளுத்தது
தட்டிக் கொடுத்தது
அதிகம் தெரிந்திருந்தும் அடக்கமாக இருத்தல் - மரபுத்தொடரைத் தேர்ந்தெடு
நிறைகுடம்
கருணைக் கடல்
காதில் பூ வைத்தல்
’நிலத்தினும் பெரிதே’ எனத் தொடங்கும் குறிந்தொகையில்,
’நீரினும் ஆர் அளவன்றே’ எனும் வரியின் பொருள் என்ன?
வானத்தைவிட உயர்ந்தது
கடலைவிட ஆழமானது
வானத்தையும் கடலையும் விட அளவில்லாதது
உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்ந்தெடு
நீர்மேல் எழுத்துப் போல
பாதிப்பு ஏற்படுவது உறுதி
நிலையாமை
இக்கட்டான நிலை
உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளை தேர்ந்தெடு.
இருதலைக் கொள்ளி எறும்பு போல
இக்கட்டான நிலை
நிலையாமை
துன்பத்திற்கு மேல் துன்பம்
சரியான உவமைத் தொடரைத் தேர்ந்தெடு.
துன்பத்திற்கு மேல் துன்பம்
யானை வாயில் அகப்பட்ட கரும்பு போல
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல
நீர்மேல் எழுத்து போல
’சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்பருந்தும்
ஒரு கூட்டில் வாழ உலகு.’
மேற்காணும் நளவெண்பாவில், ’சிறந்த அறங்கள் நிலைத்து நிற்க, என்ற விளக்கத்திற்கு ஏற்ற வரி யாது?
சீத மதிக்குடைக்கீழ்
செம்மை அறங்கிடப்பத்
கூட்டில் வாழ பழகு
ஏழு வயதே நிரம்பிய அபிராமி உலகளவில் நடைபெற்ற பனிச்சறுக்குப் போட்டியில் பங்கெடுத்து நாட்டிற்குப் பல பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.
(வாக்கியத்திற்கு ஏற்ற பழமொழியைத் தேர்ந்தெடு)
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
குந்தித் தின்றால் குன்றும் மாளும்
திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
முட்டாளாக்குதல் -மரபுத்தொடர் என்ன?
சாயம் வெளுத்தது
காதில் பூ வைத்தல்
தட்டிக் கொடுத்தல்
’புத்திமான் பலவா னாவான் பலமுளான் புத்தி மற்றால்’ எனத் தொடங்கும் விவேகச் சிந்தாமணியில் பலமுளான் என்ற சொல்லின் பொருள் என்ன?
பலமில்லாதவன்
வலிமையுள்ளவன்
புத்திசாலி
நற்பண்புடையவர்களின் நட்பு பெரும் பயன் தரும் - இக்கருத்துக்குப் பொருந்தும் திருக்குறள் யாது?
எவ்வதுறைவது உலகம்.....
நவில்தொறும் நூல்நயம் போலும்.....
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்....
மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் புத்தாக்கச் சிந்தனையுடன் பல ___________அறிவியல் கண்டுபிடிப்புகளைஉருவாக்கி சாதனை படைத்து வருகிறார்கள்.
அரிய பெரிய
உயர்வு தாழ்வு
சொல்லை
