Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி (புறவினா கேள்விகள்)

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1 ‘கொவிட்19’ பெருந்தொற்றுக் காரணமாக மூடிக்கிடந்த பள்ளிகள் திறக்கப்பட்டவுடன் அடங்கிக்கிடந்த பள்ளி மாணவர்கள் _____ வென துடிப்புடன் செயல்படத் தொடங்கினர்.

a)

சிலுசிலு

b)

துருதுரு

c)

திமுதிமு

d)

தளதள

2.

2. பின்வரும் வாக்கியங்களில் இரட்டைக்கிளவியின் சரியான பயன்பாட்டைக் கொண்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

ஈழவேந்தன் ஐந்தாண்டுகளில் வெடவெடவென வளர்ந்து தன் தந்தையைவிட உயரமாக நின்றான்.

b)

தேர்வின்போது தன் தோழியைப் பார்த்து விடை எழுதிய வேல்விழியாள், ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டதும் பயத்தால் வெடவெடவென நடுங்கினாள்.

c)

சமீப காலமாகக் காய்கறிகளின் விலை வெடவெடவென ஏற்றம் கண்டு வருவதால் மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

d)

மழையில் விளையாடிக்கொண்டிருந்த சோழன் தந்தையைக் கண்டதும் வெடவெடவென வீட்டினுள் ஓடினான்.

3.

3 பேரங்காடியில் பொருள்கள் மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட உள்ளன என்பதைக் கேள்விபட்ட பொதுமக்கள் கூடல் இடைவெளியையும் பொருட்படுத்தாமல் ____________ வென அப்பேரங்காடியின் முன் கூடினர்.

a)

திமுதிமு

b)

விறுவிறு

c)

பரபர

d)

கிடுகிடு

4.

4 பொதுமுடக்கக் காலக்கட்டதில் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் கிடைப்பதில் _________ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியுடன் செயல்பட்டது.

a)

உயர்வு தாழ்வு

b)

ஈடு இணை

c)

தங்கு தடை

d)

கள்ளங் கபடு

5.

5 இன்றைய இக்கட்டான நிலையில் ________ பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிவிடக் கூடாது என்பதற்காகப் பிரதமர் பல ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்துள்ளார்.

a)

சீரும் சிறப்பும்

b)

உயர்வு தாழ்வு

c)

நோய் நொடி

d)

ஏழை எளியவர்

6.

6 நோய்த் தொற்று எண்ணிக்கையில் மிகவும் குறைந்து காணப்படுவதை நாம் __________

கொண்டாடுவதை விடுத்துத் தொற்றே இல்லை என்ற நிலையை உருவாக்குவதற்கு அரசாங்கத்துடன் ஒத்துழைக்க வேண்டும்.

a)

வாடி வதங்கி

b)

ஆடிப்பாடி

c)

நாணிக் கோணி

d)

உள்ளும் புறமும்

7.

7 கீழ்க்காணும் உவமைத்தொடர்களில் பொருந்தாதப் பொருளைக் கொண்டுள்ள இணையைத் தெரிவு செய்க.

a)

மலரும் மணமும் போல

சேர்ந்தே இருத்தல்

b)

இலவு காத்த கிளி போல

காத்திருந்து ஏமாற்றமடைதல்

c)

மணியும் ஒலியும் போல

இணைந்தே இருப்பது

d)

அழகுக்கு அழகு செய்வது போல

அழகான ஒன்றுக்கு மேலும் அழகு சேர்க்காமை

8.

8 கீழ்க்காணும் பொருளுக்கேற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.


மிகவும் தெளிவாகத் தெரிதல்

a)

தூண்டில்காரனுக்குத் தக்கை மேல் கண் போல

b)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

c)

உள்ளங்கை நெல்லிக்கனி போல

d)

புற்றீசல் போல

9.

9. கீழ்க்காணும் செய்திக்கு ஏற்ற உவமைத்தொடரைத் தெரிவு செய்க.

சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களைக் கடத்தி வந்தது தொடர்பில் இரு குடிநுழைவுத்துறை அதிகாரிகள் உட்பட மூவர் மீது நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

-தமிழ்மலர் 17.7.2020

a)

இலைமறை காய் போல

b)

ஊமை கண்ட கனாப் போல

c)

வேலியே பயிரை மேய்ந்தாற்போல

d)

பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல

10.

10 நோய்த்தொற்றுப் பரவலைத் தடுக்க பொது இடங்களில் இருக்கும்போது முகக்கவரி அணியாமல் இருப்பது குற்றம் என்ற போதிலும் சிலர் அதனைக் கடைப்பிடிக்காமல் _________________ பயமின்றி நடமாடி வருகின்றனர்.

a)

வாழையடி வாழையாக

b)

எள்ளளவும்

c)

அளவளாவி

d)

தோள் கொடுத்து

11.

11 பின்வருவனவற்றுள் மரபுத்தொடர் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ள வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

வெளிநாட்டில்தான் மேற்படிப்புப் படிப்பேன் என்ற தன் எண்ணத்தில் உடும்புப் பிடியாக இருந்தாள் யாழ்மொழி.

b)

தன் மகள் யாழ்மொழி வெளி நாட்டில் மேற்படிப்புப் படிப்பதற்காகத் தன் வீடு வாசல்களை விற்க எண்ணினார் மலர்வேந்தன்.

c)

வெளிநாட்டில் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்ற யாழ்மொழியின் எண்ணம் தந்தையின் இறப்பால் அரைப்படிப்பாகிவிட்டது.

d)

யாழ்மொழியின் வெளிநாட்டில் மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்ற அண்ணன் மாமல்லன் தோள் கொடுப்பதாக உறுதியளித்தார்.

12.

12 கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற மரபுத்தொடரைத் தெரிவு செய்க.


ஔவையாரின் தமிழ்த் தொண்டிற்கும் கவிப்ப்புலமைக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவருக்கு ஆயுளைப் பெருக்கும் அரிய வகை நெல்லிக்கனியைப் பரிசளித்தான் மன்னன் அதியமான்.

a)

வெட்டிப் பேச்சு

b)

தலை வணங்குதல்

c)

இடித்துரைத்தல்

d)

உச்சிக் குளிர்தல்

13.

13 கீழ்க்காணும் படங்களுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.

a)

கண்டதைக் கற்றப் பண்டிதனாவான்

b)

இளமையிற் சோம்பல் முதுமையில் மிடிமை

c)

ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு

d)

ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

14.

14 கீழ்க்காணும் சூழலுக்கு ஏற்ற பழமொழியைத் தெரிவு செய்க.


நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதித்து ஏற்ற மருந்தை உட்கொள்வதே சாலச் சிறந்து. அதைவிடுத்து, புலனத்தில் வரும் மருத்துவக் குறிப்புகளை எந்த ஒரு தெளிவுமில்லாமல் தயாரித்து உட்கொள்வது உயிருக்கு ஆபத்தாக முடியும்.

a)

எறும்பு ஊரக் கல்லும் தேயும்

b)

அற்ப அறிவு ஆபத்துக்கிடம்

c)

அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வராது

d)

பெற்ற மனம் பித்து பிள்ளை மனம் கல்லு

15.

17 கீழ்க்காணும் திருக்குறளின் கருத்தைத் தெரிவு செய்க.


இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்

a)

ஒருவரின் திறமையறிந்து அதற்கேற்ற பணியை அவரிடம் கொடுக்க வேண்டும்

b)

ஒருவரின் பணியை அறிந்து அதற்கேற்ப அவரின் திறமையை அறிய வேண்டும்

c)

“இந்தப் பணியைச் செய்து முடிப்பேன்,” என்று கூறுபவரிடம் திறமை இருக்கும்

d)

ஒரு பணியைச் செய்து முடிக்கத்தக்கவனிடமே திறமையுள்ளதாகக் கருதலாம்.