wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

PHYSICS - I, A/L 2018

Total questions: 50

Worksheet time: 2hrs 40mins

Name
Class
Date
1.

அமுக்கத்தின்‌ அலகு

a)

 kgms2kgms^{-2}  

b)

 kgm2s2kgm^{-2}s^{-2}  

c)

 kgm1s2kgm^{-1}s^{-2}  

d)

 kgm2s3kgm^{-2}s^{-3}  

e)

 kgm2s2A1kgm^{-2}s^{-2}A^{-1}  

2.

X, Y, Zஆகியன வெவ்வேறு பரிமாணங்களைக்‌ கொண்ட மூன்று பெளதிகக்‌ கணியங்களை வகைகுறிக்கின்றன. இவை வடிவம்‌ P=AX+BY+CZஆக உள்ள வேறொரு பெளதிகக்‌ கணியம்‌ P ஐ ஆக்குமாறு இணைக்கப் படலாம்‌, பின்வரும்‌ கோவைகளில்‌ எது ஏனையவற்றிலிருந்து வேறுபட்ட பரிமாணங்களைக்‌ கொண்டது

a)

AX

b)

AX-CZ

c)

(AX)(CZ)BY\frac{\left(AX\right)\left(CZ\right)}{BY}

d)

(BY)2P\frac{(BY)^2}{P}

e)

(AX)(CZ)

3.

பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது உண்மையானதன்று?

a)

லேசர்‌ ஒளி குறுக்கு அலைகளைக்‌ கொண்டுள்ளது

b)

காமாக்‌ கதிர்கள்‌ குறுக்கு அலைகளாகும்‌.

c)

புவியின்‌ ஓட்டினூடாகச்‌ செல்லும்‌ (P - அலைகள்) நெட்டாங்கு அலைகளாகும்

d)

கழியொலி அலைகள்‌ நெட்டாங்கு அலைகளாகும்‌

e)

FM அலைகள்‌ நெட்டாங்கு அலைகளாகும்‌

4.

 

ஒர்‌ இலட்சிய வாயுவில்‌ ஒலியின்‌ கதி  ν\nu   பற்றிய பின்வரும்‌ கூற்றுகளைக்‌ கருதுக.
(A).  ν\nu   ஆனது வாயுவின்‌ தனி வெப்பநிலைக்கு நேர்‌ விகிதசமமாகும்‌.
(B)  ν\nu   ஆனது வாயுவின்‌ மூலர்த்‌ திணிவுக்கு நேர்மாறு விகிதசமமாகும்‌.
(C)  ν\nu   ஆனது வாயுவின்‌ மூலர்‌ வெப்பக்‌ கொள்ளளவுகளுக்கிடையே உள்ள விகிதம்‌  Υ\Upsilon   ஐச்‌ சார்ந்திருக்கின்றது. மேற்குறித்த கூற்றுகளில்‌

a)

A மாத்திரம்‌ உண்மையானது

b)

C மாத்திரம்‌ உண்மையானது

c)

A, B ஆகியன மாத்திரம்‌ உண்மையானவை

d)

B, C ஆகியன மாத்திரம்‌ உண்மையானவை

e)

A, B, C ஆகிய எல்லாம்‌ உண்மையானவை

5.

இயல்பான செப்பஞ்செய்கையின்‌ கீழ்‌ உள்ள ஒளியியல்‌ உபகரணங்கள்‌ பற்றிய பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது உண்மையானதன்று?

a)

ஓர்‌ எளிய நுணுக்குக்காட்டியில்‌ பொருளின்‌ விம்பம்‌ மாயமானது

b)

ஓர் எளிய நுணுக்குக்காட்டியைப்‌ பயன்படுத்திச்‌ சிறிய எழுத்துகளை வாசிக்கையில் குறும்பார்வைக்‌ குறைபாடு உள்ள ஒருவர்‌ நீள்பார்வைக்‌ குறைபாடு உள்ள ஒருவ‌ரிலும் பார்க்கக்‌ கூடுதலான ஓர் அனுகூலத்தைக் கொண்டுள்ளார்

c)

ஒரு கூட்டு நுணுக்குக்காட்டியில்‌ பார்வைத்‌ துண்டு ஒர்‌ எளிய நுணுக்குக்காட்டியாகத்‌ தொழிற்படுகின்றது

d)

ஒரு ௯ட்டு நுணுக்குக்காட்டியில்‌ இறுதி விம்பம்‌ தலைகீழானது

e)

வானியல்‌ தொலைகாட்டியில்‌ பொருள்‌ தூரம்‌, விம்பத்‌ தூரம்‌ ஆகிய இரண்டும்‌ மிகப்‌ பெரியனவாகக்‌ கருதப்படும்‌

6.

ஓர்‌ இலட்சிய வாயு பயன்படுத்தப்படும்‌ ஒரு குறித்த வெப்பவியக்கவியற்‌ செயன்முறையில்‌ வாயுவின்‌ அகச்‌ சக்தியில்‌ உள்ள அதிகரிப்பானது வாயுவிற்கு வழங்கப்பட்ட வெப்பத்தின்‌ அளவுக்குச்‌ சமமாகும்‌. இச்செயன்முறை

a)

ஒரு சக்கரச்‌ செயன்முறையாகும்‌

b)

ஒரு சேறலிலாச்‌ செயன்முறையாகும்‌

c)

ஒரு மாறா அமுக்கச்‌ செயன்முறையாகும்‌

d)

ஒரு மாறாக்‌ கனவளவுச்‌ செயன்முறையாகும்‌

e)

ஒரு சமவெப்புச்‌ செயன்முறையாகும்‌

7.

ஓர்‌ உலோகக்‌ கோலின்‌ வெப்பநிலையை  1000C100^0C   இனால்‌ அதிகரிக்கச்‌ செய்யும்போது அதன்‌ நீளத்தின்‌ பின்ன மாற்றம்‌  2.4 × 1052.4\ \times\ 10^{-5}    ஆகும்‌. கோலின்‌ திரவியத்தின்‌ ஏகபரிமாண விரிகைத்திறன்‌

a)

 2.4×103C12.4\times10^{-3}C^{-1}  

b)

 2.4×104 C12.4\times10^{-4\ }C^{-1}  

c)

 2.4×105C12.4\times10^{-5}C^{-1}  

d)

 2.4×106C12.4\times10^{-6}C^{-1}  

e)

 2.4×107C12.4\times10^{-7}C^{-1}  

8.

ஒரு குறித்த நிலைமாற்றியின்‌ முதன்மைச்‌ சுருளில்‌ 900 முறுக்குகளும்‌ துணைச்‌ சுருளில்‌ 30 முறுக்குகளும்‌ உள்ளன. முதன்மைச்‌ சுருளுக்குக்‌ குறுக்கே 240 V ஆடல்‌ வோல்ற்றளவு பிரயோகிக்கப்படும்போது துணைச்‌ சுருளுக்குக்‌ குறுக்கே உள்ள வோல்ற்றளவு

a)

0 V

b)

8 V

c)

12 V

d)

72 V

e)

7.2 kV

9.

பின்வருவனவற்றில்‌ எது மி.இ.வி. இன்‌ ஒரு முதலன்று?

a)

மின்னிரசாயனக்‌ கலம்‌

b)

ஓளியிருவாயி

c)

இறுக்கமின்‌ பளிங்கு

d)

வெப்பவிணை

e)

ஏற்றிய கொள்ளளவி

10.

உரு (a) இல்‌ காட்டப்பட்டுள்ள தருக்கச்‌ சுற்றுக்குச்‌ சமவலுவுள்ளது

a)
b)
c)
d)
e)
11.

ஆரை  RAR_A  ஐ உடைய ஒரு சீரான கோளக்‌ கோள்‌ A இனதும்‌ ஆரை  RBR_B  ஐ உடைய ஒரு சீரான கோளக்‌ கோள்‌ B இனதும்‌ மேற்பரப்புகளின்‌ மீது உள்ள ஈர்ப்பினாலான ஆர்முடுகல்கள்‌ சமமாகும்‌. A இன்‌ திணிவு B இன்‌ திணிவின்‌ இருமடங்கெனின்‌, 

a)

 RA=2RBR_A=\sqrt{2}R_B  

b)

 RA=2RBR_A=2R_B  

c)

 RA=RB2R_A=\frac{R_B}{\sqrt{2}}  

d)

 RA=RB2R_A=\frac{R_B}{2}  

e)

 RA=RBR_A=R_B  

12.

A, B, C, D ஆகியன உரு (a) இல்‌ காட்டப்பட்டுள்ளவாறு ஒரு பொருளின்‌ மீது: தாக்குகின்ற சம பருமனுள்ள ஐந்து ஒருதள விசைகளாகும்‌. பின்வரும்‌ வரிப்படங்களில்‌ எது இவ்விசைகளின்‌ விளையுளின்‌ திசையை மிகச்‌ சிறந்த விதத்தில்‌ வகைகுறிக்கின்றது?

a)
b)
c)
d)
e)
13.

ஒர்‌‌ ஒப்பமான கிடைக்‌ கீற்று மீது அதன்‌ விளிம்பிலே நிலையாக இருக்கும்‌ 2 X 10-6 kg (2மில்லிக்கிராம்‌) திணிவுள்ள ஒர்‌ எறும்பு 0.2s இல்‌ வாயினால்‌ ஊதி அகற்றப்படுகின்றது. ஊதும்‌ திசை அம்புக்குறிகளினால்‌ உருவில்‌ எறும்பு காட்டப்பட்டுள்ளவாறு கிடையானது. எறும்பு ஊதப்படும்‌ திசையில்‌ ஒரு கிடை வேகம்‌ 0.5 ms-1 உடன்‌ வீசப்படுகின்றதெனின்‌, ஊதுவதன்‌ மூலம்‌ எறும்பு மீது:

உஞற்றப்படும்‌ சராசரி விசை

a)

5 ×106 N5\ \times10^{-6\ }N

b)

1 × 105 N1\ \times\ 10^{-5\ }N

c)

2 × 105 N2\ \times\ 10^{-5}\ N

d)

1 ×103 N1\ \times10^{-3}\ N

e)

5 × 103 N5\ \times\ 10^{-3}\ N

14.

ஓர்‌ உறைந்த குளத்தின்‌ கிடை மேற்பரப்பு மீது வைக்கப்பட்டுள்ள திணிவு  mm   ஐ உடைய ஒரு சிறிய பொருளுக்குக்‌ கிடைத்‌ திசை வழியே ஒரு தொடக்கக்‌ கதி  v0v_0   கிடைக்குமாறு ஓர்‌ உதைப்பு கொடுக்கப்படுகின்றது. பொருள்‌ மேற்பரப்பு மீது ஒரு கிடை நேர்கோட்டில்‌ சுழற்சி இல்லாமல்‌ செல்கிறது. பொருளுக்கும்‌ மேற்பரப்புக்குமிடையே உள்ள இயக்கப்பாட்டு உராய்வுக்‌ குணகம்‌  μ\mu   ஆகும்‌. வளித்‌ தடை புறக்கணிக்கப்படுமெனின்‌, பொருள்‌ ஓய்வுக்கு வருவதற்கு முன்னர்‌ செல்லும்‌ தூரம்‌

a)

 v022μg\frac{v_0^2}{2\mu g}  

b)

 v02μg\frac{v_0^2}{\mu g}  

c)

 2v02μg\frac{2v_0^2}{\mu g}  

d)

 v022g\frac{v_0^2}{2g}  

e)

 2v02g\frac{2v_0^2}{g}  

15.

பத்து இலேசான சர்வசம கோல்களைப்‌ பயன்படுத்தி ஒவ்வொன்றும்‌ m திணிவைக் கொண்ட பத்து சர்வசம கோளங்களை ‌ இணைப்பதன்‌ மூலம்‌ உருவில்‌ காட்டப்பட்ட ஒர்‌ ஒருதளக்‌ கட்டமைப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டமைப்பின்‌ புவியீர்ப்பு மையம்‌ பெரும்பாலும்‌ இருக்கத்தக்க புள்ளி

a)

O

b)

A

c)

B

d)

C

e)

D

16.

2 kg திணிவுள்ள ஒரு குற்றி ஒரு கிடை மேற்பரப்பு வழியே தள்ளப்படுகின்றது. நேரம்‌ t உடன்‌ குற்றியின்‌ இடப்பெயர்ச்சி x இன்‌ மாறல்‌ உருவிற்‌ காட்டப்பட்டுள்ளது. 0<t<2, 2<t<4, 4<t<5 ஆகிய நேர ஆயிடைகள்‌ ஒவ்வொன்றின்போதும்‌ குற்றி மீது அதன்‌ இயக்கத்‌ திசையில்‌ தாக்கும்‌ விளையுள்‌ விசை F இன்‌ பெறுமானங்கள்‌ மாறாமல்‌ இருக்கின்றன. பின்வருவனவற்றில்‌ எது ஒவ்வொரு நேர ஆயிடைகளிலும்‌ F இன்‌ பருமனைச்‌ சரியாக வகைகுறிக்கின்றது?

a)

(1)

b)

(2)

c)

(3)

d)

(4)

e)

(5)

17.

எளிய இசை இயக்கத்தை ஆற்றும்‌ ஒரு பொருளின்‌ ஓர்‌ இடப்பெயர்ச்சி (x) -நேர (t) வளையி உருவிற்‌ காட்டப்பட்டுள்ளது. இவ்வியக்கத்துக்கு ஆவர்த்தன காலம்‌ T, மீடிறன்‌ f, கோணக்‌ கதி ௰, உயர்ந்தபட்சக்‌ கதி vmax , உயர்ந்தபட்ச ஆர்முடுகல்‌ amax ஆகியவற்றின்‌ பருமன்களைத்‌ தருவது

a)

(1)

b)

(2)

c)

(3)

d)

(4)

e)

(5)

18.

ஒருவர்‌ தனது தானத்திலிருந்து 1 km இற்கு அப்பால்‌ ஓய்வில்‌ உள்ள ஒரு யானையை அவதானிக்கின்றார்‌. அவருக்குக்‌ கேட்கும்‌ யானையின்‌ பிளிறலின்‌ ஒலிச்‌ செறிவு  1010 W m210^{-10}\ W\ m^{-2}  ஆகும்‌. ஒலி ஒரு புள்ளி முதலிலிருந்து வருகின்றதெனக்‌ கொள்க. அவருடைய கேட்டலின்‌ நுழைவாய்‌  1012 W m210^{-12}\ W\ m^{-2}   எனின்‌, அவர்‌ இந்தப்‌ பிளிறலைக்‌ கேட்கத்தக்க உயர்ந்தபட்சத்‌ தூரம்‌ யாது ? 

a)

1 km

b)

km

c)

4.5 km

d)

10 km

e)

20 km

19.

P, Q என்னும்‌ இரு கண்ணாடியுள்‌ இரச வெப்பமானிகள்‌ P இன்‌ இரசக்‌ குமிழ்‌ Q இன்‌ இரசக்‌ குமிழிலும்‌ பார்க்கப்‌ பெரிதாக இருக்குமாறு அமைக்கப்பட்டு, அவை இரண்டும்‌ வீச்சு 0 oC - 100 oC இல்‌ தரங்கணிக்கப்பட்டுள்ளன. இரு குமிழ்களினதும்‌ சுவர்கள்‌ ஒரே தடிப்பை உடையனவெனக்‌ கொள்க. பின்வரும்‌ கூற்றுகளைக்‌ கருதுக. சீரான துளை கொண்ட மயிர்த்‌ குழாய்களைப்‌ பயன்படுத்தி இரு வெப்பமானிகளும்‌

(A) 0 oCகுறிக்கும்‌ 100 oC குறிக்குமிடையே ஒரே மயிர்த்துளை நீளத்தைக் கொண்டிருக்குமாறு அமைக்கப்படலாம்‌.

(B) அளக்கப்படும்‌ வெப்பநிலையின்‌ விரைவான மாற்றங்களுக்கு ஒரே மறுகை நேரம்‌ கிடைக்குமாறு அமைக்கப்படலாம்‌.

(C) வெப்பமானி P இன்‌ உணர்திறன்‌ வெப்பமானி Q இன்‌ உணர்திறனிலும்‌ பார்க்கக்‌ கூடியதாக இருக்குமாறு அமைக்கப்படலாம்‌.

மேற்குறித்த கூற்றுகளில்‌

a)

A மாத்திரம்‌ உண்மையானது

b)

B மாத்திரம்‌ உண்மையானது

c)

B, C ஆகியன மாத்திரம்‌ உண்மையானவை

d)

A, C ஆகியன மாத்திரம்‌ உண்மையானவை

e)

A, B, C ஆகிய எல்லாம்‌ உண்மையானவை

20.

ஓர்‌ அமிழ்ப்பு வெப்பமாக்கி பொருத்தப்பட்ட ஒரு முழுமையாகக்‌ காவலிடப்பட்ட கொதிகலத்தினுள்ளே 1 x 10-2 kgs-1 என்ற மாறா வீதத்தில்‌ 0 oC இல்‌ உள்ள நீர்‌ தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது. நீரின்‌ தன்வெப்பக்‌ கொள்ளளவும்‌ ஆவியாக்கலின்‌ தன்‌ மறை வெப்பமும்‌ முறையே 4.2x 103J kg-1 oC-1, 2.25x 106 J kg -1 ஆகும்‌, நீரின்‌ அதே வழங்கல்‌ வீதத்தில்‌ 100 oC இல்‌ உள்ள கொதிநீராவி உண்டாக்கப்பட வேண்டுமெனின்‌, அமிழ்ப்பு வெப்பமாக்கியின்‌ வலு?

a)

4.2 kW

b)

22.5 kW

c)

26.7 kW

d)

42.0 kW

e)

267.0 kW

21.

சுற்றில்‌ காட்டப்பட்டுள்ள ஒவ்வொரு கொள்ளளவியினதும்‌ பெறுமானம்‌ 1μF ஆகும்‌. கொள்ளளவிகள்‌ முழுமையாக ஏற்றப்படும்போது கொள்ளளவிகளில்‌ தேக்கி வைக்கப்படும்‌ மொத்த ஏற்றம்‌

a)

2 μC

b)

4 μC

c)

5 μC

d)

8 μC

e)

10 μC

22.

ஒரு மாணவனால்‌ வரையப்பட்ட வளியில்‌ உள்ள சவர்க்காரக்‌ குமிழிகளின்‌ ஐந்து கொத்துகள்‌ உருக்களில்‌ காட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு கொத்திலும்‌ குமிழிகளின்‌ மையங்கள்‌ ஒருதளத்தில்‌ உள்ளனவெனின்‌, பின்வருவனவற்றில்‌ எந்தக்‌ கொத்து பெளதிகரீதியில்‌ சாத்தியமான சரியான வடிவத்தைக்‌ காட்டுகின்றது?

a)
b)
c)
d)
e)
23.

உருவில்‌ காட்டப்பட்டுள்ளவாறு தேறிய நேரேற்றத்தின்‌ ஓர்‌ ஏற்றப்‌ பரம்பலை உள்ளடக்கி ஒரு கவுச மேற்பரப்பு S வரையப்பட்டுள்ளது. A எனக்‌ குறிக்கப்பட்ட மேற்பரப்பின்‌ பகுதியினூடாக உள்ள மின்‌ பாயம்‌ -Ψ (Ψ>0) எனின்‌, கவுச மேற்பரப்பின்‌ எஞ்சிய பகுதியினூடாக உள்ள மின்‌ பாயம்‌ ΨR பற்றிப்‌ பின்வருவனவற்றில்‌ எது உண்மையானது?

a)

ΨR = - Ψ

b)

ΨR = + Ψ

c)

ΨR < - Ψ

d)

ΨR < + Ψ

e)

ΨR > + Ψ

24.

A, B, C ஆகிய சுற்றுகளில்‌ காட்டப்பட்டுள்ள மூன்று சர்வசம வோல்ற்றளவு முதல்கள்‌ புறக்கணிக்கத்தக்க அகத்‌ தடையைக்‌ கொண்டுள்ளன. சுற்று (B) இல்‌ V ஆனது அகத்‌ தடை r ஐ உடைய ஒரு வோல்ற்றுமானியை  வகைக்குறிக்கின்றது.   R3=R1rR1+rR_3=\frac{R_1r}{R_1+r}  
 எனின்‌, சுற்றுகளில்‌ காட்டப்பட்டுள்ள I1, I2, I3I_1,\ I_2,\ I_3   ஆகியன பற்றிப்‌ பின்வருவனவற்றில்‌ எது உண்மையானது

a)

I1 = I2 = I3

b)

I1 > I2 > I3

c)

I1 > I2 = I3

d)

I2 = I3 > I1

e)

I2 > I3 > I1

25.

காட்டப்பட்டுள்ள உருவில்‌ Z ஆனது அறியாப்‌ பெறுமானங்களைக்‌ கொண்ட தடையிகளின்‌ ஒரு வலையமைப்பை வகைகுறிக்கின்றது. வோல்ற்றளவு முதலின்‌ அகத்‌ தடை புறக்கணிக்கத்தக்கதெனின்‌, வலையமைப்பினால்‌ விரயமாக்கப்படும்‌ வலு

a)

60 mW

b)

90 mW

c)

120 mW

d)

150 mW

e)

180 mW

26.

காட்டப்பட்டுள்ள உருவில்‌ 1, 2, 3, 4, 5, 6 ஆகியன ஆறு சர்வசம மின்‌ குமிழ்களை வகை குறிக்கின்றன. கீழே தரப்பட்டுள்ள (A), (B), (C) என்னும்‌ நிலைமைகளில்‌ சுற்றின்‌ செயற்பாட்டைக்‌ கருதுக.

(A) குமிழ்‌ 2 சுட்டிருத்தல்‌.

(B) 2, 5 ஆகிய குமிழ்கள்‌ சுட்டிருத்தல்‌.

(C) குமிழ்கள்‌ எவையும்‌ சுடப்படாதிருத்தல்‌.

சுற்றில்‌ உள்ள. சுடப்படாத குமிழ்கள்‌ ஒரே பிரகாசத்துடன்‌ ஒளிர்வதைக்‌ காணத்தக்கதாக இருப்பது

a)

B இல்‌ மாத்திரம்‌

b)

C இல் ‌மாத்திரம்‌

c)

A, C ஆகியவற்றில்‌ மாத்திரம்‌

d)

B, C ஆகியவற்றில்‌ மாத்திரம்‌

e)

A, B, C ஆகிய எல்லாவற்றிலும்‌

27.

தரப்பட்ட சுற்றில்‌ 1, 2, 3 என்னும்‌ மூன்று 741 செயற்பாட்டு விரியலாக்கிகள்‌ முறையே ±15V, ±10V, ±8V என்னும்‌ வலு வழங்கல்களினால்‌ செயற்படுத்தப்படுகின்றன. V1, V2, V3 என்னும்‌ பயப்பு வோல்ற்றளவுகளின்‌ அண்ணளவுப்‌ பெறுமானங்கள்‌ முறையே

a)

+2V, -4V, -4V

b)

+15V, -10V, -8V

c)

+2V, +4V, -4V

d)

-15V, +10V, +8V

e)

+15V, +10V, +8V

28.

5l நீளமும் 5m திணிவும் உள்ள ஒரு சீரான பாரமான நேர்ப்‌ பலகை 2l இடைத்தூரத்தில்‌ உள்ள இரு தாங்கிகளின்‌ மீது உருவில்‌ காட்டப்பட்டுள்ள‌வாறு கிடையாக வைக்கப்பட்டுள்ளது. m திணிவுள்ள தீந்தை பூசும்‌ ஒருவர்‌ தனது தீந்தை வாளியையும்‌ காவிக்கொண்டூ முழுப்‌ பலகை நீளத்திலும்‌ நடக்க வேண்டியுள்ளது. பலகை புரளாதவாறு அவர்‌ காவிக்கொண்டு செல்லத்தக்க தீந்தை வாளியின்‌ உயர்ந்தபட்சத்‌ திணிவு யாது?

a)

15m2\frac{15m}{2}

b)

13m2\frac{13m}{2}

c)

5m4\frac{5m}{4}

d)

mm

e)

m4\frac{m}{4}

29.

மேலே திறந்துள்ள A, B, C என்னும்‌ மூன்று தொட்டிகள்‌ ஆரம்பத்தில்‌ உருவில்‌ காட்டப்பட்டுள்ள மட்டங்களுக்கு நீரினால்‌ நிரப்பப்பட்டுள்ளன. இவை நிலையியல்‌ நிலைமைகள்‌ பிரயோகிக்கப்படத்தக்கவாறு மிகக்‌குறைந்த கதியில்‌ வெளிவழி ஒன்றிற்கு நீரை வழங்குகின்றன. V1, V2 என்னும்‌ இரு வால்வுகள்‌, வால்வுக்கு மேலே உள்ள அமுக்கம்‌ வால்வுக்குக்‌ கீழே உள்ள அமுக்கத்திலும்‌ கூடியதாக இருக்கும்போது, நீரைக்‌ கீழ்நோக்கி மாத்திரம்‌ பாய இடமளிக்கின்றன. உருவில்‌காட்டப்பட்டுள்ள தொடக்க நிலைமைகளுடன்‌ தொகுதி செயற்படச்‌செய்யப்படும்போது பின்வரும்‌ கூற்றுகளில்‌ எது தொகுதியில்‌ பின்னர்‌ நடைபெறும்‌ செயற்பாட்டை மிகச்‌ சிறந்த விதத்தில்‌ விவரிக்கின்றது?

a)

வெளிவழியினூடாக நீர்‌ பாய்வதற்கு C மாத்திரம்‌ பங்களிப்புச்‌ செய்யும்‌

b)

வெளிவழியினூடாக நீர்‌ பாய்வதற்குத்‌ தொடக்கத்தில்‌ C பங்களிப்புச்‌ செய்யத்‌ தொடங்கும்‌ அதே வேளை அதன்‌ பின்னர்‌ B உம்‌ அதன்‌ பின்னர்‌ A உம்‌ பங்களிப்புச்‌ செய்யும்‌.

c)

வெளிவழியினூடாக நீர்‌ பாய்வதற்குத்‌ தொடக்கத்தில்‌ A பங்களிப்புச்‌ செய்யத்‌ தொடங்கும்‌ அதே வேளைஅதன்‌ பின்னர்‌ B உம்‌ அதன்‌ பின்னர்‌ C உம்‌ பங்களிப்புச்‌ செய்யும்‌.

d)

மூன்று தொட்டிகளும்‌ ஒரே நேரத்தில்‌ வெளிவழியினூடாக நீர பாய்வதற்கு. ஒருபோதும்‌ பங்களிப்புச்‌ செய்யமாட்டா

e)

தொடக்கத்தில்‌ எல்லா மூன்று தொட்டிகளும்‌ வெளிவழியினூடாக நீர்‌ பாய்வதற்குப்‌ பங்களிப்புச்‌ செய்யும்‌. அதே வேளை C இலிருந்து கூடுதலான பங்களிப்புக்‌ கிடைக்கின்றது.

30.

யங்ஙின்‌ மட்டைக்‌ காண்பதற்கான ஒரு பரிசோதனையில்‌ ஒரே திரவியத்தினாலான W1, W2, W3 என்ற மூன்று வெவ்வேறு கம்பிகளைப்‌ பயன்படுத்தி, உருவில்‌ காட்டப்பட்டுள்ளவாறு நீட்சி ΔL இற்கு எதிரான பிரயோக இழுவை விசை F இன்‌ வரைபுக்கான G1, G2, G3 என்னும்‌ மூன்று வளையிகள்‌ முறையே பெறப்பட்டுள்ளன. இங்கு வெவ்வேறு வரைபுகள்‌ கிடைப்பதற்குரிய காரணம்‌ பற்றிய பின்வரும்‌ ‌கூற்றுகளில்‌ எது உண்மையானது?

a)

கம்பி W1 ஆனது கம்பி W2 இலும்‌ பார்க்கப்‌ பெரிய நீளத்தையும்‌ சிறியகுறுக்குவெட்டுப்‌ பரப்பளவையும்‌ கொண்டிருக்கலாம்‌.

b)

கம்பி W1 ஆனது கம்பி W2 ஐப்‌ போன்று அதே நீளமுள்ளதாக ஆனால்‌ W2 இலும்‌ சிறிய குறுக்குவெட்டுப்‌ பரப்பளவைக்‌ கொண்டதாக இருக்கலாம்‌.

c)

கம்பி W3 ஆனது கம்பி W1 ஐப்‌ போன்று அதே குறுக்குவெட்டுப்‌ பரப்பளவுள்ளதாக ஆனால்‌ W1 இலும்‌ பெரியநீளமுள்ளதாக இருந்திருக்கலாம்‌

d)

கம்பி W2 ஆனது கம்பி W3 இலும்‌ பார்க்கச்‌. சிறிய குறுக்குவெட்டுப்‌ பரப்பளவுள்ளதாக ஆனால்‌ W3 இலும்‌பெரிய நீளமுள்ளதாக இருந்திருக்கலாம்

e)

கம்பி W3 இற்குரிய [குறுக்ககுவெட்டுப்பரப்பளவு/நீளம்] என்னும்‌ விகிதத்தின்‌ பெறுமானம்‌ கம்பி W1 இன்‌ அப்பெறுமானத்திலும்‌ பார்க்கப்‌ பெரியதாக இருக்கலாம்

31.

X, Y என்னும்‌ இரு பெரிய கிடைத்‌ தட்டுகளிடையே நடுவில்‌ ஒரு மெல்லிய தட்டைத்‌ தட்டு Z வைக்கப்பட்டு, அவ்வெளியில்‌ ஒரு பிசுக்கு எண்ணெய்‌ உருவில்‌ காட்டப்பட்டுள்ளவாறு நிரப்பப்பட்டுள்ளது. இப்போது X ஒய்வில்‌ இருக்கையில்‌ தட்டு Z கிடையாக மாறாக்‌ கதி v உடன்‌ வலப்‌ பக்கத்தை நோக்கியும்‌ தட்டு Y கிடையாக மாறாக்‌ கதி v/2‌ உடன்‌ இடப்‌ பக்கத்தைநோக்கியும்‌ இழுக்கப்படும்‌ ஒரு சந்தர்ப்பத்தைக்‌ கருதுக. X, Y ஆகியதட்டுகளுக்கிடையே உள்ள மெல்லிய எண்ணெய்ப்‌ படைகளின்‌வேகக்‌ காவிகளை மிகச்‌ சிறந்த விதத்தில்‌ வகைகுறிப்பது

a)
b)
c)
d)
e)
32.

கதிர்த்தொழிற்பாட்டு மூலகம்‌  XZAX_Z^A   ஆனது தொடர்ச்சியாக நடைபெறும்‌ தேய்வுகளின்‌ மூலம்‌ எட்டு α துணிக்கைகளினதும்‌ ஆறு β துணிக்கைகளினதும்‌ காலலுக்குப்‌ பின்னர்‌ உறுதியான  Pb82206Pb_{82}^{206}    ஆக நிலைமாறுகின்றது. மூலகம்‌ X இல்‌ உள்ள புரோத்தன்களினதும் ‌ ‌ நியூத்திரன்களினதும்  எண்ணிக்கை‌ முறையே

a)

92, 130

b)

92, 146

c)

92, 238

d)

104, 148

e)

146, 92

33.

ஒரு நிலைக்குத்துத்‌ தளத்தில்‌ உள்ள, மாறும்‌ குறுக்குவெட்டுப்‌பரப்பளவுகளைக்‌ கொண்ட ஒரு குழாயினூடாக உறுதியான அருவிக்‌கோட்டுப்‌ பாய்ச்சலில்‌ பாயும்‌ ஒரு பிசுக்கற்ற, நெருக்க முடியாதபாய்மத்தைக்‌ கருதுக. குழாயின்‌ நிலைக்குத்துக்‌ குறுக்குவெட்டுஉருவில்‌ காட்டப்பட்டுள்ளது. ஓர்‌ அருவிக்கோட்டின்‌ மூன்றுஅமைவுகள்‌ X, Y, Z ஆகியவற்றினால்‌ வகைகுறிக்கப்பட்டுள்ளன. X இல்‌ குழாயின்‌ குறுக்குவெட்டுப்‌ பரப்பளவு Z இல்‌ அப்பெறுமானத்தை ஒத்தது. கீழே தரப்பட்டுள்ள X, Y, Z ஆகிய அமைவுகளில்‌ முறையே ஓரலகுக்‌ கனவளவின்‌ இயக்கப்பாட்டுச்‌ சக்திகள்‌ ( KEX, KEY, KEZ ) ஒரலகுக்‌ கனவளவின்‌ அழுத்தச்‌ சக்திகள்‌ ( PEX, PEY, PEZ ), பாய்ம அமுக்கங்கள்‌ ( PX, PY, PZ ) ஆகியவற்றின்‌ தொடர்புப்‌ பருமன்களுக்கான பின்வரும்‌ சமனிலிகளைக்‌. கருதுக.


A) KEZ < KEX < KEY B) PEX < PEZ < PEY C) PY < PZ < PX

மேற்குறித்த சமனிலிகளில்‌

a)

A மாத்திரம்‌ உண்மையானது

b)

B மாத்திரம்‌ உண்மையானது

c)

A, B ஆகியன மாத்திரம்‌ உண்மையானவை

d)

B, C ஆகியன மாத்திரம்‌ உண்மையானவை

e)

A, B, C ஆகிய எல்லாம்‌ உண்மையானவை

34.

ஒரு தட்டின்‌ மையத்தினூடாகச்‌ செல்லும்‌ தட்டின்‌ தளத்திற்குச்‌ செவ்வனான ஒரு நிலைத்த நிலைக்குத்து அச்சுப்‌ பற்றித்‌ தட்டு உராய்வின்றிச்‌ சுயாதீனமாக ஒரு குறித்த கோணக்‌ கதியுடன்‌ சுழல்கின்றது. உருவில்‌ காட்டப்பட்டுள்ளவாறு நேரம்‌ t=0‌ இல்‌ சுழலும்‌ தட்டின்‌ விளிம்பு மீது புறக்கணிக்கத்தக்க கதியில்‌ ஒரு சிலந்தி நிலைக்குத்தாகக்‌ கீழே இறங்கி ஓய்வுக்கு வருகின்றது. நேரம்‌ (t) உடன்‌ தட்டிற்கு மட்டுமான கோண உந்தம்‌ (L) இனதும்‌ கோணக்‌ கதி (ω) இனதும்‌ பருமன்களின்‌ மாறலை மிகச்‌ சிறந்த விதத்தில்‌ வகைகுறிப்பது

a)
b)
c)
d)
e)
35.

சர்வசமத்‌ திணிவுகள்‌ உள்ள A, B, C என்னும்‌ மூன்று பக்கசீரான பொருள்களின்‌ நிலைக்குத்துக்‌ குறுக்குவெட்டுகள்‌ உருவில்‌ காட்டப்பட்டுள்ளன. A ஆனது ஆரை r உடைய ஒரு திண்மக்‌ கோளமாகும்‌. C ஆனது ஆரை r ஐ உடைய, மெல்லிய சுவர்களைக்‌ கொண்டஒரு பொட்‌ கோளமாகும்‌. கோளங்கள்‌ அவற்றின்‌மையங்களினூடாகச்‌ செல்லும்‌ நிலைக்குத்து அச்சுகள்‌ பற்றிச்‌ சுழலத்தக்கனவாகும்‌. B ஆனது ஆரை rஐ உடைய ஒரு தட்டாக இருக்கும்‌ அதே வேளை அது தட்டின்‌ மையத்தினூடாகச்‌ செல்லும்‌ தட்டின்‌ தளத்திற்குச்‌ செவ்வனானஓர்‌ அச்சுப்‌ பற்றிச்‌ சுழலத்தக்கதாகும்‌. எல்லா உருக்களும்‌ ஒரே அளவிடைக்கு வரையப்பட்டுள்ளன. A, B, C ஆகியபொருள்களுக்குச்‌ சம கோணக்‌ கதிகளை அடைவதற்கு வழங்கப்பட வேண்டிய சுழற்சி இயக்கபாட்டுச்‌ சக்திகள்‌ முறையே KEA, KEB, KEC எனின்‌, பின்வரும்‌ கோவைகளில்‌ எது உண்மையானது?

a)

KEA < KEB < KEC

b)

KEC <KEA < KEB

c)

KEC < KEB < KEA

d)

KEA < KEC < KEB

e)

KEA = KEB = KEC

36.

ஒரு நாய்க்குப்‌ பயிற்சியளிப்பதற்குப்‌ பயன்படுத்தப்படும்‌ ஒரு சீழ்க்கைக்‌ குழல்‌ 22 kHz மீடிறனை உருவாக்குகிறது. இது மனிதனின்‌ கேட்டலின்‌ நுழைவாயிலும்‌ கூடியதாகும்‌. நாய்க்குப்‌ பயிற்சியளிப்பவர்‌ சீழ்க்கைக்‌ குழல்‌ தொழிற்படுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. பயிற்சியளிப்பவர்‌ ஒரு நீளமான நேர்‌ வீதிக்கு அருகில்‌ நின்று கொண்டு அவ்வீதியில்‌ செல்லும்‌ ஒரு மோட்டர்க்‌ காரிலிருந்து அச்சீழ்க்கைக்‌. குழலை ஊதுமாறு தனது நண்பர்‌ ஒருவரிடம்‌ கூறுகின்றார்‌. பயிற்சியளிப்பவர்‌ தனது கேட்டலின்‌ நுழைவாய்‌ 20 kHz இல்‌ சீழ்க்கைக்‌ குழலின்‌ ஒலியைக்‌ கேட்பதற்கு மோட்டர்க்‌ காருக்கு இருக்க வேண்டிய கதியும்‌ அதன்‌ இயக்கத்‌ திசையும்‌ முறையே (வளியில்‌ ஒலியின்‌ கதி 340 ms-1 ஆகும்‌

a)

31 ms-1 பயிற்சியளிப்பவரிலிருந்து அப்பால்

b)

32 ms-1 பயிற்சியளிப்பவரிலிருந்து அப்பால்

c)

34 ms-1 பயிற்சியளிப்பவரிலிருந்து

d)

32 ms-1 பயிற்சியளிப்பவரை நோக்கி

e)

34 ms-1 பயிற்சியளிப்பவரை நோக்கி

37.

ஒரு மேசையின்‌ சமதளக்‌ கிடை மேற்பரப்பு மீது வைக்கப்பட்டுள்ள ஒரு கடதாசித்‌ துண்டில்‌ எண்‌ 23 எழுதப்பட்டுள்ளது. ஒரு மெல்லிய குவிவு வில்லை அந்த எண்ணிற்குச்‌ சற்று மேலே பிடிக்கப்பட்டு, பின்னர்‌ அதன்‌ ஒளியியல்‌ அச்சைநிலைக்குத்தாக வைத்துக்‌ கொண்டும்‌ அதனூடாக அந்த எண்ணின்‌ விம்பத்தைப்‌ பார்த்துக்‌ கொண்டும்‌ அது நிலைக்குத்‌தாக மேல் நோக்கி மெதுவாகக் கொண்டு செல்லப்படுகின்றது. வில்லையை எண்‌ 23 இலிருந்து படிப்படியாக மேலே கொண்டு செல்லும்போது அதன்‌ விம்பத்தின்‌ பருமனிலும்‌ வடிவத்திலும்‌ உள்ள மாறலைப்‌ பின்வருவனவற்றில்‌ எது சரியாக வகைகுறிக்கின்றது?

a)
b)
c)
d)
e)
38.

உருவில்‌ காட்டப்பட்டுள்ள தடித்த சுவர்களைக்‌ கொண்ட பொட்‌கண்ணாடி அரியம்‌ முறிவுச்‌ சுட்டி μg ஐக்‌ கொண்ட ஒரு திரவியத்தினால்‌ செய்யப்பட்டுள்ளது. வளியில்‌ செல்லும்‌ ஓர்‌ ஒருநிற ஒளிக்‌ கதிர்‌ PQ ஆனது உருவில்‌ காட்டப்பட்டுள்ளவாறு கண்ணாடி மேற்பரப்பு மீது படுகின்றது.வெளிப்படு கதிரை முறையே X, Y, Z திசைகளில்‌ செல்லச்‌ செய்ய வேண்டுமெனின்‌, முறிவுச்‌ சுட்டி μ ஜ உடைய ஊடுகாட்டும்‌ பாய்மங்களினால்‌ பொட்‌ கண்ணாடி அரியத்தின்‌, குழி முறையே வேறுவேறாக நிரப்பப்பட வேண்டியது

a)

μ < μg, μ = μg, μ > μg ஆக உள்ளபோது

b)

μ > μg, μ < μg, μ = 1 ஆக உள்ளபோது

c)

μ = 1, μ = μg, μ < μg ஆக உள்ளபோது

d)

μ = 1, μ < μg, μ > μg ஆக உள்ளபோது

e)

μ = μg, μ = 1, μ = μg ஆக உள்ளபோது

39.

புதிதாகத்‌ திறக்கப்பட்ட ஒரு விசுக்கோத்துப்‌ பொதியில்‌ உள்ள விசுக்கோத்துகள்‌ ஒரு கொள்கலத்தில்‌ இடப்பட்டுஅது கொள்கலத்தில்‌ வளி உள்ளேயோ வெளியேயோ செல்லாதவாறு ஒரு மூடியினால்‌ இறுக்கமாக மூடப்பட்டது. கொள்கலத்தினுள்ளே தொடக்கத்‌ தொடர்பு ஈரப்பதன்‌ 80% ஆக இருப்பதாகக்‌ காணப்பட்டது. சில நாட்களுக்குப் ‌பின்னர்‌ கொள்கலத்தினுள்ளே தொடர்பு ஈரப்பதன்‌ 30% இற்குக்‌ குறைந்திருப்பதாகவும்‌ விசுக்கோத்துகளின்‌ திணிவு m இனால்‌ அதிகரித்திருப்பதாகவும்‌ காணப்பட்டது. கொள்கலத்தினுள்ளே வெப்பநிலை தொடர்ச்சியாக மாறாமல்‌இருந்தால்‌, தொடக்கத்திலே கொள்கலத்தினுள்ளே இருந்த நீராவியின்‌ திணிவு

a)

5m8\frac{5m}{8}

b)

11m8\frac{11m}{8}

c)

8m5\frac{8m}{5}

d)

5m3\frac{5m}{3}

e)

8m3\frac{8m}{3}

40.

100 oC, 0 0C என்னும்‌ வெப்பநிலைகளில்‌ பேணப்படும்‌ இரு வெப்பத்‌ தேக்கங்களுக்கிடையே -சம நீளமும்‌ சம குறுக்குவெட்டுப்‌ பரப்பளவும்‌ உள்ள வெப்பக்‌ காவலிட்ட நான்கு வெப்பம்‌ கடத்தும்‌ கோல்கள்‌ இணைக்கப்பட்டிருக்கும்‌ விதம்‌ உருவில்‌ காட்டப்பட்டுள்ளது. A ஆனது எப்போதும்‌ மாறா வெப்பநிலை ϴ இல்‌ இருக்கும்‌ ஒரு வெப்பக்‌ காவலிட்ட வெப்பத்‌ தேக்கியாகும்‌. கோல்களின்‌ வெப்பக்‌ கடத்தாறுகள்‌ k1, k2, k3 ஆகியன முறையே 10, 30, 50 Wm-1K-1

a)

90 oC

b)

85 oC

c)

80 oC

d)

75 oC

e)

65 oC

41.

உருவில்‌ காட்டப்பட்டுள்ள நிலைக்குத்துக்‌ குறுக்குவெட்டை உடைய விசேட வடிவத்தைக்‌ கொண்ட ஒரு கண்ணாடிப்‌ போத்தல்‌ ஒரு பெரிய குழியையும்‌ ஆரை r ஐ உடைய ஒரு சிறிய கோளக்‌ குழியையும்‌ நீளம்‌ l / ஐ உடைய, ஆரை குறைந்து செல்லும்‌ ஒர்‌ ஓடுங்கிய குழாயையும்‌ கொண்டுள்ளது. பெரிய குழியின்‌ முழுக்‌ கனவளவும்‌ சிறிய குழியின்‌ கனவளவின்‌ அரைவாசியும்‌ காட்டப்பட்டுள்ளவாறு தொடக்கத்தில்‌ 0 oC இல்‌ உள்ள நீரினால்‌ நிரப்பப்பட்டுள்ளன. போத்தலின்‌ விரிவு புறக்கணிக்கத்தக்கதெனின்‌, மட்டம்‌ XY இலிருந்து அளக்கப்படும்‌ நீர்‌ மேற்பரப்பின்‌ உயரம்‌ (h) ஆனது நீரின்‌ வெப்பநிலை (ϴ) உடன்‌ மாறலை மிகச்‌ சிறந்த விதத்தில்‌ வகைகுறிப்பது

a)
b)
c)
d)
e)
42.

உரு (a) இல்‌ காட்டப்பட்டுள்ள சுற்றில்‌ முறிந்த கோடுகளைக்‌ கொண்ட அடைப்பில்‌ ஒரு தடையி வலையமைப்பு உள்ளது. 2V பற்றரி: புறக்கணிக்கத்தக்க ஓர்‌ அகத்‌ தடையை உடையது. ab‌ இற்குக்‌ குறுக்கே இணைக்கப்பட்ட ஓர்‌ இலட்சிய வோல்ற்றுமானி 1V வாசிப்பைக்‌ கொடுத்தது. வோல்ற்றுமானி ஓர்‌ இலட்சிய அம்பியர்மானியால்‌ மாற்றப் பட்டபோது அது 2mA வாசிப்பைக்‌ காட்டியது. முறிந்த கோடுகளைக்‌ கொண்ட அடைப்பில்‌ உள்ள தடையி வலையமைப்பைத்‌ தருவது?.

a)
b)
c)
d)
e)
43.

காட்டப்பட்டுள்ள சுற்றில்‌ X, Y ஆகியன முறிந்த கோடுகள்‌ உள்ள பெட்டியில்‌ இருக்கும்‌ ஒரு மாறும்‌ வோல்ற்றளவு முதலின்‌ முடிவிடங்களை வகைகுறிக்கின்றன. P ஆனது ஒரு மாறுந்‌ தடையியாகும்‌. D ஆனது ஓர்‌ இலட்சிய இருவாயியாகும்‌. புள்ளி X இல்‌ வோல்ற்றளவு VX இன்‌ பெறுமானம்‌ 0 இலிருந்து 15V இற்குப்‌ படிப்படியாக அதிகரிக்கப்படும்போது பின்வரும்‌ வரைபுகளில்‌ எது XY இன்‌ வலப்‌ பக்கத்தில்‌ சுற்றின்‌ ‌பகுதியில்‌ ஒட்டுமொத்தமான தடை R இன்‌ மாறலைச்‌ சரியாக வகைகுறிக்கின்றது?

a)
b)
c)
d)
e)
44.

உரு (a) .இல்‌ உள்ளவாறு சீரான துளை ஆரையுள்ள ஒரு நீளமான மயிர்த்துளைக்‌ குழாயை அடர்த்தி dw ஐ. உடைய ஒரு நீர்‌ முகவையில்‌ நிலைக்குத்தாக அமிழ்த்தும்போது மயிர்த்துளைக்‌ குழாயில்‌ நீர்‌ நிரல்‌ உயரம்‌ h0 இற்கு எழுகின்றது. இப்போது உரு (b) இல்‌ காட்டப்பட்டுள்ளவாறு முகவையில்‌ உள்ள நீரைக்‌ குழப்பாமல்‌ நீர்‌ மேற்பரப்பு மீது அடர்த்தி d0 (< dw) ஐ உடைய ஓர்‌ எண்ணெய்‌ ஊற்றப்ட எண்ணெயும்‌ நீரும்‌ ஒன்றோடொன்று கலக்காத திரவங்களெனக்‌ கொள்க. நீர்‌ மேற்பரப்பிலிருந்து அளக்கப்படும்‌ மயிரத்துளைக்‌ குழாயில்‌ உள்ள நீர்‌ நிரலின்‌ உயரம்‌ H ஆனது எண்ணெய்ப்‌ படையின்‌ உயரம்‌ h உடன்‌ மாறலை மிகச்‌ சிறந்த விதத்தில்‌ வகை குறிப்பது

a)
b)
c)
d)
e)
45.

மூன்று +q புள்ளி ஏற்றங்களின்‌ ஒரு தனியாக்கிய பரம்பலில்‌ உள்ள ஏற்றங்கள்‌ ஒரு புள்ளி 0 இலிருந்து 2cm, 3cm, 6cm தூரங்களில்‌ உள்ளன. ஒரு புள்ளி ஏற்றம்‌ -q ஐப்‌ புள்ளி O இலிருந்து தூரம்‌ r இல்‌ வைத்த பின்னர்‌ வேறோர்‌ ஏற்றத்தை முடிவிலியிலிருந்து எவ்வேலையையும்‌ செய்யாமல்‌ புள்ளி O இற்குக்‌ கொண்டு வரலாம்‌. r இன்‌ பெறுமானம்‌

a)

1 cm

b)

2 cm

c)

3 cm

d)

4 cm

e)

5 cm

46.

சீரான வலிமையுள்ள ஒரு கயிற்றைப்‌ பயன்படுத்தி இரு குழுக்கள்‌ ஓர்‌ இறுக்கமான கிடைச்‌ சமதள மேற்பரப்பு மீது ஒரு கயிறிழுத்தற்‌ போட்டியை உருவில்‌ காட்டப்பட்டுள்ளவாறு ஆரம்பிக்கின்றன. இரு குழுக்களும்‌ சம விசைகளைப்‌ பிரயோகிக்கும்‌ அதே வேளை அதன்‌ ஒரு விளைவாகக்‌ கயிறு மீது உள்ள புள்ளி 0 இயங்குவதில்லை. இச்சந்தர்ப்பம்‌' பற்றிச்‌ செய்யப்பட்டுள்ள பின்வரும்‌ கூற்றுகளைக்‌ கருதுக.

(A) இரு குழுக்களினதும்‌ உறுப்பினர்கள்‌ ஒவ்வொருவரும்‌ கயிறு மீது ஒரே விசையைப்‌ பிரயோகித்தால்‌, கயிற்றின்‌ வழியே எங்கணும்‌ இழுவையின்‌ பருமன்‌ சமமாகும்‌.

(B) கயிறு மீது உள்ள இழுவையின்‌ பருமன்‌ அதன்‌ அறும்‌ இழுவைக்கு மேற்படுமெனின்‌, கயிறு P இற்கும்‌ Q இற்குமிடையே உள்ள ஒரு புள்ளியில்‌ மாத்திரம்‌ அறும்‌.

(C) நபர்‌ ஒருவரினால்‌ கயிறு மீது பிரயோகிக்கத்தக்க உயர்ந்தபட்ச விசையின்‌ பருமன்‌ அந்நபரின்‌ பாதத்திற்கும்‌ மேற்பரப்புக்குமிடையே உள்ள நிலையியல்‌ உராய்வுக்‌ குணகத்தைச்‌ சார்ந்திருக்கும்‌.

மேற்குறித்த கூற்றுகளில்‌

a)

A மாத்திரம்‌ உண்மையானது

b)

B மாத்திரம்‌ உண்மையானது

c)

A, B ஆகியன மாத்திரம்‌ உண்மையானவை

d)

B, C ஆகியன மாத்திரம்‌ உண்மையானவை

e)

A, B, C ஆகிய எல்லாம்‌ உண்மையானவை

47.

ஒரே திரவியத்தினால்‌ செய்யப்பட்ட சர்வசமப்‌. பரிமாணங்கள்‌ உள்ள மூன்று சீரான மரச்‌ சதுரமுகிகளையும்‌ மூன்று சீரான சர்வசம உலோகச்‌ சதுரமுகிகளையும்‌ பயன்படுத்திச்‌ செய்யப்பட்ட (A), (B), (C) என்னும்‌ மூன்று பொருள்கள்‌ உருவில்‌ காட்டப்பட்டுள்ளன. (A), (B) ஆகியவற்றில்‌ உலோகச்‌ சதுரமுகிகள்‌ முறையே மரச்‌ சதுரமுகிகளின்‌ மேலேயும்‌ கீழேயும்‌ ஒட்டப்பட்டுள்ளன. (C) இல்‌ உலோகச்‌ சதுரமுகி உருவிற்‌ காட்டப்பட்டுள்ளவாறு மரச்‌ சதுரமுகியில்‌ பதிக்கப்பட்டுள்ளது. (A), (B), (C) ஆகிய மூன்று பொருள்களும்‌ இப்போது ஒரு நீர்த்‌ தடாகத்தில்‌ மெதுவாகத்‌ தாழ்த்தப்பட்டு அவற்றின்‌ திசையமைவை மாற்றாது நிலைக்குத்‌ மிதக்குமாறு செய்யப்படுகின்‌றன. மரக்‌ குற்றிகள்‌ நீரில்‌ அமிழும்‌ ஆழங்கள்‌ முறையே HA, HB, HC எனின்‌, பின்வரும்‌ தொடர்புடைமைகளில்‌ எது உண்மையானது?

a)

HA > HB > HC

b)

HA = HB > HC

c)

HA = HB = HC

d)

HC > HB > HA

e)

HA > HC > HB

48.

உருவில்‌ காட்டப்பட்டுள்ளவாறு கடதாசியின்‌ தளத்திற்குச்‌ செங்குத்தாக உள்ள ஒரு முடிவின்றி நீண்ட மெல்லிய நேர்க்‌ கம்பி கடதாசிக்குள்ளே O இல்‌ ஓர்‌ ஓட்டம்‌ I ஐக்‌ கொண்டு செல்கின்றது. மையம்‌ புள்ளி O இல்‌ உள்ளதும்‌ ஆரை r ஐ உடையதுமான ஒரு வட்டத்தின்‌ பரிதியில்‌ தாங்கப்பட்டுள்ள மேற்குறித்த கம்பிக்குச்‌ சமாந்தரமான முடிவின்றி நீண்ட வேறு ஒன்பது ஒத்த கம்பிகள் ஒவ்வொன்றும்‌ கடதாசிக்குள்ளே ஓர்‌ ஓட்டம்‌ I ஐக்‌ கொண்டு செல்கின்றன. A, B ஆகிய கம்பிகளைத்‌ தவிர எவையேனும்‌ இரு அடுத்துள்ள கம்பிகளுக்கிடையே உள்ள கோண வேறாக்கம்‌ உருவிற்‌ காட்டப்பட்டுள்ளவாறு  30o30^o   ஆகும். ஏனைய கம்பிகள்‌ காரணமாக மையம்‌ O இல்‌ தாங்கப்பட்டுள்ள கம்பியின்‌ ஓரலகு நீளத்தின்‌ மீது உள்ள காந்த விசையின்‌ பருமனும்‌ திசையும்‌ முறையே (COS  30o30^o    =  32\frac{\sqrt{3}}{2}   எனக்‌ கொள்க)

a)

 μo I22πr \frac{\mu_{o\ I}2}{2\pi r}\    (1+3)\left(1+\sqrt{3}\right)   , YO இன்‌ திசையில்

b)

   μoI22πr(1+3)\frac{\mu_oI^2}{2\pi r}\left(1+\sqrt{3}\right)  , OY இன்‌ திசையில்

c)

 μoI2πr(1+3)\frac{\mu_oI^2}{\pi r}\left(1+\sqrt{3}\right) , OY இன்‌ திசையில்

d)

 μoI22r(1+3)\frac{\mu_oI^2}{2r}\left(1+\sqrt{3}\right)  OX இன்‌ திசையில்

e)

 3μoI22πr\frac{3\mu_oI^2}{2\pi r}  YO இன்‌ திசையில்

49.

ஒரு தனியாக்கிய உலோக அச்சாணி PQ ஐக்‌ கொண்ட உரு (a) இற்‌ காட்டப்பட்டுள்ள ஒரு பொம்மைக்‌ கார்‌ zx தளத்தில்‌ . ஒரு சைன்வளையிப்‌ பாதை வழியே ஒரு மாறாக்‌ கதி v உடன்‌ உரு (b) இற்‌ காட்டப்பட்டுள்ளவாறு செல்கின்றது. நேரம்‌ t=-0 இல்‌ அச்சாணி PQ ஆனது y அச்சுடன்‌ பொருந்துகின்றது. பாய அடர்த்தி B ஐ உடைய ஒரு சீரான காந்தப்‌ புலம்‌ xy தளத்திற்குச்‌ செவ்வனாக +z திசையில்‌ பிரதேசம்‌ எங்கணும்‌ இருப்பின்‌, நேரம்‌ (t) உடன்‌ முனை Q ஐக்‌ குறித்து அச்சாணியின்‌ முனை P இல்‌ தூண்டிய மி.இ.வி. (e) இன்‌ மாறலை மிகச்‌ சிறந்த விதத்தில்‌ வகைகுறிப்பது (புவிக்‌ காந்தப்‌ புலத்தினாலான

விளைவு புறக்கணிக்கத்தக்கது)

a)
b)
c)
d)
e)
50.

A, B, C, D ஆகியன கடதாசியின்‌ தளத்திற்குச்‌ செவ்வனாக வைக்கப்பட்டுள்ள நான்கு சமாந்தரமான சர்வசமச்‌ செவ்வக உலோகத்‌ தகடுகளின்‌ நிலைக்குத்துக்‌ குறுக்குவெட்டுகளை வகைகுறிக்கின்றன A, B, C, D ஆகிய தட்டுகள்‌ ஒவ்வொன்றும்‌ அதன்‌ மையத்தில்‌ ஒரு சிறிய துளையைக்‌ கொண்டுள்ளன. மூன்று தட்டுகளும்‌ அவற்றின்‌ துளைகள்‌. உரு (a) இற்‌ காட்டப்பட்டுள்ளவாறு ஓரச்சில்‌ இருக்கத்தக்கவாறு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. தட்டு A புவியுடன்‌ தொடுக்கப்பட்டு முழுத்‌ தொகுதியும்‌ ஒரு வெற்றிடத்தில்‌ வைக்கப்பட்டுள்ளது. காட்டப்பட்டுள்ளவாறு துளைகளினூடான அச்சு மீது தானம்‌ o இலே நேரம்‌ t=0இல்‌ ஒரு நிலையான இலத்திரன்‌ உருவாக்கப்படுகின்றது. இலத்திரனிற்கு உரு (b) இல்‌ காட்டப்பட்டுள்ள வேக (v) - நேர (t) வளையியைப்‌ பெறுவதற்காகத்‌ தகடுகளுக்கு VB, VC, VD ஆகிய வோல்ற்றளவுகளில்‌ எந்த வோல்ற்றளவைப்‌ பிரயோகிக்க வேண்டும்‌? (தரப்பட்ட வோல்ற்றளவுகள்‌ செய்முறையாகப்‌ பயன்படுத்துவதற்கு உகந்தன எனவும்‌ ஓர விளைவுகளும்‌ ஈர்ப்பு விளைவுகளும்‌ புறக்கணிக்கப்படத்தக்கன எனவும்‌ கொள்க)

a)

(1)

b)

(2)

c)

(3)

d)

(4)

e)

(5)

Similar Resources on Wayground