Font size
Worksheets7. அணி இலக்கணம்
Total questions: 10
Worksheet time: 50secs
அணி என்பதற்கு ______ என்பது பொருள்.
அ) அழகு
ஆ) செல்வம்
இ) வீரம்
ஈ) ஈகை
அணி இலக்கணம் குறித்து விளக்கும் நூல் _______.
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) தண்டியலங்காரம்
ஈ) அகத்தியம்
ஒரு செய்யுளில் உவமை, உவமேயம், உவம உருபு ஆகிய மூன்றும் வெளிப்படையாய் அமையுமானால், அஃது ____ அணி ஆகும்.
அ) இல்பொருள் உவமை அணி
ஆ) பிறிது மொழிதல் அணி
இ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஈ) உவமை அணி
ஒரு செய்யுளில் உவமை, உவமேயம் வெளிப்பட்டு வந்து உவம உருபு மட்டும் மறைந்து அமையுமானால், அஃது ____ அணி ஆகும்.
அ) இல்பொருள் உவமை அணி
ஆ) ஏகதேச உருவக அணி
இ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஈ) உவமை அணி
'அகழ்வாரைத் தாங்கும் நிலம் ... எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி _____.
அ) உவமை அணி
ஆ) பிறிது மொழிதல் அணி
இ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஈ) இல்பொருள் உவமை அணி
'தொட்டனைத்து ஊரும் மணற்கேணி ... எனத் தொடங்கும் குறளில் பயின்று வந்துள்ள அணி ________.
அ) இல்பொருள் உவமை அணி
ஆ) உவமை அணி
இ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஈ) ஏகதேச உருவக அணி
இல்லாத ஒன்றை இருப்பது போலாக் கற்பனை செய்து அதனை உவமையாய்க் கட்டுவது ______ ஆகும்.
அ) இல்பொருள் உவமை அணி
ஆ) உவமை அணி
இ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஈ) ஏகதேச உருவக அணி
'பொன்மழை பொழிந்தது போல' என்னும் தொடரில் பயின்று வந்துள்ள அணி ________.
அ) இல்பொருள் உவமை அணி
ஆ) பிறிது மொழிதல் அணி
இ) எடுத்துக்காட்டு உவமை அணி
ஈ) உவமை அணி
ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை _______ என்பர்.
அ) உவமை (அ) உவமானம்
ஆ) உவம உருபு
இ) உவமேயம்
ஈ) வேற்றுமை
போல, புரைய, அன்ன , இன்ன , அற்று, இற்று, மான, கடுப்ப , ஒப்ப , உறழ போன்றவை _______ களாக வரும்.
அ) உவமை (அ) உவமானம்
ஆ) உவம உருபு
இ) உவமேயம்
ஈ) வேற்றுமை
