NEW
Font size
WorksheetsSPM Tamil
Total questions: 20
Worksheet time: 10mins
பின்வரும் திருக்குறளைப் பூர்த்தி செய்க.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
கெடுநீரார் காமக் கலன்
என்ன பயத்ததோ சால்பு
பண்புடை யாளர் தொடர்பு
பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற உவமைத் தொடரைத் தேர்வு செய்க.
ஆதரவு இல்லாத நிலை
கொழு கொம்பற்ற கொடி போல
மாலுமி இல்லாத கப்பல் போல
சிறகு இழந்த பறவை போல
நீறு பூத்த நெருப்புப் போல
எது குன்றிய வினை வாக்கியம் ?
சிறுமி அழுகிறாள்.
பாம்பு தவளையைக் கௌவியது.
சரவணன் பந்தை உதைத்தான்.
புலி மானைத் துரத்தியது.
அலமாரி,சாவி, ஜன்னல் போன்ற வார்த்தைகள் எத்திசைச் சொற்களாகும்?
அரபு
தெலுங்கு
பாரசீகம்
போர்த்துக்கீசியம்
பின்வரும் கருத்துக்கு ஏற்ற திருக்குறளைக் கண்டறிக.
தீங்கு செய்தவருக்கும் நன்மை செய்வதே சான்றோரின் பண்பு
நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு
எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவது அறிவு
இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு
வினைத்தொகையில் முக்காலத்தையும் காட்டும் உருபுகள் மறைந்திருக்கும். பின்வரும் சொற்களில் எது வினைத்தொகை வார்த்தையைக் காட்டுகிறது?
ஊர்வலம்
சாரைப்பாம்பு
ஊறுகாய்
பூப்பந்து
விளக்கத்திற்கு ஏற்ற இணைமொழியைக் கண்டறிக.
பொய்யான காரணம்
தயவு தாட்சணியம்
கால நேரம்
சாக்குப் போக்கு
ஆதி அந்தம்
மரபுத் தொடருக்கு ஏற்ற பொருளைக் கண்டறிக.
வெள்ளிடை மலை
மிகவும் வெளிப்படையாகத் தெரிவது
ஆசை வார்த்தை கூறுதல்
பிறர் கூறுவதற்கெல்லாம் ஆமோத்தித்தல்
நுணுக்கங்கள்
பின்வரும் விளக்கத்திற்கு ஏற்ற பழமொழியைக் கண்டறிக.
சிறந்த பண்புடையவர்களோடு சேரும் ஒருவர் அப்பண்பாளரின் தன்மைகளைப் பெற்று விளங்குவார்.
துணை போனாலும் பிணை போகாதே.
தர்மம் தலை காக்கும்.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
பின்வரும் மரபுத்தொடர்களில் பிழையான விளக்கம் கொண்டுள்ள மரபுத்தொடர் எது?
ஓய்வு ஒழிச்சல்- மிகக் குறைந்த நேர ஓய்வு
நெளிவு சுளிவு - யுக்தி
ஒத்துப் பாடுதல் - அருமையாகப் பாடுதல்
இனிப்புக் காட்டுதல்- ஆசை வார்த்தை கூறுதல்
பின்வரும் எடுத்துக்காட்டுகளில் எது பெயரெச்சத் தொடர் ஆகும்?
அறிந்த பெற்றோர்.
சேவல் கூவியது.
கூடி மகிழ்ந்தனர்.
உணவைச் சாப்பிட்டான்.
"கண்ணா வா" எந்த வகை தொகாநிலைத் தொடராகும்?
விளித் தொடர்
எழுவாய்த் தொடர்
அடுக்குத் தொடர்
வேற்றுமைத் தொடர்
பின்வருவனவற்றுள் எது பிழை?
ஈறு கெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில் வலிமிகாது.
எ.கா : பேசா + பையன் = பேசா பையன்
பண்புத்தொகையில் வலிமிகும்.
எ.கா : வெள்ளை + தாள் =வெள்ளைத்தாள்
இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வலிமிகும்.
எ.கா : தை + திங்கள் = தைத்திங்கள்
ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாய் இருப்பின் வலிமிகாது.
எ.கா : தம்பி + சட்டை = தம்பி சட்டை
சரியான வாக்கியம் எது?
காலைமாட்டின் கொம்பு மிகவும் கூர்மையாக இருந்தது.
மாளை வேலையில் சிறுவர்கள் திடலில் பந்து விளையாடினர்.
வேளைக்குச் சென்ற அப்பா நேரம் கழித்து வீடு திருப்பினார்.
வாழைப்பழம் சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்கும்.
எது இடுகுறிப்பெயர் அல்ல?
மண்
கல்
நாற்காலி
நீர்
பின்வருவனவற்றுள் எது இடைப்போலியாகும்?
நெசவு
ஐயர்
குடல்
அறம்
சரியான எதிர்மறை வாக்கியத்தைக் கண்டறிக.
அருள்மதி பள்ளிக்கு வந்தாள்.
கவிதா பள்ளிக்கு வந்திலள்.
மாடுகள் கொட்டகைக்கு வந்தன.
உலகம் முழுவதும் கொரோனா நச்சுயுரி பரவியது.
செம்மை + கோல் = செங்கோல் என்பது எந்த வகை விகாரப் புணர்ச்சியாகும்?
தோன்றல் விகாரம்
திரிதல் விகாரம்
கெடுதல் விகாரம்
பின்வரும் வாக்கியங்களில் எந்த வாக்கியத்தில் பிழையாக இரட்டைக்கிளவி பயன்படுத்தப்பட்டிருக்கிறது?
கேமரன் மலையில் சிலுசிலு வென்று வீசிய மென்குளிர்க் காற்று உடலைச் சிலிர்க்கச் செய்தது.
நங்கு நீரூற்றி உரமிட்ட மல்லிகைச் செடிகள் தளதள வெனச் செழிப்பாக வளர்ந்திருந்தன.
கடுங்காற்று வீசியதால் மாமரத்தின் கிளை சடசட வென முறிந்து விழுந்தது.
பரபர ப்பாக அங்குமிங்கும் ஓடியாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மூன்றாம் வேற்றுமை உருபு மறைந்துள்ள வேற்றுமைத் தொகை சொற்றொடர் எது?
மொழி கற்றாள்
என் வீடு
துன்பம் நீங்க்கினான்
தலை வணங்கு
