wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல்

Total questions: 26

Worksheet time: 13mins

Name
Class
Date
1.
கூற்றை வாசிக்கவும்.
நிறைய மிருகங்கள் பெரிய கூட்டமாகவும் சிறிய கூட்டமாகவும் வாழ்கின்றது, அவை நலமுடன் வாழ ஒற்றுமையாக செயல்படுகிறது.    
           
மேலே உள்ள கூற்று மிருகங்கள் கூட்டமாக வாழ்வதற்கான காரணத்தை உணர்த்துகிறது.  கீழ்காண்பவனவற்றுள் எந்த மிருகம் மேலே உள்ள கரணத்தின்படி சிறு கூட்டமாக வாழ்கின்றது.
a)
சிங்கம்
b)
வரிக் குதிரை
c)
கிளை மான்
d)
கடற்சிங்கம்
2.
பின்வருவனவற்றுள் எது உடை மாட்டியைத் துருப்பிடிப்பதலிருந்து தவிர்க்கச் சிறந்த வழியாகும்?
a)
சாயம் பூசுதல்
b)
ஈய முலாம் பூசுதல் 
c)
எண்ணெய் பூசுதல் 
d)
நெகிழி உறையிடுதல்
3.
இரவு பகல் ஏற்படுவதன் காரணம்...  
a)
பூமி தன் அச்சில் முழுமையாய் சுற்றிவர 24 மணி நேரம் ஆகும்.
b)
பூமி சூரியனைச் சுற்றி வருவதால் நிலவின் கலைகள் ஏற்படுகின்றன.
c)
பூமி தன் அச்சில் சுழன்று கொண்டே சூரியனைச் சுற்றி வருவதால்.
d)
நிலவு பூமியின் இயற்கைத் துணைக்கோள்.
4.
பின்வரும் நிகழ்வுகளில், எது நிலவு பூமியைச் சுற்றி வருவதால் ஏற்படுகிறது?  
a)
இரவு பகல்
b)
நிலவின் கலைகள்
c)
நிலவு பூமியின் அருகில்
d)
பூமியின் இருப்பிடத்திலிருந்து சூரியன் மற்றும் நிலவின் தூரம் ஒரே அளவில் இருப்பதால்
5.
ஏன் வண்ணத்துப்பூச்சி இலைக்கடியில் முட்டை இடுகிறது.  
a)
சூரிய ஒளியிலிருந்து தவிர்க்க
b)
பிராணிகள் சாப்பிடுவதிலிருந்து தவிர்க்க
c)
இலையிலிருந்து உணவைப் பெறுவதற்கு 
d)
அனைத்து முட்டைகளும் குஞ்சுப் பொரிப்பதை உறுதிச் செய்ய
6.
வெப்பநிலை என்றால் என்ன?    
a)
ஒரு வகை சக்தி
b)
ஒரு பொருளின் வெப்பம் மற்றும் குளிர் நிலையின் அளவு
c)
பொருளை வெப்பப்படுத்தும்போது விரிவடைதல் 
d)
பொருளை குளிர்ப்படுத்தும்போது சுருங்குதல்
7.
பின்வருவனவற்றுள் எது தரப்படுத்தப்பட்ட அளவின் பயன்பாட்டின் நோக்கமாகாது? 
a)
ஒரே அளவான முடிவைப் பெருவதற்கு
b)
ஒரு பொருளின் நீளத்தைச் சரியாக அளப்பதற்கு
c)
போட்டியின் நேரத்தை நியாயமாக அளப்பதற்கு
d)
பொருட்களை பல வடிவங்களில் பெருவதற்கு
8.
தூண்டலுக்கு ஏற்ப துலங்குதல்' என்பதன் பொருள் என்ன?  
a)
ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காணுதல் 
b)
உயிரினங்கள் தங்கள் இணைகளுக்கு ஏற்ப துலங்குதல்
c)
தூண்டல் ஏற்படும் போது உயிரினங்கள் துலங்குவது
d)
உயிரினங்கள் கழிவுப் பொருட்களை அகற்றுவது 
9.
காவியா சூரிய ஒளியுள்ள ஓர் இடத்தில் செடி ஒன்றை வளர்க்கவிரும்பினாள். ஆனால் மிகக்குறைந்த நீர்வளமே இருந்தது.   எந்தத் தன்மைகொண்ட செடி அவ்விடத்தில் நடுவதற்கு பொருத்தமில்லை?    
a)
நீண்ட வேர்
b)
அதிக இலைகள்
c)
சிறிய அளவைக்கொண்ட இலைகள்
d)
நீரைச் சேகரிக்கக்கூடிய தண்டு
10.
உணவு வலை என்றால் ________________________ .
a)
ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத வெவ்வேறு உணவுச்சங்கிலி 
b)
இருக்கின்ற பலவகை உணவு மூலங்களிலிருந்து உருவானது
c)
இணைக்கப்பட்ட பல உணவுச்சங்கிலிகள்
d)
விலங்குகளும் தாவரங்களும் உயிர் வாழ்வதற்கான தொடர்பு
11.
மன்மத ஈப்பொறிச் செடி என்ன தூண்டலுக்குத் துலங்கும்?
a)
காற்று
b)
முகர்தல்
c)
தொடும்
d)
ஒளி
12.

கீழ்க்காணும் படத்தில் உள்ள நுண்ணுயிர் எவ்வகையைச் சார்ந்தது?

a)

குச்சியம்

b)

நச்சியம்

c)

பூஞ்சணம்

d)

அல்கா

13.

கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றுள் எது நுண்ணுயிர் வாழ்க்கை செயற்பாங்கு அல்ல ?

a)

சுவாசித்தல்

b)

நகர்தல்

c)

வளர்தல்

d)

நீளமாகுதல்

14.

பின்வருவனவற்றுள் எதில் தொற்றுநோய் பரவலின் காரணிகள் சரியாக இணைக்கப்பட்டுள்ளது ?

a)

அம்மை - தொடுதல்

b)

வயிற்றுப் போக்கு - விலங்கு

c)

ஏடிஸ் - நீர்

d)

கண்ணோய் - காற்று

15.

பின்வருவனவற்றுள் எது தனித்து வாழும் விலங்கு ஆகும் ?

a)

மான்

b)

யானை

c)

எறும்பு

d)

சிறுத்தை

16.

விலங்குகள் கூட்டமாக வாழ்வதால் ஏற்படும் தீமை என்ன?

a)

உணவை ஒன்றாகத் தேட முடியும்.

b)

அடிப்படைத் தேவைகளுக்காக போராட்டம் ஏற்படும்.

c)

இனவகை நீடுநிளவலை உறுதி செய்கிறது.

d)

பாதுகாப்பிடத்தை ஒன்றாகத் தேட முடியும்.

17.

பின்வருவனவற்றுள் எது விலங்குகளிடையே போராட்டம் நிகழ்வதற்குக் காரணம் அல்ல ?

a)

காற்று

b)

வசிப்பிடம்

c)

உணவு

d)

இணை

18.

கீழ்க்காணும் படம் ரப்ளிசியா மலரைக் காட்டுகின்றது. ரப்ளிசியா தாவரம் தான் ஒட்டிக்கொள்ளும் தாவரத்தின் தாது சத்துகளை உறிஞ்சிக் கொள்வதன்வழி உயிர் வாழ்கிறது. இச்சூழல் எவ்வகை கூட்டு உயிர் வாழ்வைக் குறிக்கின்றது ?

a)

வேற்றின இணை வாழ்வு

b)

பரிமாற்று வாழ்வு

c)

ஒட்டுண்ணி வாழ்வு

19.

விலங்குகள் பல காரணங்களுக்காக வேட்டையாடப்படுகின்றன. படத்தில் உள்ள விலங்கு எதற்காக வேட்டையாடப்படுகின்றது ?

a)

தோல்

b)

உரோமம்

c)

இறைச்சி

d)

கொழுப்பு

20.

புணரமைத்தல் என்றால் என்ன ?

a)

இருப்பதை அழிக்காமல் தொடர்ந்து நிலைநிறுத்துவதாகும்.

b)

அழிந்துபோன சூழலை மீண்டும் மீட்டெடுப்பதாகும்.

c)

உயிரினங்களை முற்றழிவிலிருந்து பாதுகாத்தல்.

d)

காடுகள் அமைத்தல்.

21.

பின்வருவனவற்றுள் எது பராமரித்தல் மற்றும் புணரமைத்தல் நடவடிக்கை அல்ல ?

a)

பராமரிப்பு மையங்கள் உருவாக்குதல்.

b)

பாதுகாக்கப்பட்ட காடுகளை அமைத்தல்.

c)

மறுநடவு செய்தல்.

d)

கடலாமைகளின் முட்டைகளை வியாபார நோக்கத்திற்காக விற்றல்.

22.

உந்துவிசையை நாம் உணர முடியும். ஆனால் பார்க்க இயலாது. இக்கூற்று சரியா ? தவறா?

a)

சரி

b)

தவறு

23.

பின்வருவனவற்றுள் எது தள்ளுதல் நடவடிக்கையைக் குறிக்கின்றது ?

a)

கயிறு இழுத்தல்

b)

கேரம் விளையாடுதல்

c)

சாயம் பூசுதல்

d)

கிணற்றில் நீர் இறைத்தல்

24.

கீழ்க்காணும் படம் உந்துவிசையின் எந்த நடவடிக்கையைக் குறிக்கின்றது ?

a)

இழுத்தலும் தள்ளுதலும்

b)

தள்ளுதல்

c)

இழுத்தல்

25.

பின்வருவனவற்றுள் எது உந்துவிசையின் விளைவு அல்ல ?

a)

நகராப் பொருளை நகர்த்தும்.

b)

நகரும் பொருளின் திசையை மாற்றும்.

c)

நகரும் பொருளின் வேகத்தை அதிகரிக்கும்.

d)

ஒரு பொருளின் வடிவத்தை மாற்றாது.

26.

கீழ்க்காணும் விலங்கின் தன்மை என்ன?

a)

அலகும் கால்களும் உடையது.

b)

நீண்ட வாலும் கூரிய நகங்களும் உடையது.

c)

இறக்கைகளும் இறகுகளும் உடையது.

d)

உரோமமும் கொம்பும் உடையது.