NEW
Font size
Worksheetsமீள்பார்வை ஆண்டு 3
Total questions: 33
Worksheet time: 17mins
பின்வரும் உலகநீதியில் சொல்லைத் தெரிவு செய்க.
_______________பொல்லாங்கு சொல்ல வேண்டாம்.
மாதாவை
போகவிட்டுப்
ஒருவரையும்
வஞ்சனைகள்
கீழே உள்ளவற்றுள் பிழையான பொருளைக் கொண்ட இணைமொழியைத் தெரிவு செய்க.
ஆடை அணிகலன் - உடையும் ஆபரணமும்
மேடு பள்ளம் - தாயும் குழந்தையும்
சுற்றும் முற்றும் - சுற்றிலும் /நாலாப்பக்கமும்
கீழ்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.
இரகு, நம் மாமா செய்த உதவியை மறந்துவிட்டாயா? அவர் கொடுத்த பணத்தில்தான் நீ மேற்படிப்பைப் படித்தாய்.
ஊருடன் கூடி வாழ்
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
அழுத பிள்ளை பால் குடிக்கும்
கீழ்காணும் படத்திற்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
கலகல
மளமள
தகதக
கீழ்காணும் திருக்குறளின் இரண்டாம் அடியை நிறைவு செய்க.
ஒழுக்கம் விழுப்பம் தரலாம் ஒழுக்கம்
________________________________________.
உயிரினும் ஓம்பப் படும்
நாவினாற் சுட்ட வடு
இடுக்கண் களைவதாம் நட்பு
கீழ்காணும் சூழலுக்கு ஏற்ற இரட்டைக்கிளவியைத் தெரிவு செய்க.
நாளை சுற்றுலா செல்லவிருப்பதால், கபிலன் வீட்டுப் பாடங்களை __________________ என செய்து முடித்தான்.
மளமள
கலகல
சலசல
உயிர்மெய் எழுத்துகளின் மொத்த எண்ணிக்கை என்ன?
217
216
12
பின்வரும் படம் காட்டும் பால் வகை யாது?
பலவின்பால்
பெண்பால்
ஆண்பால்
ஒன்றன்பால்
பின்வருவனவற்றுள் எது ஒரே பொருள் தரும் சரியான இணை?
நூல் - புத்தகம்
ஆதவன் - நிலா
பணம் - உடல்
கீழ்காணும் வாக்கியம் காட்டும் காலத்தைத் தெரிவு செய்க.
மதன் வீட்டைக் கட்டினார்
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
ஊதாரியான முரளி தன் சொத்தை ________________.
ஆறப் போட்டான்
அள்ளி இறைத்தான்
கம்பி நீட்டினாம்
மனமக்களின் _______________ அழகாக இருந்தன.
அருமை பெருமை
ஆதி அந்தம்
ஆடை அணிகலன்
மிதிவண்டி செலுத்தும் போட்டியில்அரவிந்தன் ______________களைக் கடந்து செல்ல நேரிட்டது.
சுற்றும் முற்றும்
மேடு பள்ளம்
ஆதி அந்தம்
காலை கதிரவனின் ஒளி ____________வென மின்னியது.
தகதக
சலசல
கலகல
கீழ்காணும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.
______________________________
யாண்டும் இடும்பை இல.
முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
கொடுக்கப்பட்ட விளக்கத்திற்கு ஏற்ப பழமொழியைத் தெரிவு செய்க.
ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சி செய்ய வேண்டும்.
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும்
ஊருடன் கூடி வாழ்
அழுதபிள்ளை பால் குடிக்கும்
சரியான மரபு வழக்கு சொற்களைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
முயல் குஞ்சு தாவி குதித்து ஓடியது.
அணில் பிள்ளை மரத்திற்கு மரம் தாவியது.
மாட்டுக்குட்டி புல் தின்றது.
அம்மா சந்தையில் இரண்டு ___________ரம்புத்தான் பழங்கள் வாங்கி வந்தார்.
குலை
தார்
கொத்து
விவசாயி முற்றிய நெற்_________ அறுவடை செய்தார்.
கதிர்
சீப்பு
குலை
கீழே கொடுக்கப்பட்டுள்ளவனவற்றுள் எது சினைப்பெயரைக் குறிக்கும் படம் என்பதைத் தெரிவு செய்க.
கவிஞர் பாடல் ____________________
இயற்றும்
இயற்றினர்
இயற்றினார்
சேவல் காலையில் _______________ .
கூவியது
கூவின
கூவினார்கள்
காந்திமதி ______________ பாடங்களை மீள்பார்வை செய்து தேர்வில் வெற்றி பெற்றாள்
அல்லும் பகலும்
நன்மை தீமை
பள்ளிக்குத் தாமதமான காரணத்தினால் நகுலன் புத்தகங்களையும் தளவாடங்களையும் ______________ எடுத்து வைத்தான்.
கண்ணும் கருத்துமாய்
அரக்கப் பரக்க
அவசரக் குடுக்கை
திருடன் செல்வந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் _________ பார்த்தான்.
அரக்கப் பரக்க
சுற்றும் முற்றும்
அள்ளி இறைத்தல்.
கொடுக்கப்பட்டவற்றுள் எது சினைப்பெயரைக் குறிக்கிறது.
திமில்
மாலை
கசப்பு
தொழிற்பெயரைக் குறிக்கும் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
மகிழுந்து
மூக்கு
போதித்தல்
கருமையாக்கப்பட்ட சொல்லின் பொருள் யாது?
அறஞ்செய விரும்பு
A. தருமம்
B. கோபம்
C. தீமை
D. பரிவு
எண்களும் மொழியும் நம் இரு கண்களைப் போன்றது என்ற கூற்றை விளக்கும் ஆத்திசூடி எது?
A. ஏற்ப திகழ்ச்சி
B. எண்ணெழுத் திகழேல்
C. ஈவது விலக்கேல்
D. ஆறுவது சினம்
கீழ்க்காணும் கூற்று உணர்த்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
நாம் யாரிடமும் கோபம் கொள்ளக்கூடாது.
A. ஆறுவது சினம்
B. இயல்வது கரவேல்
C. உடையது விளம்பேல்
D. ஒப்புர வொழுகு
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
மேற்கண்ட பொருளுக்குப் பொருந்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
A. ஊக்கமது கைவிடேல்
B. இயல்வது கரவேல்
C. அறஞ்செய விரும்பு
D. ஈவது விலக்கேல்
அப்பா :
கந்தா, இன்றைய நவீன உலகில் நீயும் கணினியை இயக்கத் தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்பாவின் கூற்றுக்குப் பொருந்தும் ஆத்திசூடி எது?
A. ஔவியம் பேசேல்
B. ஓதுவ தொழியேல்
C. ஓப்புர வொழுகு
D. ஊக்கமது கைவிடேல்
பிச்சையெடுப்பது இழிவான செயலாகும். எனவே, உழைத்து வாழ்.
மேற்காணும் அறிவுரைக்குப் பொருந்தும் ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
A. ஐய மிட்டுண்
B. ஆறுவது சினம்
C. ஊக்கமது கைவிடேல்
D. ஏற்ப திகழ்ச்சி
