wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி தேர்வு படிவம் 2

Total questions: 20

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை? அவை யாவை?

a)

3 (எ,ஏ,யா)

b)

5 (எ, ஏ, யா, ஆ, ஓ)

c)

5 (அ, ஏ, எ, ஓ, ஆ)

2.

வினா எழுத்து எத்தனை வகைப்படும்? அவை யாவை?

a)

1 (அகவை வினா)

b)

2 (அகவை வினா, புறவை வினா)

c)

2 (அகவினா, புறவினா)

3.

இயற்சொல்லைத் தேர்வு செய்க.

a)

அலமாரி

b)

சாவி

c)

கல்

4.

இவற்றில் எது வடசொல் இல்லை.

a)

நனி சிறப்பு

b)

வருஷம்

c)

ஜலம்

5.

விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும்? அவை யாவை?

a)

1 (தோன்றல் விகாரம்)

b)

2 (திரிதல் விகாரம், கெடுதல் விகாரம்)

c)

3 (தோன்றல் விகாரம், திரிதல் விகாரம், கெடுதல் விகாரம்)

6.

கீழ்காண்பனவற்றுள் திசைச்சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

அங்கு, இங்கு, எங்கு

b)

குல்லா, பாக்கி, அக்கடா

c)

பொன், மரம், கல்

7.

சேர்த்தெழுதுக.


இ+யாழ்=

a)

இயாழ்

b)

இவ்யாழ்

c)

இய்யாழ்

8.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியாக வலிமிகும் இணையைத் தேர்வு செய்க.

a)

இ+மதம்

b)

கனா+கண்டேன்

c)

அ+மரம்

9.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் வலிமிகா இணையைத் தேர்வு செய்க.

a)

கூரையிலிருந்து + குதித்தான்

b)

அரை + படிப்பு

c)

கடைக்கு + சென்றான்

10.

கால்களைக் கழுவி விட்டு உள்ளே வா.


மேற்கண்ட வாக்கியத்தின் வகை என்ன?

a)

செய்தி வாக்கியம்

b)

வினா வாக்கியம்

c)

கட்டளை வாக்கியம்

11.

கீழ்காணும் திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க.


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

a)

ஒரு செயலைச் செய்து முடித்துவிடுவதாகச் சொல்வது எல்லாருக்கும் சுலபமானது. ஆனால், அதனைச் சொன்னபடி செய்வதுதான் கடினமானது.

b)

இந்தத் தொழிலை இன்னின்ன காரணத்தால் இவன் செய்து முடிக்கத்தக்கவன் என்பதை ஆராய்ந்தறிந்து அத்தொழிலை அவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

c)

ஒருவரின் திறமையறிந்து ஒரு பணியை மேற்கொள்ளும் பொறுப்பை வழங்க வேண்டும்.

12.

தன்னைத்தான் காக்கின் சினம்காக்க __________________

தன்னையே கொல்லும் சினம்


மேற்கண்ட திருக்குறளில் விடுப்பட்ட சொல்லின் பொருளைத் தேர்ந்தெடுக.

a)

வராமல்

b)

காக்காவிட்டால்

c)

காத்துக் கொள்ள

13.

பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்

வரிசை வரிசையா நந்தும் - வரிசையால்

____________________________________________________

தானே சிறியார் தொடர்பு


விடுப்பட்ட வரியைத் தேர்ந்தெடுக.

a)

சுடரொழி யானடிக்கே சூட்டினேன் சொன்மாலை

b)

இடரொழி நீங்குகவே யென்று

c)

வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே

14.

விறு விறு என்ற இரட்டைக்கிளவிக்கேற்ற வாக்கியங்களைத் தேர்வு செய்க.


i) மாலா இருட்டு வழியில் விறு விறுவென நடந்தாள்.

ii) பல நாட்களுக்குப் பிறகு தன் அம்மாவைக் கண்டவுடன் தீபன் விறுவிறுவென அழுதான்.

iii) மழை பெய்யத் தொடங்கியதும் அகிலன் விறுவிறுவென நடக்க ஆரம்பித்தான்.

iv) தீப்பற்றிய வீட்டிலிருந்து அனைவரும் விறு விறுவென வெளியேறினர்.

a)

ii மற்றும் iii

b)

i மற்றும் iii

c)

i மற்றும் iv

d)

i, ii மற்றும் iv

15.

__________________த்தைப் பின்பற்றி ஒழுக்கமாக நடந்துகொண்ட பவானியைப் பாராட்டி பரிசு கொடுக்கப்பட்டதும், அவள் ________________________ மகிழ்ந்தாள்.

a)

உள்ளும் புறமும், ஆடிப்பாடி

b)

சட்ட திட்டம், ஆடிப்பாடி

c)

உள்ளும் புறமும், நாணிக் கோணி

16.

நுனிப்புல் மேய்ந்தாற் போல என்ற உவமைத்தொடரின் பொருள் என்ன?

a)

கூட்டமாக

b)

மிகவும் தெளிவாகத் தெரிதல்

c)

ஒன்றைப் பற்றி மேலோட்டமாக மட்டும் தெரிந்து கொள்ளுதல்

17.

பொதுக்கூட்டத்திற்கு மக்கள் அனைவரும் _______________________________ திரண்டு வந்திருந்தனர்.


மேற்கண்ட வாக்கியத்திற்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்வு செய்க.

a)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

b)

நுனிப்புல் மேய்ந்தாற் போல

c)

புற்றீசல் போல

18.

_________________________ மரியாதையின்றி பேசிய மகன் அவன் தாயாரிடம் ______________________.

a)

எள்ளளவும், பாட்டு வாங்கினான்

b)

எள்ளளவும், உச்சிக் குளிர்தல்

c)

அளவுளாவுதல், உச்சிக் குளிர்தல்

19.

புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்ற பழமொழிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.

a)

தகாத செயல்களைச் செய்பவர்கள் அதற்குரிய தண்டனைகளைப் பெற்றே தீருவர்.

b)

உயர்ந்த பண்புள்ளவர்கள் சிறந்த காரியங்களையே செய்வார்களேயின்றி, எந்நிலையிலும் தங்களுக்கு இழிவு தரக்கூடிய காரியங்களைச் செய்ய மாட்டார்கள்

c)

வாழ்க்கையில் நாம் நினைத்ததை அடைய பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

20.

எழிலன் தனது சிறுவயதில் உழைக்காமல் பொறுப்பின்றி இருந்ததால் இன்று பலரிடமும் கடன்பட்டு வாழும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.


மேற்கண்ட சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

a)

மந்திரத்தால் மாங்காய் விழுந்திடுமா?

b)

அடாது செய்பவன் படாது படுவான்

c)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை