wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயக்கம்

Total questions: 10

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

படத்தில் உள்ள சக்கரத்தின் இயக்கம் எத்தகையது?

a)

நேர்க்கோட்டு இயக்கம்

b)

அலைவு இயக்கம்

c)

சுழற்சி இயக்கம்

d)

சீரற்ற இயக்கம்

2.

மகிழுந்து ஒன்று அட்டவணையில் உள்ளவாறு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட தூரத்தைக் கடக்கிறது எனில் கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றுக்களைத் தேர்வு செய்க.

a)

மகிழுந்து, சமகால இடைவெளியில் சம தொலைவைக் கடக்கிறது

b)

மகிழுந்தின் திசைவேகத்தில் மாற்றம் இல்லை

c)

மகிழுந்து சீரான திசைவேகத்தில் செல்கிறது

d)

மகிழுந்தின் இயக்கம் சீரற்ற இயக்கம் ஆகும்

3.

குறிப்பிட்ட கால இடைவெளியில் பொருள் தொடர்ந்து ஒரே இடத்தில் இருந்தால், பொருளானது

a)

இயக்கத்தில் இருக்கும்

b)

ஓய்வில் உள்ளது

c)

இயக்க ஆற்றல் குறைவு

d)

மேற்கண்ட எதுவுமில்லை

4.

ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் மீண்டும் தொடரும் இயக்கம்

a)

நேர்க்கொட்டு இயக்கம்

b)

அலைவு இயக்கம்

c)

சுழற்சி இயக்கம்

d)

சீரான இயக்கம்

5.

கடிகார முள்ளின் இயக்கம்

a)

வட்ட இயக்கம்

b)

சீரான இயக்கம்

c)

சீரற்ற இயக்கம்

d)

அலைவு இயக்கம்

6.

ஒரு பொருள் 16 மீ தொலைவை 3 வினாடியிலும்

மே லும் 16 மீ தொலைவை 5 வினாடியிலும் கடக் கிறது. அப்பொருளின் சராசரி வேகம் என்ன?

a)

3 மீ/வி

b)

5 மீ/வி

c)

4 மீ/வி

d)

8 மீ/வி

7.

5 மீ/வி திசைவேகத்தில் செல்லும் பொருள் ஒன்று 5 வினாடிகள் கழித்து 10 மீ/வி திசைவேகத்திலும், மேலும் 5 வினாடிக்குப் பின் 15 மீ/வி திசைவேகத்திலும் செல்கிறது எனில் அப்பொருளானது... (சரியான அனைத்தையும் தேர்ந்தெடு)

a)

நேர் முடுக்கம் அடைகிறது

b)

சீரான முடுக்கம் அடைகிறது

c)

எதிர் முடுக்கம் அடைகிறது

d)

சீரற்ற இயக்கத்தில் செல்கிறது

8.

காலம்-தொலைவு வரைபடத்தில் நேர்கோட்டின் சாய்வு x-அச்சை நோக்கி செல்கிறது எனில் பொருளானது

a)

அதிக வேகம் கொண்டது

b)

ஓய்வுநிலையில் உள்ளது

c)

குறைவான வேகம் கொண்டது

d)

எதுவும் இல்லை

9.

மேல்நோக்கி செங்குத்தாக எறியப்பட்ட பொருளானது பெரும உயரத்தை அடையும் போது அதன் முடுக்கம்

a)

நேர்முடுக்கம்

b)

எதிர்முடுக்கம்

c)

புவியீர்ப்பு முடுக்கத்திற்கு சமமானது

d)

முடுக்கத்தின் மதிப்பு சுழியாகும்

10.

துணி துவைக்கும் இயந்திரத்தில் உள்ள துணி உலர்த்தியில் செயல்படும் விசை

a)

புவியீர்ப்பு விசை

b)

மின் விசை

c)

மைய நோக்கு விசை

d)

மைய விலக்கு விசை