wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர்ப்போட்டி ஆண்டு 3

Total questions: 30

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது காலப்பெயரைக் குறிக்கும் சொல் அல்ல?

a)

சித்திரை

b)

திங்கள்

c)

மருத்துவர்

d)

விடுமுறை

2.

கவிதா எல்லாப் பாடங்களையும் _______________ படிப்பாள்.

a)

முழு மூச்சுடன்

b)

ஓட்டை வாயுடன்

c)

அங்கும் இங்குமாய்

3.

மாணவர்கள் என்பது எந்த பால் வகையைச் சார்ந்தது

a)

ஆண்பால்

b)

பலர்பால்

c)

பெண்பால்

d)

ஒன்றன்பால்

4.

கொன்றை வேந்தனை நிறைவு செய்க

சூதும் வாதும் _____________________________

a)

மந்திரம் இல்லை

b)

வார்த்தை அமிர்தம்

c)

திரவியம் தேடு

d)

வேதனை செய்யும்

5.

சரியான ஒருமை பன்மை இணையை தேர்வு செய்க

a)

மரம் - மருந்து

b)

பல் - பல்கள்

c)

புல் - புற்கள்

d)

கல் - கல்கள்

6.

தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை

a)

12

b)

216

c)

247

d)

18

7.

ஆற்றில் நீர் ______________________ வென ஓடியது

a)

கிடு கிடு

b)

சல சல

c)

தர தர

d)

கல கல

8.

உடையது விளம்பேல் என்பது _______________

a)

புதிய ஆத்திசூடி

b)

திருக்குறள்

c)

பழமொழி

d)

ஆத்திசூடி

9.

உயர்திணை

a)

மருத்துவர்

b)

பூனை

c)

நாய்

d)

மாடு

10.

அஃறிணை

a)

சிறுவர்கள்

b)

குடியானவன்

c)

பூனை

d)

மாணவர்கள்

11.

ல,ழ,ள கர எழுத்துகள் கொண்ட சொற்களை தேர்ந்தெடுக.


__________________க் கட்டி சாப்பிட இனிப்பாக இருக்கும்.

a)

வெல்ல

b)

பல்லம்

c)

வெள்ளம்

d)

பள்ளம்

12.

சரியான இரட்டைக்கிளைவிகளைத் தேர்ந்தெடுக.


சதீஷ்வரனின் நகைச்சுவையக் கேட்ட நிவாஷினி ______________வென சிரித்தாள்.

a)

மல மல

b)

கல கல

c)

திரு திரு

d)

சல சல

13.

சாந்தினி பனிக்கூழ் வியாபரியை நோக்கி ______________ வென ஓடினாள்.

a)

தர தர

b)

குடு குடு

c)

சல சல

d)

கல கல

14.

மாணவர்கள் ......................... புத்தகங்களை இரவல் வாங்கினர்.

a)

நூலகத்திலிருந்து

b)

வீட்டிலிருந்து

c)

பள்ளியிலிருந்து

d)

வகுப்பறையிலிருந்து

15.

மாயா ......................... தபால் தலை வாங்கினாள்.

a)

வங்கியில்

b)

பள்ளியில்

c)

வீட்டில்

d)

அஞ்சல் நிலையத்தில்

16.

எதிர்ச்சொல்லைத் தேர்ந்தெடுத்திடுக.

இன்பம்

a)

சோகம்

b)

கவலை

c)

துன்பம்

d)

மகிழ்ச்சி

17.

கரடி மரத்தடியில் உறங்கியது.

இவ்வாக்கியத்தில் உள்ள பொருட்பெயரைத் தேர்ந்தெடுத்திடுக.

a)

உறங்கியது

b)

கரடி

c)

மரத்தடியில்

d)

மரத்தடியில் உறங்கியது

18.

கீழ்க்காண்பவற்றுள் சரியான உயர்திணையைத் தெரிவுச் செய்யவும்.

a)
b)
c)
d)
19.

கிளியின் ___________ வளைந்து இருக்கும்.


சரியான சினைப்பெயரைத் தெரிவுச் செய்யவும்.

a)

அலகு

b)

கால்

c)

காது

d)

வால்

20.

கருமை நிறக் காகம் கரைந்தது.


இந்த வாக்கியத்தில் காணப்படும் பண்புப்பெயர் என்ன?

a)

காகம்

b)

நிறக்

c)

கருமை

d)

கரைந்தது

21.

சுகந்தி அழகான உடை அணிந்திருந்தாள்.


இவ்வாக்கியத்தில் எழுவாய் எது?

a)

உடை

b)

சுகந்தி

c)

அணிந்திருந்தாள்

d)

அழகான

22.

உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?

a)

7

b)

216

c)

12

d)

18

23.

கீழ்க்காண்பவற்றில் எது நெடில் எழுத்தைக் கொண்டு தொடங்கியுள்ளது?

a)

கலை

b)

ஒட்டகம்

c)

தொட்டி

d)

ஐயர்

24.

ஆத்திச்சூடியை இயற்றியவர் யார்?

a)

திருவள்ளுவர்

b)

ஔவையார்

c)

பாரதியார்

d)

பாரதிதாசன்

25.

வாக்கியத்தை நிறைவு செய்க.


குமரன் புத்தகம் ____________________.

a)

வாசித்தனர்

b)

வாசிக்கிறாள்

c)

வாசித்தது

d)

வாசித்தான்

26.

அம்மா என்ற சொல்லுக்கு கீழ் உள்ள அனைத்துச் சொல்லும் பொருந்தும். ஒன்றைத் தவிர. தேர்ந்தெடு.

a)

மாதா

b)

ஈன்றவள்

c)

தகப்பன்

d)

அன்னை

27.

இயல்வது கரவேல் எனும் ஆத்திச்சூடியின் பொருள் கண்டுபிடிக்கவும்.

a)

பிறருக்குக் கொடுத்து உதவுவதைத் தடுக்கக்கூடாது.

b)

கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.

c)

முயற்சியை விட்டு விடக்கூடாது.

d)

கோபத்தைத் தணித்துக் கொள்ள வேண்டும்.

28.

மரங்கள், சிங்கங்கள்,குயில்கள்


மேற்காணும் சொற்கள் எவ்வகை பால் வகையைச் சேர்ந்தது.

a)

பலர்பால்

b)

ஒன்றன்பால்

c)

பலவின்பால்

d)

ஆண்பால்

29.

பட்டம் வானில் பறக்கிறது.


கோடிடப்பட்ட சொல் எந்த காலத்தைக் குறிக்கிறது?

a)

இறந்தகாலம்

b)

எதிர்காலம்

c)

நிகழ்காலம்

d)

ஒரு காலம்

30.

படத்திற்கு ஏற்ற சரியான தொழிற்பெயரைத் தேர்ந்தெடு.

a)

மருத்துவர்.

b)

சிகிச்சை அளித்தல்

c)

டாக்டர் ரிஷா

d)

மருத்துவமனை