Font size
Worksheetsபடிவம் 3/2022
Total questions: 30
Worksheet time: 35mins
தமிழில் உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை?
5
7
9
12
உயிரெழுத்துகளில் குற்றெழுத்துகள் எத்தனை?
3
5
7
9
உயிரெழுத்துகளில் நெட்டெழுத்துகள் எத்தனை?
5
7
9
12
குற்றெழுத்தைக் கொண்டு தொடங்கும் சொல்லைத் தெரிவு செய்க.
ஐவர்
அன்பு
ஔடதம்
ஆசை
தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் மொத்தம் எத்தனை?
12
1
18
247
ங், ஞ், ண், ந், ம், ன்
மேற்காணும் மெய்யெழுத்துகள் எவ்வகையைச் சார்ந்தவை?
வல்லினம்
மெல்லினம்
இடையினம்
உயிர்மெய் எழுத்துகளுக்குப் பொருத்தமான கூற்றைத் தெரிவு செய்க.
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 216
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 30
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 247
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் 18
ஆய்த எழுத்தைப் பற்றிய சரியான கூற்றைத் தெரிவு செய்க
ஆய்த எழுத்து சொல்லுக்கு இடையில் மட்டுமே வரும்
ஆய்த எழுத்து சொல்லுக்கு முதலிலும் இறுதியிலும் வரும்
ஆய்த எழுத்து மற்ற எழுத்துகளுடன் புணர்ந்து வரும்
இன எழுத்து என்றால் என்ன?
இன எழுத்துகள் பிறப்பியல் அடிப்படையில் ஒரே இடத்திலிருந்து பிறக்கும் ஒலிகளாகும்
உயிர் எழுத்துக்கு மெய்யெழுத்து இன எழுத்தாக வரும்
வல்லினத்திற்கு இடையினம் இன எழுத்தாக வரும்
இன எழுத்துகளைக் கொண்ட சரியான வரிசையைத் தெரிவு செய்க.
பஞ்சம், பாசம், பக்தி
தங்கம், அந்தம், கண்டம்
பந்தம், பழக்கம், பண்பு
வண்டி, பையன், தையல்
கீழ்க்காண்பவை ______________________ ஆகும்.
அவன் அது இவர் இவள்
அகச்சுட்டு
புறச்சுட்டு
அகவினா
புறவினா
கீழ்க்காணும் கோடிடப்பட்டுள்ள சொல் எவ்வகை வினாச்சொல்?
எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
அகச்சுட்டு
அகவினா
புறச்சுட்டு
புறவினா
‘அறமா’ இச்சொல் எவ்வகை வினாச்சொல்?
அகச்சுட்டு
அகவினா
புறச்சுட்டு
புறவினா
பிழையான கூற்றைத் தெரிவு செய்க.
ஆ, ஓ எனும் வினா எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்
புறவினா சொல்லின் உள்ளிருந்து வினாப் பொருளைத் தரும்
வினா எழுத்துகளை இருவகையாகப் பிரிக்கலாம்
வினா எழுத்துகள் ஒரு சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வரும்
போலி எத்தனை வகைப்படும்?
4
5
2
3
கீழ்க்காணும் வாக்கியங்களில் போலியாக வந்துள்ள சொற்களைத் தெரிவு செய்க.
தமிழைப் பழித்தவரை அறம் பாடி தண்டிப்பது தொன்மை கால மரபாகும்.
தன் தேசம் அந்நியரால் ஆளப்படுவதை நாட்டுப்பற்றுள்ள குடிமகன் விரும்ப மாட்டான்
கண்ணகியின் பாதம் நிலம் பார்த்ததில்லை என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார்.
திருமணப் பந்தர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
கீழ்க்காணும் சொற்களில் சரியான இணை எது?
கலன் - கடைப்போலி
மதில் - கடைப்போலி
நயன் - இடைப்போலி
மையல் - முதற்போலி
கிரந்த எழுத்துகள் மொத்தம் எத்தனை?
2
3
4
5
பெயர்ச்சொல் எத்தனை வகைப்படும்?
7
6
8
9
திணை எத்தனை வகைப்படும்?
1
2
3
4
பால் எத்தனை வகைப்படும்?
5
6
7
8
பன்மையைக் குறிக்கும் சொற்களைத் தெரிவு செய்க.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனமுடன் செயல்பட வேண்டும்.
சூறாவளி வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன.
மான்கள் துள்ளி ஓடுவது பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது.
இந்தியர்கள் வியாபாரத் துறையில் முன்னேறியுள்ளனர்.
வேற்றுமை உருபு _________________ வேறுபடுத்திக் காட்டும்.
வினைச்சொல்லை
பெயர்ச்சொல்லை
உரிச்சொல்லை
இடைச்சொல்லை
வேற்றுமை _________ வகைப்படும்.
7
8
6
9
பின்வரும் வாக்கியங்களில் எது இரண்டாம் வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ளது?
குமார் தேர்வு எழுதினான்
மலர்விழி தேன்மொழியைப் பாராட்டினாள்
குமரப்பனால் கோயில் கட்டப்பட்டது
தமிழ்முல்லை, இங்கே வா!
செய்யுளை நிறைவு செய்க.
எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு
.......................................................................................................
கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்
நிற்றலும் கூடப் பெறின்.
மக்கட் பிறப்பில் பிறிதில்லை
மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்
மக்கள் பிறப்பில் பிறிதில்லை
மக்கட் பிரப்பில் பிறிதில்லை
கானல் நீர் என்பதன் பொருள்...............
நிறைவேறாத என்னம்
நிறைவேறாத திசை
நிறைவேறாத எண்ணம்
ஆசை நிறைவேறுதல்
மரபுத்தொடரை நிறைவு செய்க.
தலை ............................................
வணங்கினான்
வணங்குதல்
சீவுதல்
வாரினான்
பழமொழியை நிறைவு செய்க.
தூண்டில்காரனுக்குத் தக்கை...................
ஆடியது போல
ஆடி மீன் கிடைக்கும்
மீது கண் போல
மேல் கண் போல
பழமொழியை நிறைவு செய்க.
ஊமை கண்ட ........................................
கனாப் போல
கனவு போல
கனாப் பலித்தது
கணாப் போல
