wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி தேர்வு படிவம் 3

Total questions: 20

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

கீழ்காணும் போலிகளில் முதற்போலியைத் தேர்வு செய்க.

a)

நெசவு-நெயவு

b)

ஞாயிறு-நாயிறு

c)

அறம்-அறன்

2.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கடைப்போலிகளைத் தேர்வு செய்க.

a)

அமைச்சு - அமச்சு, குயவன் - குசவன்

b)

செதில் - செதிள், சாம்பல் - சாம்பல்

c)

மஞ்சு - மைஞ்சு, ஞயம் - நயம்

3.

உடன்பாட்டுவினை என்றால் என்ன?

a)

ஒரு செயல் நடைபெறாததைப் பற்றிக் கூறும் வினைச்சொல்.

b)

ஒரு சொல்லின் முதலில் இருக்க வேண்டிய எழுத்திற்குப் பதிலாக வேறோர் எழுத்து அமைந்து அதே பொருளை உணர்த்தும்.

c)

ஒரு செயல் நடைபெறுவதைப் பற்றியும் நடைப்பெற்றதைப் பற்றியும் நடைபெறவிருப்பதைப் பற்றியும் கூறும் வினைச்சொல்.

4.

எதிர்மறைவினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

a)

மதியழகி கடைக்குச் சென்றாள்.

b)

மாடுகள் கொட்டகைக்கு வந்தில.

c)

அங்கு நீ என்ன கண்டாய்?

5.

சேர்த்தெழுதுக.


மரம் + சாய்ந்தது =

a)

மரம் சாய்ந்தது

b)

மரஞ்சாய்ந்தது

c)

மரச்சாய்ந்தது

6.

பிரித்தெழுதுக.


செங்கோல், பசும்பயிர்

a)

செங்கல் + கோல், பசுமை + பயிர்

b)

செங் + கோல், பசும் + பயிர்

c)

செம்மை + கோல், பசுமை + பயிர்

7.

உடன்பாட்டுவினை சொற்களைத் தேர்வு செய்க.

a)

கண்டாய், நடுவாள், செய்தான்

b)

படியேன், வந்தனர், உண்டனர்

c)

கண்டிலாய், நடாள், செய்திலன்

8.

னகர, இகர ஈற்று ___________________________ பின் வலிமிகும்.

a)

வினைமுற்றுகளின்

b)

வினையெச்சங்களின்

c)

பெயரெச்சங்களின்

9.

சேர்த்தெழுதுக.


செய்ய + சொன்னான்

a)

செய்சொன்னான்

b)

செய்ய சொன்னான்

c)

செய்யச் சொன்னான்

10.

_______________________ , ___________________________ பின் வலிமிகாது.

a)

அஃறிணைப் பெயர், பொதுப்பெயர்கள்

b)

உயர்திணைப் பெயர், பொதுப்பெயர்கள்

c)

பெயர்சொல், பொதுப்பெயர்கள்

11.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்க முடையார்வாய்ச் சொல்


என்ற திருக்குறளின் பொருளைத் தேர்வு செய்க.

a)

வழுக்கும் சேற்று நிலத்தில் நடப்பார்க்கு ஊன்றுகோல் உதவுவது போல வாழ்க்கையில் வழிதவற நேரும்போது ஒழுக்கமுடையவரின் அறிவுரையானது துணை நிற்கும்.

b)

ஒழுக்கம் எல்லோருக்கும் மேன்மையைத் தரவல்லதால், அவ்வொழுக்கத்தை உயிரினும் மேலாகக் கருதி காக்க வேண்டும்.

c)

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிபிறப்பின் தன்மை ; ஒழுக்கம் இல்லாமல் இருப்பது இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.

12.

கருத்துகளை முறையாகவும் இனிமையாகவும் சொல்லும் ஆற்றலுள்ளவர் சொன்ன வேலையை உலகத்தார் உடனே செய்வார்கள்.


மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற திருக்குறளைத் தேர்வு செய்க.

a)

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்

உடையது உடையரோ மற்று

b)

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே

ஒருக்க முடையார்வாய்ச் சொல்

c)

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினது

சொல்லுதல் வல்லார்ப் பெறின்

13.

எப்பிறப் பாயினும் ஏமாப் பொருவற்கு

__________________________________________________

கற்றலும் கற்றவை கேட்டலும் கேட்டதன்கண்

நிற்றலும் கூடப் பெறின்.


விடுப்பட்ட வரியைப் பூர்த்தி செய்க.

a)

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்

b)

உத்தமர்தம் உறவு வேண்டும்.

c)

மக்கட் பிறப்பில் பிறிதில்லை - அப்பிறப்பில்

14.

ஏழை எளியவர் என்ற இணைமொழிக்கு ஏற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்க.

a)

நாம் ஏழை எளியவருக்கு பாகுபாடின்றி உதவி செய்ய வேண்டும்.

b)

கோழி குஞ்சுகள் தன் தாயிடம் ஏழை எளியோரைப் போல் வாழ்ந்தன.

c)

பணக்காரரான திரு.அன்பரசன் தன் குடும்பத்தினருடன் ஏழை எளியராக வாழ்ந்தார்.

15.

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

என்ற உவமைத்தொடருக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.

a)

காக்க வேண்டியரே துரோகம் செய்தல்

b)

தன் செயலில் கவனமாயிருத்தல்

c)

வெளியே சொல்ல முடியாமை

16.

காக்க வேண்டியவரே துரோகம் செய்தல் என்ற பொருளுக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தேர்வு செய்க.

a)

இலவு காத்த கிளி போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற் போல

17.

தள தள என்ற இரட்டைக்கிளவிக்கு ஏற்ற பொருளைத் தேர்வு செய்க.

a)

உடல் பருமனாக இருத்தல்

b)

பயிர் செழிப்பாகக் காணப்படும் நிலை

c)

மென்மையான மேனி

18.

சிறுவயது முதல் மருத்துவராக வேண்டும் என்ற ராகவனின் எண்ணம், இறுதியில் ____________________ போனதை எண்ணி வருந்தினான்.

a)

இடித்துரைத்தாக

b)

ஈயாடவில்லையாக

c)

கானல் நீராக

19.

நமக்குப் போதிய அறிவு இருத்தல் அவசியம். குறைவான அறிவு ஆபத்துக்கு வழிவகுத்துவிடும்.


மேற்கண்ட பொருளுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு

b)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

c)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

20.

நடந்ததை எண்ணி மூடனைப் போல் வருத்தப்படமால், போடா! வருவது வரட்டும் என்று புத்திசாலியாக யோசிக்க வேண்டும்.


(கண்ணதாசனின் அனுபவ மொழிகள்)


மேற்கண்ட பொன்மொழிக்கு ஏற்ற பழமொழியைத் தேர்வு செய்க.

a)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.

b)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

c)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்