NEW
Font size
Worksheets+2 வணிகவியல் பாடம் 1 மேலாண்மைத் தத்துவங்கள்
Total questions: 27
Worksheet time: 11mins
1. மேலாண்மை என்பது ................ ன் செயல் ஆகும்.
அ) மேலாளர்
ஆ) கீழ்ப்பணியாளர்
இ) மேற்பார்வையாளர்
ஈ) உயரதிகாரி
2. மேலாண்மை என்பது ஒரு................
அ) கலை
ஆ) அறிவியல்
இ) கலை மற்றும் அறிவியல்
ஈ) கலை அல்லது அறிவியல்.
3. அறிவியல் பூர்வ மேலாண்மை கோட்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்.
அ) ஃபோயல்
ஆ) டேலர்
இ) மேயோ
ஈ) ஜேக்கப்
4. வேலையை பல்வேறு சிறு பணிகளாக பிரிப்பதை ................. என்பர்.
அ) ஒழுங்கு
ஆ) பயன்பாடு
இ) வேலைப்பகிர்வு
ஈ) சமத்துவம்
5. பரந்த அளவு வீச்செல்லையில் அதிகாரப்படி நிலை மட்டங்களின் அளவு..............
அ) அதிகம்
ஆ) குறைவு
இ) பன்மடங்கு
ஈ) கூடுதல்
6) கீழ்க்கண்டவற்றுள் நவீன மேலாண்மை கோட்பாடுகள் எது?
(a) ஊதியம்
(b) முறைமை
(c) நேர்மை நெறி
(d) இவை அனைத்தும்
7) ஒவ்வொரு முதலாளியும் தனது செழிப்பை தனது _________ செழிப்பு மூலமே அடைய, எய்த முடியும்.
(a) பணியாளர்களின்
(b) முதலாளியின்
(c) மேலாளரின்
(d) நிர்வாகத்தின்
8) நிர்வாகம் மற்றும் ஆளுமைப் பணி எதனுடன் தொடர்புடையது?
(a) நிர்வாகம்
(b) மேலாண்மை
(c) நிர்வாகம் மற்றும் மேலாண்மை
(d) நிறுவனம்
9) கீழ்க்கண்டவற்றுள் எது நிர்வாகத்தின் பணியாகும்?
(a) நிர்வாகம் மற்றும் ஆளுமை
(b) மேலாளர் மற்றும் நிர்வாகி
(c) சட்டம் மற்றும் தீர்மானித்தல்
(d) இவற்றில் எதுவுமில்லை
10) _________ நிறுவனக் கூட்டமைப்பு என்பது நிறுவனத்தின் சவால்களை சுமத்துகின்றது.
(a) உயரமான
(b) குறுகிய
(c) செங்குத்தான
(d) கிடைமட்டம்
11) உயர்மட்ட நிர்வாகத்திலிருந்து மேற்பார்வைகள் நெடுந்தொலைவு விலகி இருப்பதால் _________ இல்லாமல் போய் விடுகின்றது.
(a) ஒருங்கிணைத்தல்
(b) கட்டுப்படுத்துதல்
(c) இவை இரண்டுமில்லை
(d) ஒருங்கிணைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல்
12) நவீன மேலாண்மையின் தந்தை யார் ?
(a) ஹென்றி போயல்
(b) பீட்டர் ட்ரக்கர்
(c) டெயிலர்
(d) எதுவுமில்லை
13) யாருடைய மேலாண்மை வரைவிலக்கணம் ஒரு மேலாளர் என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகிறது?
(a) ஹென்றி போயல்
(b) பீட்டர் F. டிரக்கர்
(c) டேலர்
(d) எதுவுமில்லை
14) வணிக உலகில் வெற்றிகரமாக நுழைவதற்கு கடவுச் சீட்டு போன்றது எது?
(a) மேலாண்மை
(b) நிர்வாகம்
(c) திறமை
(d) உயர்தனிச் சிறப்பு
15) நவீன மேலாண்மைக் கோட்பாட்டின் தந்தை _________ .
(a) ஹென்றி போயல்
(b) பீட்டர் F. டிரக்கர்
(c) டேலர்
(d) லூயிஸ் A. ஆலன்
16) _________ என்பது ஒரு அலுவலர் தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையைக் குறிக்கின்றது.
(a) பொறுப்பு
(b) மேலாண்மை
(c) நிர்வாகம்
(d) அதிகாரம்
17 ) கூற்று (A): திரு. பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களது நிர்வாகத் திறமையும், மேலாண்மைத் திறமையும் அவரது மகளான திருமதி. இந்திராகாந்தி அவர்களின் திறன்களோடு ஒப்பிட்டுப் பார்க்க இயலாது.
காரணம் (R): திறன் என்பது நபருக்கு நபர், நாட்டுக்கு நாடு மாறக்கூடியது.
அ. (A) மற்றும் (R) சரியானது மேலும் (A) என்பது (R) ஐ விளக்கவில்லை.
ஆ. (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது.
இ. (A) சரியானது ஆனால் (R) தவறானது.
ஈ. (A) மற்றும் (R) தவறானது.
18) கூற்று (A): பரந்த அளவுள்ள மேலாண்மை பரப்பில் குறைவான அதிகாரப் படிநிலை மட்டங்கள் இருக்கும்.
காரணம் (R): தொழிலமைப்பின் அடிப்படைக் கூட்டமைப்பு பெயரளவில் இருக்கும். மேலாளர் நியமனம் குறைவாக இருக்கும்.
அ. (A) மற்றும் (R) சரியானது மேலும் (A) என்பது (R) ஐ விளக்கவில்லை.
ஆ. (A) மற்றும் (R) சரியானது, (A) ஐ (R) விளக்குகிறது.
இ. (A) மற்றும் (R) தவறானது.
ஈ. (A) சரியானது ஆனால் (R) தவறானது.
19) பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றை கண்டுபிடி
a) கணக்கியல்
b) அறிவியல்
c) புள்ளியியல்
d) பொருளியல்
20) பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றை கண்டுபிடி
a) நிர்வாகி
b) மேலாளர்
C) அமைச்சர்
d) பணியாளர்
21) பின்வருவனவற்றில் சரியான இணையை தேர்வு செய்
அ. நவீன மேலாண்மை - ஹென்றி ஃபோயல்
ஆ. மேலாண்மை பயிற்சியியல் - F.W. டேலர்
இ. மேலாண்மை மேலாளர் - பீட்டர் F. ட்ரக்கர்
ஈ. அறிவியல்பூர்வ மேலாண்மை - லூயிஸ் A. ஆலன்
22) பின்வருவனவற்றில் தவறான இணையை தேர்வு செய்
அ. நிர்வாகி - நிர்வாகம்
ஆ. ஊதியம் - பணியாளர்
இ. நிதியியல் - கணக்காளர்
ஈ. மேலாளர் - உரிமையாளர்
23) பின்வருவனவற்றில் தவறான வாக்கியத்தை தேர்வு செய்
அ. மேலாண்மை என்பது ஒரு நுட்பமான அறிவியலாகும்.
ஆ. ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் நிர்வாகி.
இ. கீழ்ப்படிதல், முறைப்படி நடத்தல், அதிகாரத்தை மதித்தல் போன்றவை ஒழுங்குமுறைகளாகும்.
ஈ. மேலாண்மை வீச்செல்லையானது பரந்த மற்றும் குறுகிய தன்மையுடையது.
24) பின்வருவனவற்றில் தவறான வாக்கியத்தை தேர்வு செய்
அ. அதிகாரம் என்பது தன் கீழ்ப்பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமையாகும்.
ஆ. ஒரு நிறுவனத்தின் மேலாண்மைப் பணியை ஏற்பவர் மேலாளர்.
இ. அதிகபட்ச மனித நலம் என்பது மேலாண்மையின் நோக்கங்களில் ஒன்றாகும்.
ஈ. நவீன மேலாண்மை கோட்பாடுகளை பீட்டர் டிரக்கர் வகுத்துள்ளார்.
சரியான வாக்கியத்தை காண்க
மேலாண்மை என்பது வணிக உலகில் நுழைவதற்கான சிறந்த கடவுச்சீட்டு இல்லை.
நிர்வாகி என்பவர் நிறுவனத்தை நிர்வகிக்கப் பொறுப்பாகிறார்.
அதிகாரம் என்பது மேலாளர் தன் கீழ்ப் பணியாளர்களுக்கு ஆணையிடும் உரிமை இல்லை.
முதலீட்டின் மூலம் ஆதாயம் பெறும் உரிமையாளர், நிர்வாகி அல்லர்.
சரியான வாக்கியத்தை காண்க
செயல்முறை என்பது மேலாண்மையின் மாறாத தன்மையினைக் குறிக்கின்றது.
அறிவியல்பூர்வ மேலாண்மை கோட்பாடுகளை ஹென்றி ஃபோயல் வகுத்துள்ளார்.
மேலாண்மை என்பது ஒரு நுட்பமான அறிவியலாகும்.
நிர்வாகம் தனது உபரி இலாபத்தை தனது பணியாளர்களுடன் பகிராது.
பொருத்துக
1. மேலாண்மைக் கருவி - i) படுக்கை அமைப்பு
2. மேலாண்மை - ii) ஊதியம்
3. பணியாளர் - iii) மேலாளர்
4. விரிவான வீச்சு - iv) வணிகச் சட்டம்
(1) – (iv) , (2) – (iii) , (3) – (ii) , (4) - (i)
(1) – (iii) , (2) – (i) , (3) – (iv) , (4) - (ii)
(1) – (i) , (2) – (ii) , (3) – (iv) , (4) - (iii)
(1) – (i) , (2) – (iii) , (3) – (ii) , (4) - (iv)
