Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy.M மதுரை அலகு 12

Total questions: 35

Worksheet time: 18mins

Name
Class
Date
1.

மதுரையில் அமைந்துள்ள ஆறு ----------------- ஆகும்.

a)

வைகை

b)

கிருஷ்ணா

c)

காவேரி

2.

மதுரையின் வேறு பெயர்களில் ஒன்று

a)

ஆவினன்குடி

b)

திருவேரகம்

c)

நான்மாடக் கூடல்

3.

மதுரையின் நகர அமைப்புப் பற்றி விரிவாக்கப் பேசும் இலக்கியம் ஒன்று

a)

இன்னா நாற்பது

b)

மணிமேகலை

c)

சிலப்பதிகாரம்

4.

சங்கப் புலவர்களில் மதுரையைச் சேர்ந்தவர்கள் ---------- பேர் ஆகும்.

a)

100

b)

190

c)

40

5.

கிரேக்கர்,உரோமர்களை -------------- என்று தமிழ்

வரலாற்று நூல்களிற் கூறுவர் .

a)

களப்பிரர்

b)

வட நாட்டவர்

c)

யவனர்

6.

பண்டைய காலத்தில் எத்தனை தமிழ்ச் சங்கங்கள் இருந்தன?

a)

3

b)

4

c)

5

7.

சிலப்பதிநகரகார கண்ணகியால் எரியூட்டப் பட்ட

நகரம்

a)

பழனி

b)

சென்னை

c)

மதுரை

8.

'அங்காடி' என்பதன் ஒத்த சொல்


a)

கோயில்

b)

கல்வி நிலையம்

c)

சந்தை

9.

'ஓடிய குதிரை' என்பதில் வரும் 'ஓடிய'என்பது

a)

வினை முற்று

b)

வினை எச்சம்

c)

பெயர் எச்சம்

10.

'படிக்க விரும்பினான் ' என்பதில் வரும் 'படிக்க 'என்பது


a)

வினை முற்று

b)

வினை எச்சம்

c)

பெயர் எச்சம்

11.

'மன்று' என்பதன் ஒத்தசொல்

a)

விழா

b)

கோயில்

c)

சபை

12.

'புகழ்ச்சி' என்பதன் எதிர்ச் சொல்

a)

வளர்ச்சி

b)

மகிழ்ச்சி

c)

இகழ்ச்சி

13.

'inscription' என்பதன் தமிழ்ச் சொல்

a)

கல்வெட்டு

b)

சான்று

c)

தொல்லியல் ஆய்வு

14.

'Sculpture' என்பதன் தமிழ்ச் சொல்

a)

கல்வெட்டு

b)

தொல்லியல் ஆய்வு

c)

சிற்பம்

15.

திருகோணமலையின் வடக்கு எல்லை

a)

மன்னார்

b)

மட்டக்களப்பு

c)

வவுனியா

d)

முல்லைத்தீவு

16.

வீரமாமுனிவர் இந்தியாவிற்கு வந்த நோக்கம் என்ன?

a)

அரசியல்

b)

வணிகம்

c)

கத்தோலிக்க சமயப்பணி

17.

'தேம்பாவணி' என்பதன் ஒரு பொருள்

a)

அழகான மாலை

b)

சமயக் காப்பியம்

c)

வாடாத மாலை

18.

'தேம்பாவணி' யில் எத்தனை பாடல்கள் உள்ளன?

a)

67

b)

3615

c)

1900

19.

கடல் என்பதன் ஒத்தசொல்

a)

வீடு

b)

அழகு

c)

ஆழி

20.

'தீவு' என்பதன் ஆங்கில வடிவம்

a)

center

b)

Island

c)

east

21.

குணப்பெயர்:

a)

வெண்மை

b)

பூ

c)

மரம்

d)

மாலை

22.

காலவாகுபெயர்:

a)

வானம் வெளித்தது

b)

இளவேனில்

c)

கார்த்திகை பூத்தது

d)

உறுமீன்

23.

ஒருமைச் சொல்

a)

நீ

b)

மாடுகள்

c)

மன்னர்

d)

மாணவர்

24.

போத்துக்கேயர் எப்போது இலங்கைக்கு

வந்தனர்?

a)

2007

b)

1505

c)

1958

d)

1922

25.

போத்துக்கேயர் இலங்கைக்கு வந்த போது இலங்கையில் இருந்த

அரசுகள்

a)

5

b)

1

c)

3

d)

9

26.

யாழ்ப்பாணத்தில் துறைமுகம் உள்ள இடம்

a)

காங்கேசன்துறை

b)

திருகோணமலை

c)

மன்னார்

d)

மட்டக்களப்பு

27.

நீங்கள் எப்போது வருவீர்கள் ? இதில்' நீங்கள்' என்பது

a)

தன்மை

b)

படர்க்கை

c)

எதுகை

d)

முன்னிலை

28.

ஏமம் என்பது

a)

திரிசொல்

b)


திசைச்சொல்

c)

வடசொல்

d)

இயற்சொல்

29.

அலுமாரி என்பது

a)

வடசொல்

b)

திசைச்சொல்

c)

திரிசொல்

30.

பாடசாலை என்பது


a)

இயற்சொல்

b)

வடசொல்

c)

திசைச்சொல்

d)

திரிசொல்

31.

புஸ்பம் என்பது

a)

திரிசொல்

b)

இயற்சொல்

c)

வடசொல்

d)

திசைச்சொல்

32.

காப்பு+ அரண்

என்பதில் வரும் 'காப்பு' என்பது

a)

வருமொழி

b)

நிலைமொழி

33.

கடல்+அலை என்பதில் வரும் 'அலை 'என்பது

a)

வருமொழி

b)

நிலைமொழி

34.

நாற்காலி என்பது ___________________ பெயராகும்

a)

காரணப்

b)

இடுகுறி

35.

நானும் அக்காவும் உணவு ______________________.

a)

உண்டீர்கள்

b)

உண்ணும்

c)

உண்டான்

d)

உண்போம்